பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் .
இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது வரிகளிலேயே இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் .
ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும் மதன் கார்கியின் மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது .
புதிய படமான 180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான பதிவு ..
முதலில் ரசித்த பாடல் .....
சந்திக்காத கண்களில் .... -பாடலை கேட்க்க
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப்போகிறேன் ...
குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம் . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிமுகம் தொடரவேண்டும் .
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
அன்பையே கொண்டிருப்பவனிடம் ஏங்கும் பெண்ணின் ஏக்கமாய் ஒலிக்கும் வரிகளில் சொற்களின் பாவனை அருமை .
இணையும் முனையம் இதயம் என்று ஆனாலே
பயணம் முடியும் பயமும் விட்டு போகாதோ
இரண்டு இதயங்கள் ஒரே சமயத்தில் இணையும் இடம் இதயம் என்றானபின் பயம் இல்லை என்று காதலின் அர்த்தம் இரு வரியில் சொல்லும் காதல் வரிகள் .
நான் கேட்டு ரசித்த அடுத்த பாடல் துறு துறு கண்ணில் ......
இந்த பாடல் வரிகளை தீட்டிப்பாருங்கள் . ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் வைரம் ஒளிரும். உணர்வீர்கள் .குழந்தைகள் உலகத்தை எப்படி பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்ற வரிகள் .
புதிய புதிய உலகம் வேண்டாமே
நேற்றுலகம் நான் காண்பேன்
தூசில்லா பூங்காற்றிலே ...
நவீன உலகின், மனித மனதின் ஏக்கம் மாசில்லாத பூங்காற்று . ஏக்கத்தை இன்னும் அதிகரிக்கும் வரிகள் .
இது மதன் கார்கியின் சிறப்பு . வரிகளுக்கும் பாடகரின் உச்சரிப்புக்கும் மேலும் அழகு. மீண்டும் தமிழின் அழகை கொண்டுவந்துள்ள ளகர வரிகள் மிகவும் பிடித்தது .
பல நாள் இருளும்
ஒரு நாள் சுருளும் எனவே !
மருளும் மனதில்
ஒளியாய் திரளும் கனவே !
மருளும் - பயப்படும்
இருளான வாழ்க்கையையும் ,இறுதியில் இல்லாமல் போகும் வாழ்க்கை எனவும் நினைத்து மருளும் (பயந்து மிரண்டுகொண்டிருக்கும்) மனதிற்கு ஒளியாய் இருப்பது கனவே . வாழ்க்கையின் அர்த்தம் இந்த வரிகள் .இந்த வரிகளின் அழகு உணர பாடலை கேளுங்கள் .
ஏஜே மனம் மறைப்பதேன் பாடலில் ரசித்தது ..
நாடியை தேடி உனது கரம் தீண்டினேன்
நாழிகை ஓடக்கூடா வரம் வேண்டினேன்
இந்த வரியை சிந்தித்த மதனின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் .காதலியின் கையை தீண்டும் போது கூட ஆவலுடன் அவள் நாடியிலேயே நேரம் கணித்து நாழிகை ஓடக்கூடாது என வரம் கேட்கும் காதலன் . நேரம் போக கூடாது என்ற எண்ணத்தையும் காதலியை தீண்டுவதையும் இணைத்தது நாடியில் நேரம் பார்ப்பதை உணர்த்துவது அருமை .இரு வரிகளுக்குள் எண்ணமும் நிகழ்வும் .
இளமை ததும்பும் வரிகளிலும் விடவில்லை ..
மேல் விழும் தூறல்
எனது ஆசை சொன்னதா
கால் வரை ஓடி எனது
காதல் சொன்னதா ?
காதலை சரியாய் சொல்லும் மொழி மோகம் என்பதையும் அழகாக விளக்கும் வரிகள் .
இந்த வரிகள் எதிர்பார்ப்பை குறைக்கவில்லை ..அடுத்த பாடல்களின் அழகான வரிகளுக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது . மதன் கார்கியின் தரமான வரிகளின் ரசிகனாய் ....
Comments
Ungalaalathaan naan madan kaarkki varigalai kavanikka aarambhithen... Thanks for Introducing...