Skip to main content

Posts

அழிவிலிருந்து ஆக்கம் 01 - ஊடகங்கள்

ஒரு சமூகமோ, அமைப்போ அல்லது ஒரு படைப்போ திருத்தங்களுக்கு உள்ளாவது என்பது வேறு ,அழிவுக்குள்ளான  ஒரு சமூகத்தை புதிதாக கட்டியெழுப்புவது  என்பது வேறு . உதாரணமாக சொல்லப்போனால் நாம் செய்த விடயங்களில் தவறு இருந்தால் அதை திருத்தப்பார்ப்போம். சில விடயங்களை  திருத்த முடியாமலும் ,தவறுகளை சரிவரக் கண்டுகொள்ள  முடியாமலும் போகும் போது அதனை முற்றாக அழித்துவிட்டு மீண்டும் செய்ய முயல்வோம் . இது ஒருவித சௌகரியத்தை எமக்கு கொடுக்கும். புதிய அணுகுமுறைகளையும் பிரயோகப்படுத்துவது இலகு. பொருளாதாரத்தில் இதை  Creative destruction என்று சொல்வார்கள் . ஆனால் இந்த பதிவு பொருளாதாரம் பற்றியது அல்ல. மனிதர்களின் நாகரிகமும் கலாச்சாரமும் மனித சிந்தனைகளின் வளர்ச்சி பற்றியதும்.   திருத்தங்களுக்கு உட்படுத்துவதை விட ,முழுதாக அழிவடைந்த ஒன்றை மீண்டும் கட்டியெழுப்பும் போது அது முற்றிலும் புதிய வடிவமாக உருவெடுக்கக் கூடும். மீண்டும் புதிதாய் உருவாக்கப்படும் போது அதில் நல்ல விடயங்களும்  இருக்கக்கூடும் அல்லது மக்களை பின்தங்கிய நிலைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு அடிமைபப்டுத்தும் விடயங்களும் த...

ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தல் ..

சமூக நிகழ்வுகள் ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தி (எல்லாமே தொடர்புடையுடையவை ) அவை உளவியல் ரீதியில் சமூகத்தை எப்படி பாதிப்படைய செய்யும் , மாற்றத்தை ஏற்படுத்தும் , அதன் பின்னர் அந்த சமூகத்தை எப்படி கொண்டு செல்லுமென தொலைநோக்கில் எழுதப்படுவதோ பேசப்படுவதோ கிடையாது. சமுதாயமும் ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தாத சமுதாயமாகவே வளர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் சில நிகழ்வுகளை ஆரம்பித்தில் நாம் தடுக்காத போது அவை வளர்ந்து மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் அபாயமுடையன . Domino effect , Snowball effect உம் இதைத்தான் சொல்கின்றன . Butterfly effect எல்லோரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் snowball effect , domino effect பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இவை மூன்றையும் ஒரு சங்கிலித்தொடர் விளைவுகள்னு பொதுவா ஒரு வகைக்குள்  சேர்த்திடலாம். ஒன்றோடொன்று தொடர்புடையன . மேலதிக விபரம் தேவைப்படுவோர் கூகிள் செய்து பாருங்கள் . விபரங்கள் தேவைப்படுமேயானால் அடுத்த  பதிவில் விளங்கப்படுத்துகிறேன். வண்ணத்துப் பூச்சி விளைவு என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம் கொடுத்திடலாம் என எண்ணுகிறேன் . ...

கம்பனின் கவிச்சுவை !

முன்னமே இரண்டு இலக்கிய தளங்களை பரிந்துரைத்திருந்தேன். எளிய முறையில் இலக்கியத்தின் சுவையை அனைவரும் புரிந்துகொள்ளும்படி விளங்கப்படுத்தியிருப்பார்கள். தினம் ஒரு பா வாக இதுவரை வலைத்தளங்களில் எழுதி வந்த என் சொக்கன் அவர்கள் இப்போது ஒலி வடிவில் கம்பராமாயணத்தை சுவை பட கூறி வருகிறார்.    இவர்களின் பகிர்வுகளில்  சுவை மட்டுமன்றி சுவாரசியமும் நிறைந்திருக்கும். உதாரணமாக  இந்த பாடலில் வேட்கை மிகுந்தவர்கள் நிகழும் செயல்களைத் தமக்குச் சாதகமாகவே நோக்குவார்கள் என்னும் உளவியலை கம்பன் அழகா சொல்லியிருப்பார் .  நாமத்தால் அழிவாள் ஒரு நன்னுதல். ‘சேமத்து ஆர் வில் இறுத்தது. தேருங்கால். தூமத்து ஆர் குழல் தூ மொழித் தோகைப ால் காமத்தால் அன்று. கல்வியினால்’ என்றாள்.   இராமன் சீதை மீது கொண்ட காதலால் வில்லை உடைக்கல , தான் கற்ற கல்வித் திறனை ( வில் உடைக்க முடியும்னு ) நிரூபிக்கவே உடைச்சிருப்பார்னு ராமர் மீது காதல் கொண்ட இன்னொரு பெண் நினைத்துக்கொள்கிறாள். தன்னை ஆறுதல்ப்படுத்த. இதை என் சொக்கன் மிக அழகா இன்னும் விபரமாக  ஒலி வடிவில் விளங்கப்படுத்தியிருக்கார் . கம்பனை வியப்போ...

child prodigy பற்றிய தேடலில்

child prodigy பற்றிய தேடலில் பல அறியக்கிடைத்தது . குறைந்த வயதிலேயே சாதனை படைத்தார், குறைந்த வயதிலேயே பட்டம் பெற்றார் வளர்ந்தவர்களே சித்தியடைய கடினப்படும் பரீட்ச்சையில் எல்லாம் சித்தி பெற்றார்கள்னு கேள்விப்படுவோம்  இல்லையா ! இப்படிப்பட்டவர்களை தான்   child prodigies என அழைக்கின்றனர் .   சின்ன வயதிலேயே பெரியவர்களுக்குரிய அறிவை பெற்றவர்கள் தான் இவர்கள் . ஆனால் இதில் நாம் அதிகம் கேள்விப்பட்டது கணித மேதை ராமானுஜன் , இசை மேதை பீத்தோவன், மொசார்ட்   பற்றி தான் .  ஆனால் விக்கியில் பெரியதொரு வரிசை இருக்கிறது . Wiki ஆனால் இவர்களில் அண்மையில் அதிகம் அறியப்பட்டவர் அண்மையில் ஜனவரி 2012 இல் தன்னுடைய 16 வயதில் மூளை பாதிப்பு ஏற்பட்டு இறந்து போன அர்பா கரீம் . பாகிஸ்தானை சேர்ந்தவர் 9 வயதிலேயே மைக்ரோசொப்டின்   MCP முடித்தவர் .   இயல்பாகவே குழந்தைகள் திறமைசாலிகள் ஆனால் மேலதிக எதிர்பார்ப்பால் / அழுத்தங்கள் அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் போது அவர்கள் தொடர்ந்து சாதிக்க முடியாமல் போகிறது என்னும் கருத்து பல கட்டுரையாசிரியர்களால்  முன் வைக்கப்படுகிறது ....

உகரச்சுட்டும்(முன்மைச்சுட்டு )ஈழத்தமிழும்

மொழிஞாயிறு என்றழைக்கப்படும்  ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய வேர்ச்சொற் கட்டுரைகள் படிக்க நேரிட்டது .   அதில் உ என்னும்  வேர்ச்சொல் பகுதியில் உகரச்சுட்டு பற்றி பகிர்ந்திருப்பார் .  உகரம்  ஒலிக்கும் போது இதழ் குவிந்து முன்னோக்குவதால் உகரச்சுட்டும், பேசுபவரின் முன்னிடத்தை குறிக்கும் .  ஒருவரை நோக்கி சொல்கிறோம் என்றால் அவர் முன்னிலையில் (மிக நெருக்கமாக ) உகரச்சுட்டு பயன்படுத்தப்படும் . உதாரணமாக : உதுக்காண்                                உந்தா                                உந்த                                உவன்                                உது                         ...

கங்கை கொண்ட சோழபுரம் பயணம் - பகுதி 1

ஒரு வரலாற்று இடத்தின் சிறப்பை கேள்விப்பட்டு , அந்த தகவல்களை கொண்டு அந்த இடம் இப்படித்தான் இருக்குமென  மிகப்பெரிய  பிம்பத்தை முன்கூட்டியே ஏற்படுத்திக்கொண்டு அங்கு எப்போது செல்வோமென  எதிர்பார்த்திருப்பது ஒரு தனி சுகம் என்றால் , அதை நேரில் பார்த்து பிரமிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது என்பது அதை விட அதீத மகிழ்ச்சியும் ஆச்சரியமும்  தரும் . அப்படியானதொரு சந்தர்ப்பம் ,  இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு  பிரயாணம் செய்த போது கிட்டியது . இந்த தடவை கங்கை கொண்ட சோழபுரம் முதல்  தராசுரம் ,தஞ்சைப் பெருங்கோயில், மதுரை , குமரிமுனை  வரை செல்வதென  நீண்ட தெரிவை மேற்க்கொண்டேன். முதலாவது இலக்கு சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் நோக்கியதாக அமைந்திருந்தது . சென்னை நோக்கி மீண்டும் திரும்பி வரும் வழியில் மாமல்லபுரம் செல்லலாம் என எண்ணமிருந்தது. வாகனம் கங்கை கொண்ட சோழபுரத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது சோழப்பேரரசு பற்றிய எண்ண  ஓட்டமும் மனதில் தொற்றிக்கொண்டது . தரையில் தன் பேரரசை நிறுவியதோடு மட்டுமல்லாது மிகப்பெரிய கப்பற்படை கொண்ட...

ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா

சுஜாதா தன் கதைகளாக இருந்தால் கூட அதில் தனக்கு தெரிந்த  தகவல்களை பகிர்வது சாதாரணம் . கதையின் ஓட்டத்தின் வேகத்தையும் சுவராசியத்தையும் அவை இன்னும் அதிகரிக்க செய்யுமே தவிர குறைவடைய செய்யாது . அண்மையில் வாசித்த சுஜாதாவின் " ஒரு லட்சம் புத்தகங்கள் " கதை மிக சுவாரசியமானது. சமூகத்தில் உள்ள அத்தனை கதாப்பாத்திரங்களையும் ,அத்தனை அழுக்குகளையும் ஒரே கதையில் சுட்டிக்காட்டுவது என்பது மிக கடினம் . மாகாகவி பாரதி போன்றவர்களை சமூகம் எப்படி பார்த்தது ,பார்க்கிறது என்பதிலிருந்து யாழ் நூலகம் , இலங்கை தமிழர் ,தனி நபர்களின் அரசியலும் நாட்டின் அரசியலும் எப்படி இந்த சமூகத்தை கையாள்கிறது என்பது வரை இந்த கதையில் தொட்டுவிட்டு சென்றிருப்பார் . நம்ம சமூகத்திலை ஒரு பழக்கம் ஒன்றிருக்கு , ஏதாவது ஒன்றை சின்னதாக கடமைக்கு செய்து விட்டு செய்து விட்டேன் செய்து விட்டேன் என்று இறக்கும் வரை  சொல்லிக்கொண்தே இருப்பது . அதை அரசியல் வாதிகள் பார்வையில்  " நாங்க தான் கடையடைப்பு நடத்தினோமே " என்று சொல்வதோடு அவர்கள் கடமை முடிந்து போவதை சுட்டிக்காட்டி இருப்பார் . இதனை சமூகத்தில் இருந்து கண்டறிய நுணுக்கமானதொ...