Skip to main content

மதன் கார்க்கியின் எந்திரன் ... செல்லெல்லாம் சொல்லாகி ....

எந்திரன் திரைப்படத்தில்  அதன்  நோக்கையும்  குறிக்கோளையும் இழக்காத இரு விடயங்கள் உண்டு . ஒன்று சுஜாதாவின் வசனங்கள் , இன்னொருவர்  பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி.

முதலாவது சுஜாதாவின் வசனங்கள் தொழில்நுட்பத்தை, அறிவியலை எளிமையான  தமிழில் அனைவரையும் சென்றடையும் விதமாக அமையும் .

அவர் எழுத்துலகின்  நோக்கமும் , திரைப்படத்துக்கு வசனம் எழுதியதன் நோக்கமும் அதே ,...

இரண்டாவது பாடல் ஆசிரியரும் ,அண்ணா பல்கலைக்கழக துணை விரிவுரையாளருமான மதன் கார்க்கியிடம் மாத்திரமே உண்டு . எந்திரன் பாடல்களை ஒரு நோக்கோடு எழுதியிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது .


தமிழிலும் தொழில்நுட்பப வார்த்தைகளை கொண்டு வரமுடியும்(அழகாக ) என காட்டியுள்ளார் . எந்திரன் எனும் அறிவியல் படத்தில் பாதை மாறாது பயணித்த இரண்டாமவர் .

இரும்பிலே ஒரு இருதயம் பாடலில்
பூச்சியம் ஒன்றோடு ...
பூவாசம் இன்றோடு ...

இந்த எளிமையான வரிகள் எந்திர மொழிகளுடன் (பூச்சியம் ஒன்று(01010101 )) காதல் கலந்ததை உணர்த்துகிறது . எளிமையான,ஆழமான  கற்பனை கவர்ந்தது ..

என் நீல பல்லாலே உன்னோடு சிரிப்பேன் என்று Bluetooth தொழில்நுட்பத்தை அழகு தமிழில் எழுதிக்காட்டியமை ஆனாலும் சரி 

sensor எல்லாம் தேயத்தேய நாழும்  உன்னைப்படிதேன் 

போன்ற வரிகளானாலும் சரி ,அனைத்துமே தொழில்நுட்ப்பத்திற்க்குள்ளேயும் தமிழை அழகாக கொண்டு வரமுடியும் என நிரூபித்த வரிகள் .

செல்லெல்லாம் சொல்லாகி கவிதைகள் வடித்தேன்"..
போன்ற வரிகள் வெளிவரவில்லை 

என் எஞ்சின் நெஞ்சோடு உன் நெஞ்சே இணைப்பேன் ....

சில வரிகள் வாலியையும்   நினைவூட்டி செல்கிறது ...

இரு பாடல்களிலேயுமே எந்திரன் பற்றி முழுமையான விளக்கம் கொடுத்திருப்பார் .. பூம் பூம் ரோபோ பாடல் அனைவருக்குமே விளங்கும் விதமாக மிக மிக எளிமையான வரிகள் .

"ஒருவனின் காதலில் பிறந்தவனே".... குறிப்பிட்டு சொல்லக்கூடிய வரிகள் ...

இந்த இரு பாடல்களுக்கும் எந்திரனில் மதன் கார்க்கிக்கு மட்டுமே 5 நட்ச்சத்திரம் கொடுக்கலாம் ..அதவும் ஆங்கில சப் டைட்டில் போடும் போது வரிகளில் திறமை மிக அழகாக தெரிகிறது ..

இவரின் தமிழ் மீதான ஆர்வம் மெய் சிலிர்க்க கூடியது .. மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் நிறுவன உரிமையாளர் ...
இந்த நிறுவனத்தால் ஐ பாட்டி என்ற சிறுவர்களுக்கான பாடல் தகடுகள் வெளியிட்டனர் ..

இன்றைய தமிழின் தேவையை தனிப்பாதையில் செய்துகொண்டிருப்பவர் .வாழ்த்துக்கள் மதன் கார்க்கிக்கு ...

Comments

when I saw the movie in net I played FF buttons for all the songs, so no comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...