ஏவுகணைகளுக்கு எதிராக Iron dome இஸ்ரேலின் தாக்குதலில், பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்ட செய்திகளை எல்லாம் பார்த்திருப்போம். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனின் ஹமாஸ் ராணுவம் 1000-2000 வரையான ஏவுகணைகளை இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகள் மீது ஏவியது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய மக்களின் குடியிருப்பு பகுதியில், நகரப் பகுதியில், எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது. இஸ்ரேலிய மக்கள் சிலர் வானவேடிக்கை பார்ப்பது போல வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! ஹமாஸ் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் தரையைத் தொடாமல் வானத்திலேயே வெடித்துக் கொண்டிருந்தது! WATCH as the Iron Dome Aerial Defense System intercepts rockets over southern Israel: pic.twitter.com/xUz3bMuTzz — Israel Defense Forces (@IDF) May 12, 2021 இத்தனைக்கும், Iron dome எனப்படும் இஸ்ரேலின் இரும்புப் பாதுகாப்புக் கேடயம் தங்களைப் பாதுகாக்கிறது என்று மக்களுக்கு நம்பிக்கை. அதென்ன Iron dome! யூதர்களின் உழைப்பைப் போல, நாட்டுப் பற்றைப் போல, விவசாயம் முதல் போர் வரை தொழிநுட்பங்களுக்கும் பெயர் போனது யூதர்களின் இஸ்ரேல். வறண்ட நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள்.