சுஜாதா தன் கதைகளாக இருந்தால் கூட அதில் தனக்கு தெரிந்த தகவல்களை பகிர்வது சாதாரணம் . கதையின் ஓட்டத்தின் வேகத்தையும் சுவராசியத்தையும் அவை இன்னும் அதிகரிக்க செய்யுமே தவிர குறைவடைய செய்யாது .
அண்மையில் வாசித்த சுஜாதாவின் " ஒரு லட்சம் புத்தகங்கள் " கதை மிக சுவாரசியமானது. சமூகத்தில் உள்ள அத்தனை கதாப்பாத்திரங்களையும் ,அத்தனை அழுக்குகளையும் ஒரே கதையில் சுட்டிக்காட்டுவது என்பது மிக கடினம் .
மாகாகவி பாரதி போன்றவர்களை சமூகம் எப்படி பார்த்தது ,பார்க்கிறது என்பதிலிருந்து யாழ் நூலகம் , இலங்கை தமிழர் ,தனி நபர்களின் அரசியலும் நாட்டின் அரசியலும் எப்படி இந்த சமூகத்தை கையாள்கிறது என்பது வரை இந்த கதையில் தொட்டுவிட்டு சென்றிருப்பார் .
நம்ம சமூகத்திலை ஒரு பழக்கம் ஒன்றிருக்கு , ஏதாவது ஒன்றை சின்னதாக கடமைக்கு செய்து விட்டு செய்து விட்டேன் செய்து விட்டேன் என்று இறக்கும் வரை சொல்லிக்கொண்தே இருப்பது . அதை அரசியல் வாதிகள் பார்வையில் " நாங்க தான் கடையடைப்பு நடத்தினோமே " என்று சொல்வதோடு அவர்கள் கடமை முடிந்து போவதை சுட்டிக்காட்டி இருப்பார் . இதனை சமூகத்தில் இருந்து கண்டறிய நுணுக்கமானதொரு அவதானிப்பு வேண்டும் .
சமூகத்துக்கு யார் விரோதிகள் என்பதை பல எடுத்துக்காட்டுகள் மூலம் சொல்லி முடித்திருப்பார் . அனைவரும் வாசிக்க வேண்டிய கதை இது .
வாசிக்க : ஒரு லட்சம் புத்தகங்கள்

Comments
பகிர்ந்தமைக்கு நன்றி சுதர்சன்!