Skip to main content

மனிதன் ஏன் இரண்டு கால்களால் நடக்கிறான் ??

மனிதன் ஏன் இரண்டு கால்களால்  நடக்கிறான் ?? மனிதன் உருவாக்கிய கடவுளும் இரண்டு கால்களுடன் இருப்பதாலா ?


டார்வினி கூர்ப்பு கொள்கைக்கு எதிராக  சில கேள்விகள் கேட்க்கப்பட்டு மதவாதிகளால் அலட்ச்சியப்படுத்தப்பட்டாலும் இன்றும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது . இறைவன் இந்த பூமியை ப்ராஜெக்ட் எடுத்து மனிதனை படைத்து அவனுக்காக எல்லாம் படைத்தது என்று பல ஆண்டுகளுக்கு முன் பகுத்தறிவு குறைவான காலத்தில் எழுதியவற்றை இன்றும் பின் பற்றி வருகிறான் .

அப்படியானால் எதற்கு மனிதனுக்கு முதல்  டைனோசர்களை  படைத்தார் ? இவ்வாறான கேள்விகளை மீண்டும்  கேட்டாலும் அவற்றிற்க்கு பதில் அளிப்பதில்லை ..

ஆனால் மனிதன் இரண்டு காரணங்களால் இன்று மற்றைய உயிரினங்களை விட அறிவாலும் அனைத்து விடயங்களாலும் முன்னேறி  உள்ளான். அதற்க்கு  முக்கிய காரணம் மனிதனின் சிந்தனை . இதில் முக்கிய பங்கு பகுத்தறிவு ...

ஆபிரிக்காவில் 4 மிலியன் ஆண்டுகளுக்கு முதல் ஒரு வகை குரங்குகளில் (Apes ) இருந்தே கூர்ப்பின் அடிப்படையில் மனிதன் முழுமையாக ஆனான் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது ஆய்வாளர்களால் ... 

australopithecine என்ற இனத்தை சேர்ந்த தெற்க்கு குரங்குகளின் மூளை விருத்தி ௨ மில்லியன் வருடங்களுக்கு விருத்தி  அடைந்தமை ஆராய்ச்சியில் இருந்து எலும்புகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

  முதலாவதாக தற்போது உள்ள சிம்பன்சி குரங்குகளின் மண்டை ஓடு .. 
இரண்டாவது Australopithecine என்ற எமது மூதாதை உயிரினத்தின் 3 .5 மில்லியன் ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு .... 

முன்னர் சாதாரண சமூகம் போல எம்மை போலவே  வாழ பழகி கொண்டன. தாமாகவே தம்மை முன்னேற்றி கொண்டன அவை . ஆனால் எப்போது இரண்டு கால்களில் நடக்க தொடங்கின ...

இதற்க்கான ஆய்வு நடத்தப்பட்ட போது சிம்பன்சிகள் இரண்டு கால்களால் நடக்கும் போது அவற்றிக்கு குறைவான சக்தியே பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நான்கு கால்களால் நடக்கும் போது கூடுதலான சக்தி தேவைப்படுகிறது என ஆய்வறிக்கையில் தெருவிக்கப்பட்டுள்ளது . -University of Arizona, the University of California, Davis, and Washington University in St. Louis

தனது கைகளை வேறு தேவைகளுக்கு ஏற்ப்ப ஆக்கி கொண்டான் அதனால் தான் இத்தனை படைப்புகளும்  . தனது தேவைகள் அதிகரிக்க கைகளை பயன்படுத்தினான் .

மதவாதிகள் கேட்க்கும் இன்னொரு கேள்வி ? உயிரினங்கள் தானாக இரசாயன,  DNA கலப்புகளில் தோற்றம் பெற்றது என்றால் ஆண் பெண் எவ்வாறு  தோற்றம் பெற்றனர்  என்பதே .. இதற்க்கு ஒரே பதில் உலகம் தோன்றி பல மில்லியன் வருடங்களின் பின்னரே உயிரினங்கள்  தோன்றியது என்பது  நிரூபிக்கப்பட்ட வெளிப்படை உண்மை .

ஆண் பெண் தோற்றம் எவ்வாறு ? அப்படியானால் ஆண்  பெண் கலந்த பாலினம் என்று ஒரு இனம் உள்ளதே ??? இதை எப்போது கடவுள் உருவாக்கினார் ? ஆதாம் ஏவாள் தான் கேள்விப்பட்டிருக்கிறேன் ... இதற்க்கான விடையை யோசியுங்கள் . அடுத்த பதிவில் ஆண் பெண் உருவாக்கம் பற்றி பார்ப்போம் .

சிந்தனைகள் அனைவரையும் சேர மறக்காமல் ஓட்டை போடவும் .......

Comments

Unknown said…
எதோ நடத்துங்க


ஆனா நல்லா நடதுறிங்க
ஹஹா .. நன்றி ..ஏன் இவளவு விரக்தி ?
மிகவும் யோசிக்க வேண்டிய விஷயங்கள்...
கட்டுரை அருமை... சிந்திக்க வச்சிட்டிங்கள்... வேலைப்பழு காரணமாக கன நாள் தங்கள் தளம் வரவில்லை மன்னிக்கணும்.
நன்றி ராஜ ராஜ சோழன் .. மிக்க நன்றி ..சிந்தித்தால் உங்களிடமும் ஒரு உணர்வு வரும்
பரவாயில்லை ..நினைவில் வைத்து வந்து வாசித்துவிட்டேர்களே . நன்றிகள் தோழரே மதி சுதா .. நீங்களும் தொடர்ந்து சிந்திக்க வைகிறீர்கள் :))
// ஆபிரிக்காவில் 4 மிலியன் ஆண்டுகளுக்கு முதல் ஒரு வகை குரங்குகளில் (Apes ) இருந்தே கூர்ப்பின் அடிப்படையில் மனிதன் முழுமையாக ஆனான் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது ஆய்வாளர்களால் ... //

இது மிகத் தவறான புரிதல்.

சார்ள்ஸ் டார்வின் சொன்னது "மனிதனும், குரங்குகளும் ஒரு பொது மூதாதையிடமிருந்து கூர்ப்படைந்து வந்தன' என்பதே.
அதாவது மனிதனுக்கும், குரங்கிற்கும் ஒரு பொது மூதாதையினர் இருந்தனர் என்பது மட்டுமே அவர் சொன்னது.

http://www.pbs.org/wgbh/evolution/library/faq/cat02.html

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ