விவேகானந்தர் சாதாரண குருமார்கள் சுவாமிமார்கள் வழியில் அல்லாது தான் கடவுள் என்ற பேச்சுக்கு அப்பால் நீங்கள் நீங்கள் தான் சிறந்தவர்கள் என கூறியவர் . மிகவும் தைரியசாலி ஆனால் ஆழ்ந்த சிந்தனை உடையவர் . அவரிடம் ரசித்த சில கதைகள் ..
ஒரு முறை தனது தோழியுடன் குளக்கரையில் இருந்த போது அவள் குளத்தில் இருந்த நீரை தனது ஒரு கையால் அள்ளி எடுத்து வைத்துக்கொண்டு ....
" பார்த்தீர்களா இந்த நீர் எனது கைக்குள் அடக்கமாக உள்ளது, இது தான் காதலின் அடையாளம் " என்றாள்
பொறுமையாக பார்த்து விட்டு சிந்திக்கலானார் விவேகானந்தர் ...
உள்ளே இருக்கும் அந்த நீர் கையை அதே போல திறந்து இலேசாக விடும் போது எப்போதும் அதனுள்ளேயே இருக்கும் ...
ஆனால் அதை அழுத்தி பிடிக்க முற்ப்படும் போது அது காணும் முதல் துவாரத்திநூடோ வெடிப்பினூடோ வெளியேறும் .
அதே போல தான் அன்பும் காதலும் , முழுமையான சுதந்திரம் அன்பிற்கு இருக்க வேண்டும் . முடிந்தவரை கொடுக்க வேண்டும் ..எதிர்பார்ப்பில்லாது ..
யார் மீதாவது அன்பு செளுத்துவோராக இருந்தால்....
"அன்பை கொடுங்கள் -எதிர்பார்க்க வேண்டாம் "
"அறிவுரை சொல்லலாம் - கட்டளையிட வேண்டாம் "
"கேளுங்கள் - பிடிவாதம் வேண்டாம் "
எந்தவித எதிர்பார்ப்பும் எல்லையுமற்ற அரவணைப்பையும் அன்பையும் வெளிக்காட்டுங்கள் ..
விவேகானந்தர் மிகவும் நகைச்சுவை உணர்வும் , தைரியமும் உடையவர் கூட ..ஆனால் சிந்தித்து பொறுமையாக , ஆழமாக முடிவெடுப்பார் ...
விவேகானந்தர் ரயில் பிரயாணத்தின் போது சௌகரியமாக செல்வார் எப்போதும் . இராண்டாம் வகுப்பை தேர்வு செய்து ரயிலில் சென்றார் .
அங்கிருந்த வெள்ளைகாரனுக்கு இவரை பிடிக்கவில்லை .. காவி உடை அணிந்தவர்கள் மீது அவன் மதிப்பு குறைவாகவே இருந்தது . எங்கே ஆங்கிலம் தெரியப்போகிறது என ஆங்கிலத்திலும் திட்டினான் .
விவேகானந்தர் குட்டி தூக்கம் ஒன்று போட்ட பின்னர் அவரின் சப்பாத்துக்களை தூக்கி அவன் வெளியே எறிந்து விட்டான் ..
சிறிது நேரத்தில் எழுந்த விவேகானந்தர் அவன் பிடிக்காமல் எறிந்திருப்பான் என உணர்ந்தார் . சிறிது நேரத்தில் வெள்ளைக்காரன் உறங்க சென்ற பின் அவன் மேலங்கியை விவேகானந்தர் வெளியே எறிந்து விட்டார் .
வெள்ளைக்காரன் எழுந்து தன் மேலங்கி எங்கே ன்று கேட்க்க " அது எனது சப்பாத்துகளை தேடி போய் விட்டது" என ஆங்கிலத்தில் கூறினார் .

Comments
ஆத்திரப்படுபவனுக்கு நல்ல பதில் .
ரொம்ப நல்ல இருக்கு