இந்த வருடத்தின் ஆரம்பத்தில் முதலாவதாக வாசிப்புக்குட்படுத்திய நூல், சுஜாதாவின் "இளமையில் கொல்." 'இளமையில் கல்' என்கிற ஔவையின் ஆத்திசூடியின் நினைவு தோன்றலாம். சுஜாதாவிடமிருந்து ஆரம்பிப்பதில் ஒரு திருப்தியும் புத்துணர்வும் கிடைப்பதுண்டு. அதேபோல சென்ற ஆண்டின் இறுதியும் சுஜாதாவின் உள்ளம் துறந்தவனோடு நிறைவடைந்தது.
ராஜி என்கிற இளைஞன் , தனது வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்களால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நண்பனுக்கு எதிராக பொய் சாட்சி சொல்லுவதற்காக கூண்டில் ஏறுகிறான். அதன் தொடர் விளைவுகளால் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இப்படியானதொரு நெருக்கடியான சூழ்நிலையில் குடும்பங்களாலும் சுற்றியிருப்பவர்களாலும் கைவிடப்பட்டு பந்தாடப்படும் ஒருவனைப் பற்றிய கதை.
இது சுஜாதா அவர்களினால் 1987 ல் எழுதப்பட்டது. அப்போதும் வேகத்துக்குக் குறைவில்லை என்றாலும் சுஜாதாவின் மற்றைய நாவல்கள் அளவுக்குத் திருப்திப்படுத்தவில்லை. இருந்தாலும் சுஜாதாக்கே உரிய ஸ்டைல் இருப்பதால் சலிப்பூட்டவில்லை.
ஒரு கதைசொல்லியை நேர்த்தியாய்ப் படைப்பது ஒரு கலை. கி.ராஜநாராயணனின் "கோபல்ல கிராமம்" என்கிற நாவலை வாசிக்கிறபோது ஏற்பட வாசிப்பனுபவம் பற்றி அடுத்த பதிவில்...
Comments