Skip to main content

எப்போதும் பெண் 4/36 [புத்தகங்கள் 2015]

ஒரு ஆணினுடைய பார்வையில், சொட்டுச் சொட்டாய் உயிர்பெறும்  பெண்மையின் துல்லியமான உணர்வுகளைப் படிப்பதென்பது தமிழ்ச் சூழலில் எப்போதேனும் ஒருமுறை நிகழ்கிற விஷயம். ஒரு பெண்ணினுடைய விரகதாபத்தை வெளிப்படுத்தும் புதுமைப்பித்தனின் 'வாடாமல்லிகை', 'கல்யாணி' மாதிரியான கதைகள், வைரமுத்துவின் கவிதைகள் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் ஒரு பெண்ணினுடைய வாழ்வினை முழுவதுமாகப் பதிவுசெய்கிற தமிழ் நாவல்களைக் காண்பது அரிது.

 சுஜாதா தன்னுடைய "எப்போதும் பெண்" என்கிற நாவலில் ஒரு பெண்ணினுடைய பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூடிய விடயங்களைப் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்.  ஒரு பெண்ணானவள் எப்படி வளரவேண்டும் என்பதை ஒரு சமூகம் எப்படி முன்கூட்டியே நிர்ணயித்து வைத்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கிறார். அந்தத் தீர்மானத்தின் வழியிலேயே இந்தப் புத்தகத்தில் வருகிற பெண்ணும் பிறந்து வளருகிறாள்.

பிரான்ஸ்ஸினைச் சேர்ந்த  பெண் எழுத்தாளரான  Simone de Beauvoir என்பவரின் "The Second Sex" என்கிற பிரபலமான புத்தகத்தை உதவியாகக் கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியதாக சுஜாதா கூறுகிறார். The second sex புத்தகத்தில் உள்ளதைப் போலவே இந்தப் புத்தகத்தையும் பிரதானமாக முக்கியமான பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒரு பெண் என்பவளை  எந்த விடயம்  தீர்மானிக்கிறது என்கிற உயிரியல் தகவல்களுடன் இந்தப் புத்தகம் ஆரம்பமாகிறது. அதன் பின்னர் இரண்டாவதாக, ஒரு பெண் எதிர்கொள்ளும் பருவமாற்றங்களையும் அந்தரங்கமான விஷயங்களையும் பதிவுசெய்கிறது. இறுதியாக, ஒரு பெண்ணை இந்தச் சமூகம் அவளுக்கென நிர்ணயித்து வைத்துள்ள இடத்திற்கே மீண்டும் மீண்டும் கொண்டுவருகிறது என்பதைப் பதிவு செய்கிற நாவல்.

பெண்களுக்கும் உணர்வுகள் இருக்கிறது என்கிற உண்மையை  மதிக்கவேண்டிய கட்டாயத்தன்மையை உணருவதற்காகவேனும் அனைவரும்  படிக்கவேண்டிய புத்தகம். குறிப்பாகப் பழமைவாதச் சிந்தனை உள்ள பெண்களும் இந்தப் புத்தகத்தைக் கட்டாயமாக வாசிக்கவேண்டும்.





Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...