அண்மையில் வெளியான மங்காத்தா பாடல்களில் மென்மையான பாடல்கள் இரண்டு ரசிக்க கூடியதாக இருந்தது . ஒன்று என் நண்பனே ,மற்றொன்று கண்ணாடி நீ கண் ஜாடை நான் . "என் நண்பனே" பாடலின் வரிகளுக்கு கவிஞர் வாலி பலம் ,பாடலுக்கு யுவனின் குரல் பலம் . கண்ணாடி நீ கண் ஜாடை நான் பாடலுக்கு நிரஞ்சன் பாரதியின் வரிகளில் சரணின் குரலும் ,பவதாரனியின் குரலும் சிறந்த மெல்லிசை பாடலை தந்திருக்கிறது . பாடலை கேட்க்க கண்ணாடி நீ கண் ஜாடை நான் என் வீடு நீ உன் ஜன்னல் நான் என் தேடல் நீ உன் தேவை நான் என் பாடல் நீ உன் வார்த்தை நான் என் பாதி நீ உன் பாதி நான் என் ஜீவன் நீ உன் தேகம் நான் என் கண்கள் நீ உன் வண்ணம் நான் என் உள்ளம் நீ உன் எண்ணம் நான் என் மேனி நீ உன் ஆடை நான் என் பேச்சு நீ உன் மேடை நான் என் பாதை நீ உன் பாதம் நான் என் தென்றல் நீ உன் வாசம் நான் நான் தான் நீ என்பதை சற்று வித்தியாசமாக வரிகளில் காதல் கலந்து இருக்கும் வரிகள் இவை . இதனை எழுதியவர் கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்கள். இவர் வேறு யாரும் அல்ல மகாகவி பாரதியாரின் இரத்தவழி உறவு . மகாகவியின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் . இந்த தலைமுறைக்கு ஏற்ற படி காதல் கல