ஒரு வரலாற்று இடத்தின் சிறப்பை கேள்விப்பட்டு , அந்த தகவல்களை கொண்டு அந்த இடம் இப்படித்தான் இருக்குமென மிகப்பெரிய பிம்பத்தை முன்கூட்டியே ஏற்படுத்திக்கொண்டு அங்கு எப்போது செல்வோமென எதிர்பார்த்திருப்பது ஒரு தனி சுகம் என்றால் , அதை நேரில் பார்த்து பிரமிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது என்பது அதை விட அதீத மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தரும் .
அப்படியானதொரு சந்தர்ப்பம் , இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு பிரயாணம் செய்த போது கிட்டியது . இந்த தடவை கங்கை கொண்ட சோழபுரம் முதல் தராசுரம் ,தஞ்சைப் பெருங்கோயில், மதுரை , குமரிமுனை வரை செல்வதென நீண்ட தெரிவை மேற்க்கொண்டேன்.
முதலாவது இலக்கு சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் நோக்கியதாக அமைந்திருந்தது . சென்னை நோக்கி மீண்டும் திரும்பி வரும் வழியில் மாமல்லபுரம் செல்லலாம் என எண்ணமிருந்தது.
வாகனம் கங்கை கொண்ட சோழபுரத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது சோழப்பேரரசு பற்றிய எண்ண ஓட்டமும் மனதில் தொற்றிக்கொண்டது .
தரையில் தன் பேரரசை நிறுவியதோடு மட்டுமல்லாது மிகப்பெரிய கப்பற்படை கொண்டு கடல் தாண்டி மலேசியா , இலங்கை என அனைத்து நாடுகளையும் தன் வசமாக்கிய சோழ பேரரசை நெருங்குகிறேன் என்பது மனதில் பெருமையையும் , எதிர்பார்ப்பையும் அதே நேரம் ஏக்கத்தையும் கொடுத்திருந்தது .
ஒரு டைம் மெஷின் கிடைத்தால் , 1000 ஆண்டுகள் பின்னால் சென்று சோழர் கால தமிழர்களையும் , களிறுகளுடன் நிற்க்கும் சோழர் படைகளையும் காண வேண்டுமென ஆவல் எழுந்தது. மனதிற்க்குள்ளேயே ஒளியை விட வேகமான ஒரு டைம் மெஷின் இருக்கிறதே . அதில் ஒரு 1000 வருடங்கள் பின்னால் செல்வது போல கற்பனை ஓடிக்கொண்டிருந்தது .
இந்நகரம் இராசேந்திர சோழனால் ,கங்கையை வெற்றி கொண்டதை கொண்டாட கட்டப்பட்டது . இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்கு கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றதால் கங்கை கொண்ட சோழன் எனவும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
பெரியதொரு கோட்டையின் வாயிலூடாக (சிதைந்திருந்தது ) உள் வீதியில் நுழைந்த போது பாரிய சிற்ப்பக்கலையும் கட்டடக்கலையும் மெய் சிலிர்க்க வைத்தது .
ஏறக்குறையை 250 ஆண்டுகள் சோழர்கள் கங்கை கொண்ட சோழபுரத்தை (இப்போது ஜெயங்கொண்டம் ) தலைநகராக்கி ஆண்டார்கள் எனப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 20 ஆண்டுகளில் கங்கை கொண்ட சோழபுரம் கட்டப்பட்டது .
அழகுடன் 160 அடி உயர விமானத்துடன் பிரம்மாண்டமாக நின்ற கோவிலை பார்க்கும் போது சோழர்களின் கட்டிடக்கலை மெய் சிலிர்க்க வைத்தது. தஞ்சை பெருங் கோவில் பிரம்மாண்டமானது என்றால் கங்கை கொண்ட சோழபுரம் அழகு மிகுந்தது .
விமானத்தின் அமைப்பு நேர்கோடாக இல்லாமல் நெளிவுகளாக இருக்கும் . அதனால் தான் இதை பெண்மையின் அழகு கவர்ந்து இழுக்கிறது என்பார்கள் போல . இந்த கோயிலின் சிவலிங்கம் 4 மீட்டர் உயரமுடையது.
சுற்றி இயற்கையால் கொடுக்கப்பட்ட அழகும் கோவிலை மேலும் அழகாக காட்டியது. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இடங்களை புகைப்பட கருவி வாங்கிக்கொண்டது. கூடவே நிறைய மேல்நாட்டு பிரஜைகளும் சிற்ப வேலைப்பாடுகளில் மூழ்கியிருந்தனர் . நம்மவர்கள் அங்கு பெரும்பாலாக இல்லை .
ஒரு வேளை வரம் அள்ளித்தரும் சாமி,நினைத்தது நடக்கும் என கட்டுக்கதைகள் கட்டப்பட்டு வியாபார உத்திக்குள் சிக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் .
மனது உள் வாங்கிக்கொண்ட இதன் அழகை மூளையும் காலமும் நினைவு வைத்திருக்க சில புகைப்பட நினைவுகளையும் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம் .
எடுக்கப்பட்டபுகைப்படங்களில் சில ...
1000 வருட தமிழ் எழுத்துகள்
நந்தி

Comments