Skip to main content

Posts

நண்ணு முகவடிவு

பாரதி எழுதிய 'கண்ணன் என் காதலன்' பாடலை வெவ்வேறு குரல் வடிவங்களில் கேட்டிருக்கிறேன். டி.கே ஜெயராமன் முதல் கார்த்திக் வரை பாரதியின்  மொழியைப் பாடிவிட்டார்கள். அவற்றில் பின்னணிப் பாடகியான சுசித்ராவின் குரலும்,  அதனை அவர் பாடிய விதமும்  மிகவும் வசீகரமானது. தமிழ் உச்சரிப்பின் தெளிவு, அழுத்தம், உறுதி  எல்லாம்  அத்தனை அழகு.அவன் மொழியைச் சந்தேகமாகப் பாடினாலே அழகு சிதைந்துவிடும். எழுத்தில் மட்டுமல்லாது, இசையோடு நெகிழ்ந்துகொடுக்கும்போதும் தமிழ்ச் சொற்களின்  வளைவுகள் எல்லாம் அழகு. அதிலும்  'சொற்தேர்வு' என்று வரும்போது   பாரதியை மிஞ்ச வேறொருவரும் இல்லை. அதைப் பிரதியீடு செய்யவோ, உடைக்கவோ முயன்றால் தோல்விதான். சுசித்ராவைத் தவிர  பலரும் "ஆரிடம்" என்பதை "யாரிடம்" என்று பாடிவைக்கிறார்கள். "நண்ணு முகவடிவு" என்று உச்சரிக்கிறபோதே கற்பனை பயனுறுகிறது. ஒரு பெண்ணினுடைய துயரமாக இருந்தாலும் இதில் காதலின் இன்பமான துன்பமும், இழந்த இனிமையும்  இழையோடுகிறது. சில நினைவுகள் பரிணமிக்கும்போதேல்லாம் இதைக் கேட்பதுண்டு. பெண்களினிடத்திலிது போலே -- ஒரு பேதையை மு...

புத்தகங்கள் 5/36 [2015] Business Model Generation

வளர்ந்துவருகிற தொழில்நுட்பம் காரணமாகப்  புத்தகங்கள் தமது இருப்பினைத் தொலைத்துவிடும் என்பதே பலரதும் எண்ணம். தொழில்நுட்ப வளர்ச்சியில் சில விடயங்கள் பிரதியீடாகவும் சில விடயங்கள் மெருகேறிக்கொண்டும் வருகின்றன. புத்தகங்களை இரண்டாவது வகையில்தான் இணைத்துக்கொள்ளவேண்டும். அதாவது, மாற்றமடைந்து  வருகிற விடயங்களின் பட்டியலில் சேர்த்துக்கலாம். புத்தகங்களின் எதிர்காலம் பற்றிய விடயத்தில், அமெரிக்காவினைச் சேர்ந்த Brian Dettmer என்பவரின் கருத்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டியது. புகைப்படத் தொழில்நுட்பமும் அச்சுத் தொழில்நுட்பமும் முன்னேறியபோது ஓவியங்கள் அழிந்துவிடும் என்பதே பலருடைய கருத்தாக இருந்தது. ஆனால் ஓவியங்களோ தம்மை  அன்றாடப் பயன்பாட்டிலிருந்து விடுவித்துக்கொண்டன.  கிட்டத்தட்ட அதனை ஒரு விடுதலை என்றே சொல்லவேண்டும். தனக்கென ஒரு சுயமான கௌரவத்தோடு ஓவியங்கள் வேறு வடிவங்களையும் நிலைகளையும் தொட்டன. அதே நிலையில்தான் புத்தகங்களும் இருக்கின்றன என்பதே அவருடைய கருத்து.  ' Business Model Generation' என்கிற புத்தகத்தை ஒரு நவீன புத்தக வடிவமைப்பு என்று சொல்லலாம் . அதன் வட...

எப்போதும் பெண் 4/36 [புத்தகங்கள் 2015]

ஒரு ஆணினுடைய பார்வையில், சொட்டுச் சொட்டாய் உயிர்பெறும்  பெண்மையின் துல்லியமான உணர்வுகளைப் படிப்பதென்பது தமிழ்ச் சூழலில் எப்போதேனும் ஒருமுறை நிகழ்கிற விஷயம். ஒரு பெண்ணினுடைய விரகதாபத்தை வெளிப்படுத்தும் புதுமைப்பித்தனின் 'வாடாமல்லிகை', 'கல்யாணி' மாதிரியான கதைகள், வைரமுத்துவின் கவிதைகள் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் ஒரு பெண்ணினுடைய வாழ்வினை முழுவதுமாகப் பதிவுசெய்கிற தமிழ் நாவல்களைக் காண்பது அரிது.  சுஜாதா தன்னுடைய "எப்போதும் பெண்" என்கிற நாவலில் ஒரு பெண்ணினுடைய பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூடிய விடயங்களைப் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்.  ஒரு பெண்ணானவள் எப்படி வளரவேண்டும் என்பதை ஒரு சமூகம் எப்படி முன்கூட்டியே நிர்ணயித்து வைத்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கிறார். அந்தத் தீர்மானத்தின் வழியிலேயே இந்தப் புத்தகத்தில் வருகிற பெண்ணும் பிறந்து வளருகிறாள். பிரான்ஸ்ஸினைச் சேர்ந்த  பெண் எழுத்தாளரான  Simone de Beauvoir என்பவரின் "The Second Sex" என்கிற பிரபலமான புத்தகத்தை உதவியாகக் கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியதாக சுஜாதா கூறுக...

தோட்டியின் மகன் - 3 / 36 ~ [புத்தகங்கள்2015]

"கன்னடத்தில் சிவராம காரந்தும் மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையும் இயல்புவாதத்தை முழுக்கமுழுக்க ஓர் இந்தியவகை அழகியலாக உருவாக்கிய மேதைகள் என்று சொல்லலாம்." - தகழி சிவசங்கரப்பிள்ளை பற்றி எழுத்தாளர் திரு.ஜெயமோகன்  இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்து மூன்று புத்தகங்களைப் படித்துமுடிக்க இயலுமானதாக இருந்தது. வேலை, கல்வி, மேலதிக வாசிப்பு மற்றும் இதரவேலைகளுக்கும் நடுவில் இதுவொரு நல்ல எண்ணிக்கை என்றே எனக்குத் தோன்றுகிறது.  இறுதியாக, தகழி சிவசங்கரப்பிள்ளை என்பவர் எழுதிய மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'தோட்டியின் மகன்' என்கிற நாவலைப் படித்துமுடித்தேன். 1946 இல் எழுதப்பட்ட இந்த நாவலை சுந்தர ராமசாமி அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்திருந்தார். எப்போதோ மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு இருந்தாலும், அதன் முதற் பதிப்பை 2000ஆம் ஆண்டில்தான் நாவலாக உருக்கொடுத்து வெளியிடமுடிந்திருக்கிறது. ஒரு நல்ல இலக்கியத்தைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுவந்த பெருமை சுந்தர ராமசாமியையே சாரும்.    எந்த இலக்கியவாதிகளாலும் பேசப்படாத  தோட்டியினுடையை வாழ்க்கையை ஒரு இலக்கியமாக வடித்...

கோபல்ல கிராமம் 2/36 [புத்தகங்கள்2015]

சொற்களுக்கிடையேயான இடைவெளிகள், அவை ஒவ்வொன்றும் வந்துவிழும் போக்கு, ஒலிநயம் போன்றவை  வாசிப்பிற்கு அர்த்தம் சேர்க்கப் போதுமான காரணிகளில் சில எனலாம். கி. ராஜநாராயணனின் எழுத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிற வேலையை மட்டுமே "கோபல்ல கிராமம்" என்கிற அவரது நாவல் செய்தது. மிகுதியை அவரின் கதை சொல்லும் முறையும், ஒரு கதை சொல்லியைக் கையாள்கிற லாவகமுமே மேற்கொண்டது.  கணவனோடு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வருகிற பெண்ணோடு  ஆரம்பிக்கிற கதை, பிரிட்டிஷ் மகாராணியின் நேரடி ஆட்சியின்  கீழ் இந்தியா கொண்டுவரப்படும் காலம்வரை நீள்கிறது.  அப்போதைய காலங்களில் கிராமங்களில்  நிலவிய நம்பிக்கைகள், ஆட்சி முறைகள், மனித உணர்வுகள், வட்டாரா மொழிகள் என அனைத்தையும் உள்வாங்கி வைத்திருக்கிறது இந்தக் கோபல்ல கிராமம். எழுத்தில் இருக்கும் இரசனைத்தன்மையை அனுபவிக்கிற அனிச்சையான 'அந்த' நிகழ்தலை எல்லா எழுத்துகளும் நிகழ்த்துவதில்லை. சாதாரண கிராம மக்களின் அன்றாடச்  செயற்பாடுகளை  விபரிக்கிற விதம்  அழகு. தொடுக்கப்படுகிற வசனங்களின் தொடர்ச்சியான அழகியல் அழகு. ஒரு நிறைவான வாசிப...

புத்தகங்கள் : இளமையில் கொல் 1/36 [புத்தகங்கள் 2015]

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் முதலாவதாக வாசிப்புக்குட்படுத்திய நூல், சுஜாதாவின் "இளமையில் கொல்." 'இளமையில் கல்' என்கிற ஔவையின் ஆத்திசூடியின் நினைவு தோன்றலாம். சுஜாதாவிடமிருந்து ஆரம்பிப்பதில் ஒரு திருப்தியும் புத்துணர்வும் கிடைப்பதுண்டு. அதேபோல சென்ற ஆண்டின் இறுதியும் சுஜாதாவின் உள்ளம் துறந்தவனோடு நிறைவடைந்தது. ராஜி என்கிற இளைஞன் , தனது வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்களால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நண்பனுக்கு எதிராக பொய் சாட்சி சொல்லுவதற்காக கூண்டில் ஏறுகிறான். அதன் தொடர் விளைவுகளால் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இப்படியானதொரு நெருக்கடியான சூழ்நிலையில் குடும்பங்களாலும் சுற்றியிருப்பவர்களாலும் கைவிடப்பட்டு பந்தாடப்படும் ஒருவனைப் பற்றிய கதை. இது சுஜாதா அவர்களினால் 1987 ல் எழுதப்பட்டது. அப்போதும் வேகத்துக்குக் குறைவில்லை என்றாலும் சுஜாதாவின் மற்றைய நாவல்கள் அளவுக்குத் திருப்திப்படுத்தவில்லை. இருந்தாலும் சுஜாதாக்கே உரிய  ஸ்டைல் இருப்பதால் சலிப்பூட்டவில்லை.  ஒரு கதைசொல்லியை நேர்த்தியாய்ப்  படைப்பது ஒரு கலை. ...

சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள் 2

'சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள்' என்ற முதலாவது பதிவு பொதுவானதாக அமைந்திருந்தது.  மேலும் சில உதாரணங்கள், காரணங்களோடு, 'உள்ளம் துறந்தவன்' நாவலை முன்னிலைப்படுத்தி இரண்டாவது பதிவு.. *********************************************************************************  எதிர்பாராத தன்மைதான் அவள் சிறப்பம்சம். இத்தனைக்கும் அழகி என்று உடனே சொல்லிவிடமுடியாது. பத்து நிமிஷம் உற்றுப் பார்த்துப் பேசினால் அவள் உண்மை அழகு புலப்படும். உயரமும் இல்லாமல் குள்ளமும் இல்லாமல் கச்சிதமான உடலமைப்பு. இடக்கைப் பழக்கம், aquiline nose (டிக்க்ஷனரியைப் பாருங்கள்). எல்லாவற்றிலும் ஓரளவுக்கு ஆர்வம். எதில் ஆர்வம் என்பது தினம் தினம் மாறும். ஒருநாள் இகேபானா, ஒருநாள் கர்நாடக சங்கீதம், ஒருநாள் சூடான் நாட்டு பட்டினிக் குழந்தைகள். - சுஜாதா (உள்ளம் துறந்தவன்) மில்லியன் யூரோக்கள் பெறுமதியான தொழில் நிறுவனக் குழுமத்தின் உரிமையாளர் ராகவேந்தர். அவரின்  அன்பிற்குரிய வளர்ப்பு மகள் மஞ்சரி. அந்நிறுவனத்தின் பெரும்பாலான ஷெயார்களை அவள் பேரிலேயே எழுதி வைத்துவிட்டார். ஏழையான அழகேசன் என்பவனைக் காதலிக்கிறாள்.  இந...