கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது .
அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை .
சினிமா பார்க்கும் மக்களை முட்டாள் ஆக்காத வரிசையில் கோ வும் அந்த அணியும் இணைந்துகொள்ளலாம் .அவ்வளவு யதார்த்தமான சினிமா .விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் ......
இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது .
இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில் ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு இந்த சிறகுகள் அமைப்பையும் மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .
சிறகுகள் அமைப்பின் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பும் நிகழ அமைப்பில் இருந்த பலரும் இறந்துவிட எஞ்சியவர்கள் இதன் மூலமே தேர்தலில் வெற்றிபெற்றுவிடுகின்றனர் .இதன் பின்னர் சிறகுகள் அமைப்பின் தலைவன் (அஜ்மல் ) ,ஜீவா யார், குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார் என்பதை இரண்டாம் பாதியில் திரைக்கதையில் விறு விறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் .
புகைப்படப்பிடிப்பாளராக வரும் ஜீவாவை தமிழ் சினிமாவில் வரும் பஞ் வசனம்,செண்டிமெண்ட் வசனம் பேசும் கதாநாயகன் என்று காட்டாமல் யதார்த்தமான ஒரு சாதாரண பத்திரிகையாளனாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் . ஜீவாவின் நடிப்பும் அவ்வளவு யதார்த்தம் .மொத்தமாக தமிழ் சினிமாவின் மாற்றத்துக்கு பாராட்டுகள் .
அதே பத்திரிகையில் நிருபர்களாக இருக்கும் கதாநாயகி கார்த்திகாவும் பியாவும் யதார்த்தமாக தேவையான இடங்களில் வந்து போகின்றனர் . துறு துறு பியாவின் நடிப்பு பாராட்டப்படவேண்டியது .
பிரகாஸ்ராஜ் உம் கோட்டா சிறீநிவாசராவும் ஆளும் கட்சி எதிர்கட்சி தலைவர்கள் பாத்திரத்தில் சிறப்பு . பிரகாஸ் ராஜ் இன் வசனம் பேசும் முறை நடிப்பு திரையில் பார்த்தால் மட்டுமே உணர முடியும் .சாமிக்கு பிறகு கோட்டா சிறீநிவாசன் நடிப்பு பிடித்த படம் இது .
இந்த படத்தில் உண்மையான கதாநாயகன் கே வி ஆனந்த்,ரிச்சர்ட் நாதன் உம் அவரின் கமெராவும் ஜீவாவின் கமெராவும் தான் .ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு சண்டை காட்சிகளிலும் சரி பாடல் காட்சிகளிலும் சரி மிக சிறப்பு என்றே சொல்லலாம் .சண்டை காட்சிகளில் சுழன்ற கமெரா பாடல் காட்சிகளில் இயற்கையை அழகாக காட்டிய கமெரா சில காட்சிகளில் தொழில்நுட்பத்திலேயும் கலக்கியிருக்கிறது .
ஹரீஸ் எங்கிருந்து இசையை சுட்டாலும் கேட்க்க நன்றாக இருக்கிறது,காரணம் பா விஜயின் மதன் கார்கியின் வரிகள் அருமை.சில இடங்களில் பின்னணி இசை மிக வித்தியாசமாக இருந்தது .ஆனால் ஒரு இடத்தில் டயிடானிக் இசையை நினைவுபடுத்தியது !! .
படம் யதார்த்தமாக இருப்பதோடு நச்சென்று சில வசனங்களும் இருந்தது . "நமக்கெல்லாம் ஏன் வேண்டாத வேலை அது தான் நாட்டை திருத்த பஞ் டயலாக் பேசிற ஹீரோஸ் இருக்காங்களே !!! ""உங்களுக்கெல்லாம் கிரிக்கெட்டும் சினிமாவும் ஹீரோவும்,தோணி சிக்ஸ் அடிப்பாரா மாட்டாரா என்பது தான் பிரச்சனை " எனும் இடங்களும்" வசனங்கள் அருமை .
அரசியல் நக்கல்களுக்கும் பஞ்சமில்லாமல் காட்சிகளும் கலைஞரும் வந்து போகிறார்கள் . சோனா பிரசார மேடையில் பேசும் தமிழ் குஷ்புவை நினைவுபடுத்துகிறது .
யதார்த்தமான சண்டை காட்ச்சிகள் ,யதார்த்தமான நடிப்பு ,யதார்த்தமான நாயகன் என அத்தனையும் யதார்த்தமாக செய்திருக்கும் கே வி ஆனந்த் இற்கு பாராட்டுகள் .
சினிமா பார்க்கும் மக்களை முட்டாள் ஆக்காத வரிசையில் கோ வும் அந்த அணியும் இணைந்துகொள்ளலாம் .அவ்வளவு யதார்த்தமான சினிமா .விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் ......
பத்திரிகை துறையை வைத்து எத்தனையோ கதைகள் வந்திருந்தாலும் புகைப்படத்தாலேயே கதை சொல்லும் இந்த யதார்த்தமான திரைப்படம் வரவேற்பு பெறும் .
Comments
படித்தவை,பகுத்தறிந்தவை,பிரதானமாக அறிவியல்,உணர்ந்தவை,ரசனைகள்,கற்பனைகள்
திரைவிமர்சனம் மிக்க சிறப்பு வாழ்த்துக்கள்
interesting.
படித்தேன்.
பராவாயில்லை
//அருமையான விமர்சனம் நண்பரே ,பாடல்கள் ஏற்கனவே அருமை .. வரும் ஞாயிறு படம் பார்க்க வேண்டும் .///
நன்றி .. படமும் அப்படி .. :-)
சந்திரகௌரி said...
//இன்று தான் உங்கள் பக்கம் பார்க்கக் கிடைத்தது. உங்களுக்குப் பிடித்தவை அத்தனையும் எனக்கும் பிடிக்கும்.
படித்தவை,பகுத்தறிந்தவை,பிரதானமாக அறிவியல்,உணர்ந்தவை,ரசனைகள்,கற்பனைகள்
திரைவிமர்சனம் மிக்க சிறப்பு வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க :-)
நன்றி
# கவிதை வீதி # சௌந்தர் said...
//விரிவான விமர்சனத்திற்கு ... வாழ்த்துக்கள்..//
நன்றி
Pareethi said...
//நானும் படம் பார்த்துவிட்டேன்... ஏனோ என்னால் பல காட்சிகளில் படத்துடன் ஒன்ற முடியவில்லை... ஆனால் பார்க்கலாம்... நல்ல கதை... சிறிது சொதப்பிவிட்டர்கள்...//
மைந்தன் சிவா said...
//படம் பரவாயில்லை,விமர்சனம் சுப்பர் பாஸ்//
அவரின் உழைப்பை குறை சொல்ல எனக்கு மனம் வரவில்லை தகுதியும் இல்லை ..:-)
சரியாக சொன்னிங்கள் சுதா... அருமையான பார்வை.. எனக்கும் படம் பிடிச்சிருக்கு...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)