Skip to main content

ஒக்டோபஸ்...

இந்த உலக கோப்பையில் ஸ்பெயின் வெல்லும் என கூறிய அக்டோபஸ் மிகவும் பிரபலம் . இந்த விடயம் அந்த அக்டோபஸ்க்கு தெரியுமோ தெரியா ? இருந்தாலும் இந்த  அக்டோபஸ்கள் பற்றி உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் . அதனால் உங்களோடு பகிர்கிறேன் .

உங்கள் மனைவி உங்களை விட பல மடங்கு பெரியவளாக இருந்தால் எப்படி இருக்கும் . ஆனால் அக்டோபஸ் அதை பற்றி கவலைப்படுவதில்லை . ஆண் அக்டோபஸ் சில சென்டி மீட்டர்கள் நீளமும் சில கிராம் நிறையையுமே கொண்டிருக்கும் .

ஆனால் பெண் அக்டோபஸ் இறுதி 6 அடி (2 மீட்டர்கள் ) வரை வளரும் . கிட்டத்தட்ட 100 பவுண்ட்ஸ்(45 .4 கிலோ கிராம் ) எடை கொண்டவை . அதாவது ஆண் அக்டோபஸ் விட பெண் அக்டுபஸ் 40 ,000 மடங்கு நிறை கொண்டது .


Blue-ringed octopus male and female mating (இனப்பெருக்கம் )_



ஆனால் நல்ல வேளை முழு தொடர்புடன் இனப்பெருக்கம் நடப்பதில்லை . விசேடமாக வடிவமைக்கப்பட்ட கை போன்ற அமைப்பில் காணப்படும் நீண்ட வாழ போன்ற அமைப்பினூடு விந்துகளை பெண் அக்டோபசிடம்   ஒப்படைக்கும் .

pilow அக்டோபஸ் ,அக்டோபோடா(octopoda ) எனும் வகைகளிலேயே  சிறந்த உதாரணம் . அவைகள் ஒரு கிராமில் இருந்து நான்கு கிராம் வரையும் , கூடியதாக 270 கிலோக்ராம் வரையும் எடை கொண்டன கூட உள்ளன .


மட்டில் எனப்படும் (வெளிச்சபகுதி) பகுதியில் பற்றான தசைகள் காணப்படும் . அதில் தான் ஒர்கன்கள்  பாதுகாக்கப்படுகிறது .

நீல இரத்தம் 


சாதாரண மனித இரத்தம் போல அக்டோபஸ் இரத்தம்  இருப்பதில்லை . அவற்றின் இரத்தம் நீல நிறம் . குறைவான ஒட்சிசனே காணப்படும் இதனை நிவர்த்தி செய்ய உயர் இரத்த அழுத்தத்தை பேணும் .

மூன்று இதயம் 


இதற்காக அவற்றிக்கு மூன்று இருதயம் காணப்படும். இரு இதயங்கள் ஓட்சிசனை இரத்தத்தோடு  அனுப்பும் போது . மூட்ராவது இதயம் அதே நேரம் உடல் முழுவதும் இரத்தத்தை அனுப்பும் .

அக்டோபஸ் நிறங்கள் மாற்றும் ஆற்றல் உடையது . வரும் ஆபத்துகளில் இருந்து தப்பவே இவை நிறத்தை மாற்றுகின்றன .



இந்த அக்டோபஸ் மண்ணுடன் சேர்ந்திருப்பது இனம்காண்பது அரிது ..


அக்டோபசின் இன்னொரு சிறப்பு 
ஆபத்து வரும் போது புகை அல்லது மை போன்று வெளியே கக்கும் . இது மற்றவற்றை குழப்பத்துக்கு உள்ளாக்கும் .  .

 tyrosinase என்பதே அந்த புகையில் கலந்திருக்கும் . இது மனம் சுவை போன்றவற்றை வழங்கும்.


அக்டோபஸ் கண்ணும் கமெராவும் 


மனித கண்ணை பார்த்து கமெர படைத்திருந்தாலும் அவற்றால் பிடிக்கப்படும் படங்கள் கமேறா அசைந்தால் தெளிவாக இருக்காது . அதனை நிவர்த்தி செய்ய தற்ப்போது 8 லென்ஸ் கொண்ட கமெராக்கள் வந்துள்ளன . மிக தெளிவாக படங்கள் பிடிக்க . இது அக்டோபஸ் கண்களில் இருந்தே கண்டு பிடிக்கப்பட்டது . அக்டோபஸ் கண்களில் உள்ள லேயர்கள் தேவைக்கேற்றவாறு அசைந்து கொடுக்கும் .




 பெண் அக்டோபஸ் ஜாடி போன்ற அமைப்பினுள்ளேயே சென்று இருக்கும் . அது தான் கால்பந்தில் ஏதோ ஒரு அணியின் பெட்டிக்குள் போய் இருந்தது அக்டோபஸ் .


அக்டோபசின் அறிவை ஆராய இன்னும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமே இருக்கிறது . அடுத்த பதிவில் மேலும் அவற்றின் ஆற்றல் பற்றியும் எதிர்வு கூறுமா  என்றும் மீள் பிறப்பு பற்றி பார்ப்போம்


Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் . இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது  வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் . ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின்  மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  . புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு .. முதலில் ரசித்த பாடல் ..... சந்திக்காத கண்களில் .... -பாடலை  கேட்க்க சந்திக்காத கண்களில் இன்பங்கள்  செய்ய போகிறேன்  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்  பெய்யப்போகிறேன் ... குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிம...