Skip to main content

மலரினும் மெல்லிது காமம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்பாதம்  நடப்பதால் பாதை உண்டாகிறது. நிலத்திலே பதியக்கூடிய பரந்த அடிப்பகுதியே பாதம்.  அடி என்பது ஒரு பொருளினுடைய அடிப்பாகம்.

பதி - பதம் - பாதம் 

சமஸ்க்ருதம்  வாங்கிக்கொண்ட சொற்களில் பாதம் என்கிற சொல்லும் ஒன்று என்றும், பாதை என்கிற சொல்லே,  'Path' போன்ற சொற்களாக வழங்கப்பட்டு வருகிறதென்பதுமே  தேவநேயப் பாவாணர் கூற்று. 

இப்படிப்பட்ட உயர்வான உடலின் பாகத்தினை இலக்கியங்கள் பெண் வடிவில் உயர்வாக்கப் போற்றின.

பாதத்தின் உயர்வினைப் பாடும் பாடல்கள் பிற்காலத்தில் சமய இலக்கியங்களாகத்தான் அமைந்தது. ஆனால் சங்க இலக்கியப் பாடல்கள் பெண்களின் பாதங்களை உயர்வாக்கப் பாடின. காதலின் மென்தன்மையைக் குறிக்கவும், அதன் பொருளை உணர்த்தவும்  பயன்பட்டது.

'நலம் புனைந்து உரைத்தல்' எனும் அதிகாரத்தில் பெண்களின் பாதத்தைப் பற்றி உயர்வாகச் சொல்லும் வள்ளுவர் முதல் அடியிலேயே, அவள் அனிச்சம் பூவிலும் பார்க்க மென்மையானவள் என்றுவிட்டு இறுதி அடியிலே பாதத்தின் சிறப்பைப் பற்றி எழுதியிருப்பது இன்னொரு சிறப்பு.

"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்." - குறள் 

அனிச்சம் பூவும் அன்னத்தின் இறகும்  உலகிலேயே மென்தன்மை உடையனவாகக் கருதப்படுவன. அவைகூட அவள் பாதங்களுக்கு நெருஞ்சி முள் போலத் தோன்றும் என்கிறார்.

நவீன கவிஞர்களில் வைரமுத்துவின் வரிகளில், 'மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவேன்' போன்று பெண்ணின் காதல்  பாதங்களை உயர்வாக்கப் பாடும் ஒத்த  வரிகள் ஒருசில  உண்டு. பெண்ணின் மென்மையை உணர்விக்க பயன்படுத்தப்பட்ட வர்ணனைகளைச் சில கவிஞர்கள் பெண்மையைத் தொழும் வர்ணனைகளாக மாற்றி அமைத்தனர்.
தாவணி போட்ட தீபாவளி என்கிற பாடலில், "பாவாடை கட்டி நிற்கும்  பாவலரு பாட்டு நீ. பாதாதிகேசம் வரை பாசத்தோடு காட்டு நீ." என்றொரு வரியினை யுகபாரதி எழுதியிருப்பார்.

பாதாதிகேசம் என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று எனக் கருதப்படுவது. பாதம் தொடங்கி கேசம் வரை பாடப்படும் பாடல்வகை பாதாதிகேசம் ஆகும். கடவுளையும் கடவுளைப் போன்றவர்களையும் இப்படிப் பாடுவது வழக்கம். மனிதர்களைப் பாடுவது கேசாதிபாதம் எனப்படும். கூந்தல் தொடங்கிப் பாதம் வரையில் பாடப்படுவது கேசாதிபாதம்.

"பாதாதிகேசம்" என்பது ஒரு பெண்ணை உயர்வுநிலையில் அல்லது தெய்வநிலையோடு ஒப்பிடுவதை மறைமுகமாகக் குறிக்கும் சொல். வெறெந்தச் சொல்லிணைப் போட்டிருந்தாலும் பாடல் வரிகள் கேட்கமுடியாதபடி அழகிழந்து போயிருக்கும்.

காமத்தில் பாதம் தீண்டிக் காதல் செய்வதும், அவள் பாதம் ஏந்தி முத்தமிடுவதும், அவளையும் அவள் அழகையும் பாராட்டுவதற்குச் சமம். உன்னை இத்தனை காலம் ஏந்திய பாதங்களைப் போற்றுகிறேன் என்றொரு முத்தம். இதில் ஒருவித மதிப்பும் கலந்திருக்கிறது. காமத்தில் இந்த மதிப்பு அவசியம்.

பின்நாட்களில் நெரூடா கவிதைகளும் இந்தத் தன்மையைத் தொட்டன.

When I cannot look at your face 
I look at your feet. 
Your feet of arched bone, 
your hard little feet. 
I know that they support you, 
and that your sweet weight 
rises upon them.

but I love your feet only because they walked upon the earth and upon the wind and upon the waters, until they found me.

முதலாம் பகுதி: மலரினும் மெல்லிது காமம்: ஞயம்பட உரை

Comments

Anonymous said…
அழகான ரசனை. ஆழமான தேடல். நன்றி.

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ