Skip to main content

மதன் கார்க்கி : நெஞ்சுக்குள் பெய்திடும் தமிழ் மழை

இறுதியாக வெளியாகிய  பயணம் பாடலுக்கு கீழே செல்லவும் ...


பூச்சியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு என்று பைனரிக்குள் பூவாசத்தை கொண்டு வந்து தமிழையும் அழகாக தொழில்நுட்பத்தோடு ஒருமைப்படுத்தி என்னை மிகவும் கவர்ந்தவர் மதன் கார்க்கி . ஏன் பெரும்பாலானவர்கள் அறிந்துகொண்டதும் இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ என்ற இந்த பாடல் மூலம் தான் .

ஆனால் அவர் தான் கண்டேன் காதலே பட பாடல்  ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன் என்ற பாடலை எழுதினார் என்று பிறகு தான் தெரியும் .
ஆனால் அப்போதே அவர் புதிய ஆரம்பங்களை வரிகளுக்கு கொடுக்க எத்தணித்தது பாராட்டுக்குரியது.

மிதவை மனமே.. மிதவை மனமே..
என்னை முந்திச் செல்லாதே
என்று ஆரம்பிக்கப்பட்ட அந்த பாடல் இசையமைப்பாளர் வித்தியாசாகரின் வேண்டுகோளுக்கு இணங்க மாற்றியிருக்கிறார் .

எந்திரனில் தன் திறனை காட்டிய மதன் கார்க்கியின் பயணம் நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ விலும் தொடர்ந்தது . வரிகள் அனைத்தும் புதிது .ஏதோ ஒன்று இருக்கிறது வரிகளில்  . தமிழ் அழாகான மொழி என வெளிப்படுத்தும் எழுத்து , அவரின் பார்வையில் இருந்து பார்க்கும் போது ஆச்சரியம் .


ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி.. :)காதலர்களுக்கிடையேயான மௌன மொழியின் வெளிப்பாடு . தமிழில் மட்டுமே உள்ள  ல ள லகரங்கள் வைத்து எழுதும் போது ஒரு அழகு இருப்பது உணர்கிறது மனது . 


மாலை வேளை வேலை காட்டுதோ... 
நல்ல வேளை ஹரீஸ் ராகவேந்திரா பாடியதால் ள ல உச்சரிப்புகளை ,வரிகளின் அழகை உணரமுடிகிறது . உதித்நாராயணன் பாடியிருந்தால் என்ன ஆகிறது ?


இந்த  வரிகள் மீதிருந்த ஈர்ப்பு குறைய முதலே நெற்றிப்பொட்டில் பற்றிய எண்ணம்  எட்டுத்திக்கும் பரவ விரும்பும் பாடல் கவர்ந்தது . பாடலின் வரியும் சரி வார்த்தை பிரயோகமும் சரி .அனைத்தும் புதிது .facebook wall இலும் எங்கள் கொள்கை தீட்டினோம்  .. வித்தியாசமான சிந்தனை ஆனால் புதிய சிந்தனையும் கூட .. எனது பார்வையில் facebook wall தான் கொள்கை உள்ளவர்களுக்கு ஒரேயொரு வழி.

அதே கோ படத்தில் தான் இந்த பாடலும் ஏனோ குவியமில்லா 
..இந்த படத்தில் ஹீரோ படப்பிடிப்பாளர் என்பது பாடல் வரிகளில் தெரிகிறது . . நிச்சயம் காட்சி அமைப்பில் ஆனந்த் கலக்கியிருப்பார் . பாடல் ஒரு அழகான கவிதை போல மதனின் அழகான வரிகள் ,முக்கியமாக தமிழோடு திரையிலும் தெரியும் .

என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்


இந்த வரிகளை உச்சரிக்கும் போது தமிழ் இனிக்கிறது அடி மனதில் :)) ஆலாப் ராசுவின் உச்சரிப்பும் சரி பாடிய விதமும் சரி அனைத்தும் அருமை . 


இந்த பாடல்கள் அனைத்தும் பெரும்பாலானவர்கள் ரசித்திருப்பீர்கள் . அண்மையில் பயணம் திரைப்பட பாடல் .என்னை மிக மிக கவர்ந்த பாடல் ..


நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம்
வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம்
கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம்... 

பிறப்பில் இருந்து ஒரு மனிதனின் பயணம் .இந்த வரிகளின் அழகு இதை உணர்ந்து வாசித்து பாருங்கள் புரியும் .. புதிய சொற்க்கள் .. அனைத்தும் தமிழ் பாடல் வரிகளுக்கு புதிது .

இந்த பாடல் வரிகள் 

நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம்
வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம்
கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம்
முடியும்
பயணம்!
கனவுகள் குறைய இளமையின் பயணம்
காதல்கள் மறைய முதுமையின் பயணம்
ஊர்மறந்தொழிய மரணத்தின் பயணம்
முடியும்
பயணம்!
வானினைச் சேர தீயின் பயணம்!
பூமியைச் சேர நீரின் பயணம்!
வெற்றிடம் தேடும் காற்றின் பயணம்!
எல்லைகள் தேடும் வானின் பயணம்!
பாதை போகும் போக்கில்
பாதம் போகும் பயணம்!
முதலோ முடிவோ அறியா
கனவின் கனவில் பயணம்!
நாளைக் காலை காண
ஆயுள் ஏந்திப் பயணம்!
விடியும் விடியும் என்றே
முடியும் முடியும் பயணம்!
கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும்
உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும்
தனையிழந்து வெளியினில் தேடும்
மனிதனின் நெடும் பயணம்!
முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம்
கடைசியில் நான்கு மடங்குகள் கூடும்
முடிவடைந்த புள்ளியில் மீண்டும்
தொடங்கிடும் ஒரு பயணம்


இதுவரை தொடர்ந்து ஒரே வரிகளில் ஆரம்பித்த கவிஞர்கள் மத்தியில் தாமரை ,முத்துக்குமார் போன்றோர் பரிணமித்தாலும் அவர்களுக்குள்ளேயே மிகவும் வித்தியாசமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மதன் கார்க்கிக்கு நானும் ஒரு ரசிகனாய் ரசித்த வரிகள்,பாடல்கள் இவை  ..இது போன்ற ஆரோக்கியமான தமிழ் வரிகளை வரவேற்க்க வேண்டும் . 

Comments

நல்ல அலசல்... வாழ்த்துக்கள்
நன்றி மதுரை சரவணன் .வாழ்த்துகளுக்கு :-)
நன்று... நான் இதுவரை இந்தப்பாடலை கேட்டதில்லையே...
Jana said…
மதன் கார்க்கி! தன்பக்கம் சகலரையும் திரும்ப வைத்துள்ள ஒருவர்" சிறப்பான ஒரு இடுகை.

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா