Skip to main content

இந்த வார சிறப்பு : பாடகர் உன்னிகிருஷ்ணன்

இந்த வாரத்தின் சிறப்பாக எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகரது பிறந்த தினம் அண்மையில் வந்தது . அதுதான் ஜேசுதாசுக்கு அடுத்த படியாக எண்ணும் போது மனதில் தோன்றும் ஒருவர் உன்னி கிருஷ்ணனாக தான் இருக்க முடியும் .




தனது அருமையான குரல்களில் உன்னி கிருஷ்ணன் தந்த பாடல்கள் இப்போது கேட்டாலும் இனிக்கும் . அதிலும் "தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு " பாடலில் உண்மையாக தென்றல் போன்றே அவரது குரல்  இருக்கும் . 


"என்னவளே அடி என்னவளே" பாடல் முதலிலேயே அவரை  உச்சத்துக்கு கொண்டுசென்றது . ஆனால் அவர் பாடிய "உயிரும் நீயே உடலும் நீயே  உறவும் நீயே தாயே  " பாடல் என்னை மிகவும் கவர்ந்தது .  அவர் பாடிய இந்த இரு பாடல்களும் தேசிய விருதையும் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருதை பெற்று தந்தது . 


9 ஆம் திகதி ஜூலை மாதம்  1966 ஆம் ஆண்டு கே ராதாகிருஷ்ணனுக்கும்  டாக்டர் ஹரிணி ராதாகிருஷ்ணனுக்கும் மகனாக பிறந்தார் .  Kesari Kuteeram எனும் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற மருத்துவமனை அவரது குடும்பத்திற்குரியது . அவரது தாத்தா கேசரியிடம்  வந்து சிறப்பான இசை திறமையை காட்டுபவர்கள் திமைகளை காட்டி வெற்றி  பெற்றனர் . இவ்வாறான பின்னணியில் வந்தவர் இசைத்துறையை தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியம் இல்லை .   


ஆனால் உன்னி கிருஷ்ணனின்  முதல் விருப்பம் க்ரிக்கேட்டாகவே  இருந்தது . தேசிய அணியில்  இடம் பிடிப்பதே நோக்காக இருந்தது . ஆனால் அவருக்கு இசை மீது இருந்த ஆர்வத்தை பார்த்து அவரது தாயார் கர்நாடக இசையின் கீழ் கடக்க விட்டார் . அவர் அசன்(Asan )  மேமரியல் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது கிரிக்கெட்டையும் இசையையும் சமனாகக் கொண்டு  சென்றார் .


தமிழ்நாடு சீனியர் டிவிஷன் அணியில் துடுப்பாட்ட வீரராகவும் கீபெராகவும் இருந்தார் . 1990 களிலிருந்து கச்சேரி வாய்ப்புகள் வந்தது . 1994 இன் பின்னர் அவரை ரஹ்மான் இனம் கண்டு கொண்டு வந்தார் . பின்னர் படிப்படியாக கிரிக்கேட்டை கை விட்டு  முழுநேர இசைக்கலைஞராக ஆகினார் உன்னி கிருஷ்ணன் . 


பின்னர் ப்ரியா என்பவரை மணந்தார் உன்னி கிருஷ்ணன் . தற்ப்போது இரண்டு பிள்ளைகளும் உண்டு. 


இசை பேரொளி , நாதாபூஷணன் ,கலை மாமணி ,யுவ கலா பாரதி விருதுகளும் இரு தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன .



மேலும் அவர் மீது மேலும் ஆர்வம் வர காரணம் அவரது தமிழ் உச்சரிப்புகள் . மலையாளிகள் யாழப்பாண தமிழர்கள் போல உச்சரிப்புகளில் திருத்தம் இருக்கும் . அதனை உன்னி கிருஷ்ணனில் காண முடியும் . அவரும் ஒரு மலையாளி  .

பல கர்நாடக சங்கீத இசைகளை பாடிய உன்னிக்ரிஷ்ணன் தமிழ் , தெலுங்கு  என மொத்தம் 600 க்கும் மேல்பட்ட பாடல்கள்  பாடியுள்ளார் .  பாடல்  தொகுப்பு  
அந்த குரலில் இன்னும் எதோ ஒரு  கவர்ச்சி... ஜேசுதாஸ் போல சிறப்பான ஆற்றல் படைத்த ஒரே  பாடகர் உன்னி கிருஷ்ணன் எனலாம் .

தமிழ் இசை பெற்ற வரம் உன்னி கிருஷ்ணனுக்கு பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் .
உன்னி கிருஷ்ணன் தீவிர ரசிகனாக ....

Comments

Riyas said…
மிக அருமையான குரல்வளம் கொண்ட பாடகர் உன்னிகிருஷ்ணன்.

நல்ல பதிவு,,

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...