Saturday, September 25, 2010

குவாண்டம் சூசயிட்

பல்கலைக்கழக ஆய்வாளர் Max Tegmark  என்பவரால் இது 1997 இல் உலகின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது .ஒருவர்  துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்க்கொலை  தயாராக உள்ளார் . 


துப்பாக்கி மணிக்கூட்டு திசைக்கு  எதிராக சுழன்றால் சுடாது , மணிக்கூடு திசையில் சுழன்றால் சுடும் . தற்கொலை செய்பவர் முதல் தரம் சுடுகிறார் துப்பாக்கி இடது பக்கம் சுழல்கிறது சுடவில்லை .இரண்டாவது தடவையும் சுடவில்லை .மூன்றாவது தடவையும் சுடவில்லை . 


மீண்டும் ஆரம்பத்திற்கு சென்றால் , அதாவது தன்னை தானே சுட ஆரம்பிக்கும் முதல் :- 
முதல் தடவை சுடும் போதே இறந்து விடுகிறார் .


பொறுங்கள் .....


முதலில் இறக்கவில்லை , இரண்டாவது சந்தர்ப்பத்தில் ஆரம்பத்திலேயே இறந்து விடுகிறார் . அதெப்படி இரண்டும் சாத்தியம் ?
அதாவது ஒவ்வொரு தடவை சுடும் போதும் உலகம் இரண்டாக பிரிகிறது . இது தான் நாம் எடுக்கும் தீர்மானங்களை ஒவ்வொரு நொடியும் நாமே தீர்மானிக்கிறோம் என்பது . ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை . அதாவது ஒருவர் உயிரோயல்லாத போது அவரின் பிரதி  உயிரோடு இருக்கலாம் . இதை பற்றி தான் 12 பி திரைப்படத்துடன் விளக்கி எழுதி இருந்தேன் .குவாண்டம் துணிக்கைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சிறிய துணிக்கைகள் . அவை நிலையானவை அல்ல . ஆனால் இவற்றை இன்னும் பரிசோதனை மூலம் அறிய முடியவில்லை .Wednesday, September 22, 2010

எந்திரன் - சரியாக போய் சேருமா ?

உயர் தொழில்நுட்பத்தில் ஒரு திரைப்படம் அதிக செலவில் எடுக்கப்படும் போது வர்த்தக ரீதியில் அதை வெற்றியடைய செய்யும் கட்டாயத்தில் தயாரிப்பாளர் இருக்க(அதில் தவறில்லை ) , ஷங்கர்  மீதான விமர்சனங்களும் ஒரு புறம் இருக்க , தமிழில் அறிவியல் திரைப்படம் எனும் கோணத்தில் பார்க்கும் போது அனைத்தையும் உடைத்துப்போட்டு விடுகிறது இத்திரைப்படம் .

தமிழ் அறிவியல் எழுத்தில் எதிர்காலமாகவும் நிஜத்தில்  இறந்தகாலமாக திகழும்  என் இனிய எழுத்தாளர் சுஜாதாவின் கதை "என்  இனிய இயந்திரா" , எந்திரன் திரைப்படமாக  பரிணாம வளர்ச்சி அடைந்ததன் விளைவு  பட்டி தொட்டி எங்கும் குப்பன் ,சுப்பன் வரை எந்திரனையும் எந்திரன் பற்றிய அறிவியலையும் எடுத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை .ஆனால் அந்த எந்திரன் ரஜனிகாந்தாக செல்லுமா அல்லது தொழிநுட்பப நிஜ எந்திரனாக அறிவியல்  சார்ந்து  செல்லுமா என்பதே இன்றைய கேள்வி .


அறிவியல் திரைப்பட வெற்றிக்கு கோவில் படியில்  முட்டியால் நடந்து சென்ற ரசிகர்கள் ..


சுஜாதாவின் என் இனிய இயந்திராவில் ஹீரோ என்று யாரும் கிடையாது . சிபி ,நிலா ,ரவி , ஜீனோ கதாப்பாத்திரங்கள் ஜீவா எனும் நாட்டின் தலைவருக்கு எதிராக , அவரின் கொடுமைகளுக்கு எதிராக செயல்படுவது போல அந்த கதை நகர்கிறது . அந்த விஞ்ஞான புனைகதை 2022 இல் இடம் பெறுவது போல 1986 இல் எழுதியிருந்தார் . இதில் ஜீனோ ஒரு இயந்திர நாய் . முழுவது கணணி எந்திர மயம், இலக்கங்களிலேயே அனித்தும் இருக்கும் என பல விஞ்ஞான விளக்கங்கள் , கருத்துகள் என் இனிய இயந்திராவில் வாசிக்க வசிக்க இனிமையும் வியப்பும் நிறைந்திருக்கும் .

சுஜாதாவின் எழுத்து அறிவியலை அப்படியே பிரதிபலிப்பது மிக கடினம் . அப்படியே பிரதிபலிக்க முனைந்தாலும் தமிழ் திரையுலகம் மசாலா எனும் மந்திரன் கொண்டு அதை அழித்துவிடும்  . அதில் தவறும் இல்லை .தமிழர்களின் இன்றைய தேவை மசாலா தான் .. 7 பாடல்களை(35 நிமிடங்கள் ) திணிக்க வேண்டிய கட்டாயம் வேறு  இதில் .

ஆனால் சுஜாதா கதையும் ,அறிவியலும் திரைப்படத்தில் சிதைந்து போகலாம் . அறிவியல் படத்துக்கு படம் வெளி வர முதலே சிலர் கொடுத்த விமர்சனங்களும் , ஷங்கர்  ,ரஜனி மீதிருக்கும் வெறுப்புமோ இத்திரைப்படத்தை மறைத்தாலும் சுஜாதாவின் நூல்களுக்கு வழிகாட்டி விட்டதால் எந்திரன் தமிழ் அறிவியலில் நுழையும் . சுஜாதாவின் கனதியான எழுத்தை இத்திரைப்படம்  பாதியில் இழந்தது நிவர்த்தி செய்ய முடியாதது .


ஒரு வேளை இந்த திரைப்படம் வெறும் ரஜனி படமாக தமிழர்களை அடையலாம் . அவ்வாறான உத்திகளே படம் வெளிவர முதலே கையாளப்பட்டு வருகின்றன . இதுவரை அறிவியல் தொடர்புடைய எந்த நடவடிக்கையும் , விளம்பரமும்  இடம்பெறவில்லை .வெறும் பிரம்மாண்ட (செலவில் ) இயக்குனர் நாயகன் ஷங்கர் இந்த படத்தில் கூற வரும் செய்தியை சுஜாதா இல்லாமல் சரியாக பிரதிபலிப்பாரா என்பது சிந்திக்க வேண்டியது . சுஜாதாவின் எழுத்து பாமரனையும்  அறிவியல் தன்மையோடு சிந்திக்க வைக்கும் . அனைவரையும் சிந்திக்க வைக்கும் .

சுஜாதா வசன வாசனை  சில பட ற்றேயிலரின் பிரதி பலித்தது " என்ன நக்கலா ? சிட்டி இயந்திரன் "இல்லை நிக்கல் ,போல்ட் நட்டெல்லாம் நிக்கல் பண்ணது " என்று சொல்லும் .

வரவேற்க தக்க அறிவியல் திரைப்படம் , ரஜனியாலேயே இவளவு பிரபலம் , ஆனால் முழு ரஜனி படமாக, மசாலாவாக  மக்களை அடையாமல் விட்டால் நல்லது . ஆனால் இன்னும் இத்திரைப்பட பின்னணியில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாநாயகன் என் இனிய சுஜாதா ..

Wednesday, September 1, 2010

இந்துக்களும் பிரபஞ்ச கொள்கையும் - முடிவிலிப்பக்கங்கள்

மதம் என்ற பெயரில் பதிவு எழுத ஆரம்பிக்கிறேன் என்றவுடன் எனது எண்ணங்கள் மதங்களை திருபுபடுத்திய/திருபுபடித்திக்கொண்டிருக்கும் , தவறான எண்ணக்கருவில் உள்ளவர்களை , இழிவானவர்களை நினைவு படுத்துவதால் பிரபஞ்ச கோட்பாடு அடிப்படையில் எழுத்துகளை பதிகிறேன் .

மதங்களை உருவாக்கிய மனிதன் அதற்க்கு பெயரும் வைத்தான் என்று சொல்வதில் சந்தேகம் இல்லை . இந்து என்ற பெயரும் இதற்க்கு விதிவிலக்கல்ல ஆனால்  இந்து மதத்தின் உருவாக்கத்திற்கு எந்தவித கதைகளுமோ இல்லை .உரிமையாளரும் இல்லை . அது ஒரு விஞ்ஞான ரீதியாக முதலே விருத்தியடைந்த மனித இனம் .அதன் அடையாளம் .


உதாரணத்திற்கு இந்தியா ஆரியபட்டாவின் (பூச்சியத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்  ) காலத்தில் உலக நாடுகளை விடவும் மிகச்சிறந்த அபிவிருத்தி அடைந்த  நாடாக இருந்ததாக உலக வரலாறுகள் கூறுகின்றன . இதன் வீழ்ச்சிக்கு காரணம் புரோகித சூழ்ச்சிகளும் , சில சமூகத்தவரின் தன்னலம் கருதிய நடவடிக்கைகளும் சமயத்தின் போக்கையே  மாற்றிவிட்டது .  வெறுமனே பணமும் ,காவடிகளும் ,திருவிழாக்களும் , பரிகாரமும் பூஜைகளுக்குளும் அடங்கி விட்டது .

அதிகூடிய இலக்க பெறுமதிகளை பாவித்த எமது முன்னோர்களின் சரியான விஞ்ஞான பார்வை மேலைத்தேய அறிஞர்களாலேயே தற்ப்போது வெளியில் கொண்டுவரப்படுகிறது . முக்கியமாக பிரபஞ்ச கோட்பாடு எப்போதோ முன் வைக்கப்பட்டு விட்டது . கிறிஸ்துவுக்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட இந்த கோட்பாடு ரிக் வேதாவில் (Rig Veda 10:129 )மிகவும் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது . 


யாருக்கு தெரியும் ? யாரால் உறுதியாக கூற முடியும் ?
எப்படி தோற்றம் பெற்றது ? எங்கே? எப்போது ?
இறைவன் உருவாக்கத்தின் பின்னரான நாளில் தோன்றினாரா ?
யாருக்கு தெரியும் ? யாருக்கு உண்மை தெரியும் ?
எப்போது? எங்கே ? உருவாக்கம் நிகழ்ந்தது ?
இறைவனே செய்தானா ? இல்லை  செய்யவில்லையா ? 
அவர் மட்டும் , அங்கே , தெரியும் ,தெரிந்திருக்கலாம்
ஒரு வேளை அவனுக்கே  தெரியாமலே இருக்கலாம்  ..


இதில் விடைகளை விட கேள்விகளே அதிகம் ...... 
அயிங்ஸ்டேயினின் பிரபஞ்ச கோட்பாடு (Big Bang ) இதை உறுதிப்படுத்திகிறது . பிரபஞ்சத்தில் பாரிய வெடிப்பே அனைத்தின்  தோற்றத்துக்கும் அடிப்படை .


இவை அனைத்திற்கும், இந்த சிந்தனைக்கு  முக்கிய காரணம் இந்து சமயம் இனத்தவர்கள் மாத்திரமே உலகம் தோன்றி பல பில்லியன் வருடங்கள் என சுவடுகளில்  குறிப்பிட்டு உள்ளனர் . வேறு எவரும் எந்த மதமும் விஞ்ஞானத்துடன் ஒத்துப்போவதில்லை . இந்து சமயத்தில்  19 பிலியன்கள் முன்பே உலகம் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது . இது கிட்டத்தட்ட பிக் பாங் இடம்பெற்ற ஆண்டுடன்(12 தொடக்கம் , 19 பிலியன் ) நெருக்கமானது .


பில்லியன் எனும் பாரிய பெறுமதியை இந்துக்கள் பயன்படுத்தியமை வானவியலாலர்களை ஆச்சரிய படுத்தி உள்ளது . அப்போதே பல பில்லியன் களுள் நமது பூமியும் ஒன்று என்ற கோட்பாடு நிறுவப்பட்டதும்  அவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம் .

எமது முன்னோர்கள் சிந்தனைகள் இவ்வாறு திரிபடைந்து மதம் எனும் சாயல்கள் பூசி மதம் பிடித்து  நிற்க்கிறது மனித இனம் . அது வெறுமனே அறிவற்ற முட்டாள்த்தனத்தை தொடர்ந்து பின் பற்றுகிறது . சமயம் மதம் என்பதம் கோணம் முற்றிலும் வேறானது .  தொடரும் ......

தகவல்கள் அனைவரையும் சென்றடைய இன்ட்லியில் வாக்கை பதியுங்கள் .. நன்றி