Skip to main content

Posts

மலரினும் மெல்லிது காமம் - சின்னம் வைத்தல்

ஓவியம் : John Fernandas  தமிழில், பொதுவெளியில் சொல்லத்தகாத சொற்களை வேறு பொருள் கொண்டு சொல்வதை 'இடக்கரடக்கல்' என்பார்கள். 'இடக்கர்' என்றால் சொல்லத்தகாத சொல். சொல்லத்தகாத சொல்லை அடக்கிக் கூறுதல் இடக்கரடக்கல். இதைத் தகுதிச் சொல்வழக்கு என்பார்கள். இது கவிதைகளுக்குத் தனியொரு அழகைச் சுமந்துவரும். கவிஞர் வாலி தனது பாடல் வரிகளில் இடக்கரடக்கல் பயன்படுத்தும் விதம் இரசிக்கத்தக்கது. சிலநேரங்களில் அந்தச் சொற்பிரயோகங்களே அவற்றுக்கு உயர்ந்ததொரு நிலையைப் பெற்றுத்தரும். உதாரணமாக, "மின் வெட்டு நாளில்" என்கிற பாடலில் "பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்" என்றொரு வரி வருகிறது. இரு பறவைகள் சேர்ந்து உறவு கொள்வதைச் சொல்வதற்கு பல வார்த்தைகள் இருந்தாலும், "தோள் சேர்த்தல்" என்கிற வார்த்தையில் ஒரு சிநேகமும் இணக்கமும் வெளிப்படுகிறது. காமம் அழகு பெறுகிறது. அதேபோல, "தீ இல்லை புகை இல்லை" என்கிற பாடலில் ஒவ்வொரு வரிகளிலும்  தமிழ் அழகு செழித்திருக்கும். "முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்னச் சின்னதாய்" என்கிற வரிகள் கவனிக்கத்தக்கது. ...

மணிரத்னத்தின் ஆண்கள்

இயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற  கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே  அவர்களைச் சுற்றி இயங்கும்  ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும்  மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு  ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள்.  வீரத்துக்கு "மன திடம்" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.  எழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிக...

நிலமடந்தை

மனப்பீடத்தில் வீற்றிருந்து மணிமொழி சூட்டி அழகு பார்க்கும் பெயரற்றவளுக்கு எழுதிய ஓலைகள். பாயல் கொள்ளுதல்   கண்மணியாள், மூடிவைத்த வீணை போல் நினைவில் உனது வடிவு .தந்தி மீது இரு கயல்கள். வெறித்த வெண்ணிலவில் உறங்கும் புள்ளெல்லாம் எழுப்பிவிடத் தோன்றுகிறது. கிடக்கட்டும் வைகறை. வள்ளியைத் தொழுதல்  வள்ளீ , எனதன்பு சொல் நர்த்தகி. "அடுக்கடுக்காய் மலரும் விடியல் காண நீர்த்தாமரை விழித்திருக்கும்" என்று நீ சொன்னால்,அப் பொருளின் வேர் மருவிய மொழியும் பாதி வழியில் நாணும். கூதிர்காலம்... நங்கை, இது வெள்ளைச் சூரியன்கள் பார்க்கும் கன்னி மாதம். ஓர் அச்சிர ஆராதனம். ஊசிப் பூக்கள் நெருக்கையிலே ஒரு ஆளுயர விடமேற்றிக் கொலைகள் புரிகுவாய். உயிர் இறங்கிய மறுகணமே பற்றிக்கொண்டு எரிகிறதொரு சித்திரவனம் என்பாய். பதிலுக்கு, குளித்த மலர்கள் தொட்டுப் பறவை ராகம் பாடுகையில் உன் குற்றமிலாப் புன்னகை கள் என்றிருக்கிறேன். விழா மகளே, நங்காய்! இப்போதும் உன் செவியோரம் தவம்கிடந்து தொட்டுச் சென்றது ஒரு நெடிய பனிக்காற்றுத்தான் என்று சொன்னால் நீ நம்பப் போவதில்லை. நீ நம்பவில்லை என்றால் மட்டுமே ...

மலரினும் மெல்லிது காமம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்

பாதம்  நடப்பதால் பாதை உண்டாகிறது. நிலத்திலே பதியக்கூடிய பரந்த அடிப்பகுதியே பாதம்.  அடி என்பது ஒரு பொருளினுடைய அடிப்பாகம். பதி - பதம் - பாதம்  சமஸ்க்ருதம்  வாங்கிக்கொண்ட சொற்களில் பாதம் என்கிற சொல்லும் ஒன்று என்றும், பாதை என்கிற சொல்லே,  'Path' போன்ற சொற்களாக வழங்கப்பட்டு வருகிறதென்பதுமே  தேவநேயப் பாவாணர் கூற்று.  இப்படிப்பட்ட உயர்வான உடலின் பாகத்தினை இலக்கியங்கள் பெண் வடிவில் உயர்வாக்கப் போற்றின. பாதத்தின் உயர்வினைப் பாடும் பாடல்கள் பிற்காலத்தில் சமய இலக்கியங்களாகத்தான் அமைந்தது. ஆனால் சங்க இலக்கியப் பாடல்கள் பெண்களின் பாதங்களை உயர்வாக்கப் பாடின. காதலின் மென்தன்மையைக் குறிக்கவும், அதன் பொருளை உணர்த்தவும்  பயன்பட்டது. 'நலம் புனைந்து உரைத்தல்' எனும் அதிகாரத்தில் பெண்களின் பாதத்தைப் பற்றி உயர்வாகச் சொல்லும் வள்ளுவர் முதல் அடியிலேயே, அவள் அனிச்சம் பூவிலும் பார்க்க மென்மையானவள் என்றுவிட்டு இறுதி அடியிலே பாதத்தின் சிறப்பைப் பற்றி எழுதியிருப்பது இன்னொரு சிறப்பு. "அனிச்சமும் அன்னத்தின் தூவிய...

மலரினும் மெலிது காமம் - ஞயம்பட உரை.

உலகினில் மென்மையானதும் உயர்வானதும் மலர். அந்த மலரிலும் மென்மையானது காமம். அத்தகைய உயர்வான காமத்திலிருந்து மென்மையை அகற்றிவிட்டால்  காமத்தில் உண்மையான மகிழ்ச்சி கிட்டாது. அவ்வின்பத்தைத் துய்க்க முடியாது. இதன் மென்தன்மை உணர்ந்து  முழுமையான பயன், நுட்பம், நயம் எல்லாவற்றையும் அறிந்து அனுபவிக்கக்கூடியவர்கள் சிலரே என்பது வள்ளுவன் கூற்று. அப்படிப்பட்ட உயர்வான காமத்தை ஞயம்பட உரைப்பது அவசியம். இதிலிருந்து தவறாதவை சங்க இலக்கியப் பாடல்கள். "மலரினும் மெல்லிது காமம்  சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்"  இரு உள்ளங்களின் முழுதான ஒத்திசைவு இல்லாதவரை காமம் நிறைவு காண்பதில்லை. அப்படி இரு உள்ளங்களின் ஒத்திசைவோடு நிகழ்கிற காமம் மட்டுமே நீடித்து நிலைக்கும். பொருந்தும் போதெல்லாம் ஒவ்வொரு தீண்டலிலும்  உயிர் தொடவேண்டும். காமம் என்பது, நூல்களைக் கற்கக் கற்க எப்படி அறியாமை எண்ணம் தோன்றுமோ அதுபோல தீராதது. பெருகிக்கொண்டே செல்லவேண்டும். "அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்  செறிதோறும் சேயிழை மாட்டு" காம உணர்...

அச்சம் என்பது மடமையடா

கௌதமின் 'அச்சம் என்பது மடமையடா' மசாலாத் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது.  பயணம், காதல், அதிரடி என்று மூன்றையும் இணைத்திருக்கிறார்.  பயணத்தில், ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை நிதானமாக உணரமுடியவில்லை.மிக அவசரமான பயணம். எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்த முயன்றால் எதிலுமே நிறைவு காண்பது கடிது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனாலும் இது கௌதம் மேனன் படம்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கௌதம் மேனன் படங்களுக்கேயுரிய, பொதுவான அடிப்படை அம்சங்கள் உள்ள திரைப்படம்.  பயணத்தில் கௌதமுக்கு எப்போதுமே ஒருவித ஈடுபாடு உண்டு.  மணிரத்னத்தின் "எவனோ ஒருவன் வாசிக்கிறான்" பாடல் தந்த தாக்கத்தை வைத்தே ஒரு பத்துத் திரைப்படம் கொடுத்துவிடுவேன் என்று சொன்னவர். அவர் படங்களில் பெரும்பாலும், காதலைத் தேடிச் செல்லும் பயணமாக இருக்கும். அல்லது, ஒருவித அதிரடித் தேடல் தரும் சுகத்தினை நோக்கிய பயணமாக இருக்கும். காதல் தேடலுக்கு, "வாரணம் ஆயிரம்" மேக்னாவையும், "நீதானே என் பொன்வசந்தம்" வித்யாவையும் தேடிச்செல்லும் காட...

ரசனை எனும் ஒருபுள்ளியில் இரு இதயம்

உன்னுடன் இருக்கையிலே நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே இதுவரை நானும் பார்த்த நிலவா இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா! - நா.முத்துகுமார்  உதிக்கிற நிலவு தினமும்தான் உதிக்கிறது. அதற்குத் தினமும் புதிய முகம் தரக்கூடியது யார்? காதல் பற்றிய எண்ணம் சிந்தையில் எழ ஆரம்பித்த காலத்திலிருந்தே அது 'ரசனை'யை விட்டு விலகி நிகழ்ந்துவிடமுடியாது என்கிற எண்ணமும் இயல்பாகவே  எழுந்தது. இரசனைகள் இரு உயிர்களுக்கிடையேயான காதலின்   ஆதாரப் புரிதலையும் அழகியலையும் மென்வெப்பத்தையும் 'தொடர்ந்து' தூண்டவல்லது என்பதை உறுதியாக நம்புகிறேன். காரணம், 'நுண்ரசனை' என்பது வெறுமனே பொதுவான ரசனை அடிப்படையில் எழுவது இல்லை. உதாரணமாக, "எனக்கு இளையராஜா பிடிக்கும். உனக்கு ரஹ்மான் பிடிக்கும்" என்கிற பொதுவான முடிவினை மட்டும் வைத்து இருவரும் ரசனை வேறுபாடு உடையவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.உண்மையான நுண்ரசனை வேறுபாடென்று இதனைச் சொல்லிவிடமுடியாது. இந்த இருவரின் படைப்புகளையும்  நுண்ரசனைக்கு உட்படுத்துவதில் எந்தளவுக்கு ஒருவருக்கொருவர் மாறுபடுகிறோம் அல்லது ஒத்திசைகிறோம் என்பதில்தான் ரசனையின் ஆதாரப்புள்ளியா...