Skip to main content

பொது இடத்தில் , வேலைத்தளத்தில் கூச்சம் இல்லாமல் பேசலாம்

பேசுவதற்கு  கூச்சமா ?அதுவும் ஒரு சமூகத்தில், வேலை பார்க்கும் இடங்களில் அல்லது முதன்முதலாக ஒரு மேடையில் ஏறி பேசுவதோ அல்லது ஒரு குழு முன்பாக கதைப்பதற்கோ பலருக்கு தயக்கம் உண்டு .. ஆனால் இவற்றை இல்லாமல் செய்யலாம் .

முன்னோர்கள் உரைகளை பின்பற்றல் 


நீங்கள் எதிர் காலத்தில் மேடையில் ஏறி  பேசுவதற்கு  வாய்ப்பு கிடைத்தால் கூச்சம் வேண்டாம் . மிகத்திறமையான பேச்சாளர்களை இப்போதே பின்பற்றுங்கள் .அவர்களின் நடை உடை பாவனை ,கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் என்பவற்றை கவனியுங்கள் ..
அப்பிள் நிறுவன CEO வின் பல்கலைக்கழக உரை .- ஸ்டீவ் ஜொப்ஸ் 


கூர்மையான கவனம் - நிலைத்திருத்தல் 

சுய நினைவை நிலை நிறுத்த வேண்டும் . ஒரு பொது அறையில் பேசும் போது அனைவரும் உங்களையே கவனிப்பார்கள் என்பதை ஞாபகப்படுத்தவேண்டும். நீங்கள் சிறப்பாக உள்ளீர்கள் என உறுதிப்படுத்த வேண்டும்


மிகவும் சௌகரியமாகவும் தொழிலாளியாகவும்(proffesional ) உடை அணிவது முக்கியம் .

கருவை உள் வாங்கல் 


என்ன  பேசப்போகிறோம் என்பதை சரியாக விளங்கி கொள்ள வேண்டும் . தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் . எண்ண பேசப்போகிறோமோ அதை  உள் வாங்கி அதன் திட்டத்தை கூறலாம் .

ஒரு வரைபடமாக கொண்டு சென்று அதை மேலும் விரிவாக்கி விளங்கப்படுத்தலாம் . 


பயிற்சி 


பேசுவதற்கு தயாராகிய உடன் . அதை மீண்டும்மீண்டும்வாசித்து பார்க்கலாம் .பின்னர் கண்ணாடி முன் நின்று பயிற்சி செய்யலாம் . அல்லது வீட்டில் இருக்கும் ஒருவரின் முன்னிலையில் அதை பேசி காட்டலாம் .


சுயவிம்பம் 
உங்கள் மீதான தான் நம்பிக்கை மிக முக்கியம் .சரிவராது என்று எண்ணினால் உண்மையில் சரிவராது .  நன்றாக செய்வேன் என்று எண்ணினால்  நிச்சயம்  நன்றாக செய்வீர்கள் .

பார்வையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள் 
நீங்கள் யாருக்கு உரை நிகழ்த்த போகிறீர்கள் என்று யோசித்து அதட்க்கு ஏற்றவாறு   அவர்களுக்கு ஏற்றவாறு உரை இருக்க வேண்டும் .


மாணவர்களாக இருந்தால் உங்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள பார்ப்பார்கள் , நண்பர்களாக இருந்தால் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக இருக்க வேண்டும் . யாராவது பெரியவர்கள் என்றால்  அவர்களை சம்மதிக்க வைப்பது போல அமைய வேண்டும் .....


பொறுமை -அமைதி 

சிலர் உடனே ஏதாவது ஒரு வசனம் மறந்து விட்டால் டென்ஷன் ஆகி விடுவார்கள் . ஒரு ச்லயிட்ஸ் விளங்காவிட்டால் அதை விட்டு விட்டு செல்வதில் தவறில்லை . அதற்காக ஒருவரும் தண்டிக்க போவதில்லை . இது வெறும் உரையே ..இதற்காக யாரும்தண்டிக்க போவதில்லை .

கூச்ச சுபாவம் தவிர்க்க ...

கூடுதலாக கண்ணை பார்த்து பேசுபவர்களை தான் பார்வையாளர்கள் நம்புவர்கள் , நிலத்தை பார்த்து பேச கூடாது . தலை நிமிர்ந்திருக்கும் போது உங்கள்மீது உங்களுக்கே நம்பிக்கை கூடும் .

சிரிப்பாக நகைச்சுவையாக பேசுதல் .

அதற்க்கு ஒன்றும் பெரிய நகைச்சுவையாளனாக இருக்க தேவையில்லை . சிறு வசனங்கள் மூலமே பார்வையாளர்களை சிரிக்க வைக்கலாம் . சிரிப்பை விரும்பாதவர்கள் யாராக இருக்க முடியும் .எப்போதும் சிறு புன்னகையுடன் பேசுங்கள் .


கேட்ப்போரை கட்டாயப்படுத்தல் . 

வைச்சு அறுக்காதீங்க .. தேவையான  விடயத்தை குறுகிய காலப்பகுதியில் கூறினால் போதும். அவர்களை  வேறுதிசைகளில் கவனத்தை திருப்ப விடாதீர்கள் .


நீங்கள் நீங்களாக இருங்கள் .
தவறுகள் விடுவது தவறு உரைகளில் .. அதில் பிரச்சனையே இல்லை .உங்கள் நடத்தையிலோ  உரைகளிலோ நீங்கள் நீங்களாகவே  இருங்கள் .


இதை எழுதும்  போதே அதிக தன்னம்பிக்கை வருகிறது. 

Comments

calmmen said…
மிக உபயோகமான பதிவு , இது போன்று நிறைய எழுதுங்கள்


http://karurkirukkan.blogspot.com/2010/07/blog-post_6879.html
நிச்சயமாக ... மிகவும் நன்றி
shammi's blog said…
nice one keep writing and sharing

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் . இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது  வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் . ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின்  மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  . புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு .. முதலில் ரசித்த பாடல் ..... சந்திக்காத கண்களில் .... -பாடலை  கேட்க்க சந்திக்காத கண்களில் இன்பங்கள்  செய்ய போகிறேன்  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்  பெய்யப்போகிறேன் ... குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிம...