'விழியும் விழியும் நெருங்கும் பொழுது' எனும் பாடலை மிகவும் பிடிக்கும். வித்தியாசாகரின் இசையில் வரிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அறிவுமதியின் வரிகள் இன்னும் பிடிக்கும். அதில் ஒரு வரிக்கு இப்படியொரு விளக்கம் பேஸ்புக்கில் படிச்சேன். \\\ ’விழியும் விழியும் நெருங்கும் பொழுது’ - சதுரங்கம் படப்பாடல். கவிஞர் அறிவுமதி எழுதியது. அதில் நாயகன் பாடும் ஒரு வரி: ‘இமையில் நிலவு நுழையும் பொழுது’ இரவு நேரத்தைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார் என்று எண்ணினேன். ஒரு சந்தேகமும் வந்தது. “இது உறவின்போது பாடப்படும் பாடல். நாயகியின் கண்களில் நிலவு தெரிகிறதென்றால்.. வெளியிலா நடக்கிறது கலவி? அல்லது பால்கனியோ..” என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் கவிஞர் சொன்ன விளக்கம் கேட்டு அசந்துவிட்டேன். அதாவது.. கிறக்கத்தில் இருக்கும்போது, நாயகியின் கண் கருமணிகள் மேல் செல்வதால்.. கண்ணைப் பார்க்கும்போது நிலவைப் போலவே இருக்குமாம்! - Parisal Krishna Kumar \\