பாரதி கண்ட புதுமைப்பெண்,பாரதியின் கனவு,பாரதியின் கவிதைகள் என மூச்சுக்கு ஒரு முறை பாரதி பற்றி பேசுகிறோம் .ஆனால் பெரும்பாலும் பாரதி கூறியதில் ஒரு பகுதியை தான் எடுத்துக்கொள்கிறோம் .அது எம் மனோநிலையின் வெளிப்பாடோ தெரியவில்லை .பாரதியின் நினைவு தினத்தில் ,அவன் எண்ணங்கள் இறக்காத தினத்தில் இதை பதிகிறேன் . பாரதியை ஒரு சாதாரண நுகர் பொருள் கலாச்சாரத்தில் சிக்கிய மனிதர்கள் வட்டத்துக்குள் சேர்க்க முடியாது .தன் குடும்பம் தன் வட்டம் என்று நினைக்காத "வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" என்ற வரிகளே பாரதியின் எண்ணத்தின் உயர்வை சொல்லும் . நேரடியாக விடயத்திற்கு வருகிறேன் . எப்போதும் நாம் பாரதி கூறியதில் பாதியை தான் நினைவில் வைத்திருக்கிறோம் .சில கருத்துகளை அப்படியே எம் தன்மைக்கு ஏற்ப மாற்றியிருக்கிறோம் .பாரதி கண்ட புதுமை பெண்களை உதாரணமாக சொல்லலாம் . முக்கியமாக "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று நாம் வெறுமனே கூறுவதுண்டு .பாரதி கூறியது இப்படி சொல்ல கூடாது என்றே ! புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்