ஒரு வரலாற்று நாவலின் இடையிலுள்ள சித்திரங்களைக் கற்பனையில் அடிக்கடி அசைத்துப் பார்த்திருப்போம். அவற்றுக்கு உருவம் கற்பித்த்திருப்போம். பார்க்காத உலகத்தைப் பார்க்கவேண்டும் என்கிற தீராத ஆசையின் விளைவு நம்மை அங்கெல்லாம் கொண்டுசெல்கிறது. அப்படியான நிமிடங்களைத் திரட்டி, கண்முன்னே கொண்டுவந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துவது என்பது எளிதான காரியமாக இருக்க முடியாது. சோர்வு நம்மை நெருங்காது சொல்ல அந்த 'மேஜிக்' பிடிபடவேண்டும். இதனை வெற்றிகரமாகச் செய்துவிட்டாலே சரித்திரப் படங்கள் வெற்றிப்படங்களாகும். வசந்தபாலனின் காவியத்தலைவன் செய்த 'பிரம்மாண்ட மேஜிக்' அதுதான். இது ஒரு கலர்புல் கலையின் கரைதொட்ட சினிமா. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் தமிழ்நாட்டில் நிறைய நாடக சபாக்கள் இயங்கின. அந்த நாடக சபாக்களைச் சேர்ந்த நடிகர்களின் வாழ்க்கை முறையை காதல்,நட்பு, பாசம் போன்ற இயல்பான உணர்ச்சிகளோடு சொல்லும் திரைப்படம். இவை படத்துக்கு வெறும் ஆதாரம் மட்டும்தான். நலல் சினிமாவின் அழகைப் பார்த்துத்தான் உணரவேண்டும். நாடகங்களைப் பற்றி நிறையப் புத்தகங்கள் படித்தும், வேறு வழிகளில் தகவல்கள்