சமூக நிகழ்வுகள் ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தி (எல்லாமே தொடர்புடையுடையவை ) அவை உளவியல் ரீதியில் சமூகத்தை எப்படி பாதிப்படைய செய்யும் , மாற்றத்தை ஏற்படுத்தும் , அதன் பின்னர் அந்த சமூகத்தை எப்படி கொண்டு செல்லுமென தொலைநோக்கில் எழுதப்படுவதோ பேசப்படுவதோ கிடையாது.
சமுதாயமும் ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தாத சமுதாயமாகவே வளர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் சில நிகழ்வுகளை ஆரம்பித்தில் நாம் தடுக்காத போது அவை வளர்ந்து மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் அபாயமுடையன .
Domino effect , Snowball effect உம் இதைத்தான் சொல்கின்றன . Butterfly effect எல்லோரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் snowball effect , domino effect பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.
இவை மூன்றையும் ஒரு சங்கிலித்தொடர் விளைவுகள்னு பொதுவா ஒரு வகைக்குள் சேர்த்திடலாம். ஒன்றோடொன்று தொடர்புடையன . மேலதிக விபரம் தேவைப்படுவோர் கூகிள் செய்து பாருங்கள் . விபரங்கள் தேவைப்படுமேயானால் அடுத்த பதிவில் விளங்கப்படுத்துகிறேன்.
வண்ணத்துப் பூச்சி விளைவு என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம் கொடுத்திடலாம் என எண்ணுகிறேன் .
பிரேசிலில் பறந்துகொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் பட படப்பில் ஏற்ப்படும் சல்சலப்புக்கும் டெக்சாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்புண்டு என்று Edward lorenz என்பவர் கணித ,வானியல் முறைப்படி நிறுவிக்காட்டினார்.
மேலோட்டமாக பார்த்தால் இது பயித்தியக்காரத்தனமாக தோன்றலாம் . ஆனால் அன்றாடம் நாம் இதை எதிர்கொள்கிறோம். இதுபோலவே சமூக நிகழ்வுகளும் சமூக வளர்ச்சியை தீர்மானிக்கிறது.
இதில் உளவியல் மாற்றங்கள் , சிந்தனை வளர்ச்சியை பின்னோக்கித் தள்ள பல முனைப்புகளை( சின்ன சின்ன நிகழ்வுகளை )நம்மை அறியாமலேயே நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம் .
உளவியல் தாக்கம் என்று ஒன்றை எடுக்கும் போது உதாரணமாக நாம் விளையாட்டாக பார்க்கும் கிரிக்கெட் என்போம் . ஆனால் இதிலுள்ள நுணுக்கத்தை சுஜாதா அழகா சொல்வார். நம்மிடமிடம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் ஒரே விடயம் கிரிக்கெட் என்று. எவ்வளவு பெரிய உண்மை இது. இது ஒரு மறைமுக விளைவு. விளையாட்டு ,உளவியல் ,அரசியல் இதுமூன்றும் இப்போதையை உலகில் மிகவும் தொடர்புடையன . நாடுகளுக்கிடையே நிகழ்ந்த 2012 ஒலிம்பிக் சர்ச்சைகளை கவனித்தவர்களுக்கு தெரியும்.
ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தி பார்க்கும் திறன் சாதாரண மக்களிடம் இல்லை. அதனை வளர்க்க வேண்டியது சின்ன வாயசைப்பில் கையசைப்பில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஊடகங்களே !
இந்த திறன் தொலைநோக்கு பார்வையை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை . சமூகத்தின் தொலைநோக்கு பார்வை வளர்க்கப்படும் போதே அந்த சமுதாயம் உயர்ந்த நாகரிகமும் அபிவிருத்தியும் உடைய சமுதாயமாகும்.
தொலைநோக்கு சிந்தனையில் நம் தமிழ் சமூகம் வளர பல சிறகுகளின் படபடப்புகள் நிகழ வேண்டும். அதே நேரம் அதற்கு இணையாக அதனை பின்னோக்கித் தள்ள தொலைநோக்கற்ற நிகழ்வுகளும் நடந்தவண்ணமே இருக்கும் . அவற்றையும் கடந்து வரவேண்டும்.
Comments