Skip to main content

Posts

Showing posts from February, 2018

அம்மான் மகளே!

கஜூராஹோ சிற்பம் - காமுறுதல்  குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா குத்துவிளக்கு எரிகிற அறையில், ஒரு மிதமான வெம்மை இருக்கும். அந்த ஒளி தருகிற வெம்மை, அறையின் சுவர்களிலெல்லாம்  பட்டுத் தெறித்து, உடல்மீது அளவோடு வந்து இறங்கும். அப்படி இறங்கும் அந்த ஒளியின்  அழகுக்கு   முன்னால், தரித்திருக்கும் ஆடைகூடத் தோற்றுப்போகும். ஒளியை உடல் உடுத்திக்கொள்ள விரும்பும். காரணம், விளக்கு ஒளியில் மட்டுமே, பாதி உடலின் வடிவு இருளிலும், மீதி உடலின் வடிவு ஒளியிலும் வளைந்துகொடுக்கும் அழகைப் பார்க்கலாம். காற்றில், குத்துவிளக்கின் ஒளி கொஞ்சம்  அசைந்து துடிக்கையில், ஒளி உடலைத் துதிக்கும் அழகையும் பார்க்கலாம்.  அப்படிப்பட்ட அறையில், உறுதியான கால்களையுடைய கட்டில் இருக்கிறது. அதன்மீது, அன்னத்தின் இறகு, இலவம் பஞ்சு என ஐந்துவகை அடுக்குகளால் செய்யப்பட்ட மெத்தை இருக்கிறது. அந்தப் பஞ்சசயனத்துக்கு வெண்மை, வாசம் போல ஐந்து குணங்களும் இருக்கிறது. ஐந்துபுலன்களுக்கும் ஆசை வேராகும் மெத்தை. அந்தப

சாக்லேட் : Kiss me, I can read your lips.

சிலகாலங்களாகத் தொலைக்காட்சிகளில் காட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் விளம்பரங்கள் போட்டார்கள். சமூகத்தின் விருப்பங்களை மிகவும் கவனித்துச் செய்யப்பட்ட அந்த விளம்பரங்கள், சாக்லேட் விற்பனையை மேலும் உயர்த்தியது. குறிப்பாக, குடும்ப நிகழ்வுகள், உறவுகளை வைத்து உணர்வுபூர்வமான விளம்பரங்கள் எடுத்தார்கள். "மகிழ்ச்சியை இனிப்புடன் கொண்டாடுங்கள்" என்றார்கள்.  அதேநேரம், காமம் சார்ந்த உணர்வினை வைத்தும் மிக அழகாக விளம்பரப்படுத்தினார்கள். காமம் சார்ந்த உணர்வுநிலைகளை முன்னிலைப்படுத்திய விளம்பரங்களில், இன்பத்தைத் தேடுங்கள்(Discover) என்றார்கள். குறிப்பாக, அந்தப் பாடலும் அந்தக் குரலுமே நம் செவியின் வழியாக நம் உணர்வுநிலைகளைத் தூண்டிவிடப் போதுமானது.    அந்தப் பாடலின் வரிகள், ஒவ்வொரு விளம்பரங்களிலும் சிறு சிறு மாற்றங்களோடு வந்தது. Kiss me. I can  wet  your lips. And your fingertips. And happiness in your eyes. Kiss me. Close your eyes. Miss me. முத்தாடுதல், இதழில் ஈரம் சேர்த்தல், விரல்களை உண்ணுதல் , கண்களை மூடுதல், சுவைத்தல், இன்மையை உணர்தல், மீண்டும் முத்தாடுதல் என்று திரும்பத் திரு