அமானுஷ்ய சக்தி - கனவு உலகம் -தொடர் 2

சென்ற பதிவில் இந்த ஐந்து புலன்களின் ஊடான உலகத்தொடர்ப்பையும் தாண்டி ஒரு வித சக்தி ,அது ஆறாவது உணர்வாக ஒரு வித அமானுஷ்ய சக்தி இருப்பது பற்றி பார்த்தோம் . உதாரணமாக ஒருவரை நினைக்கும் போது அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும்.. .முதலாவது பதிவு வாசிக்க :- அமானுஷ்யம் - ESP 1 முதலாவது பதிவுக்கு தந்த உற்ட்சாகத்திர்க்கு நன்றி வாசக நண்பர்களே :) ஆதிகாலம் தொட்டே இது நிலவி வந்தாலும் நவீன விஞ்ஞான ,மனோதத்துவ முறையில் இருபதாம் நூற்றாண்டில் முதற்ப்பகுதியிலேயே டியுக் பல்கலைக்கழக பேராசிரியர்,பிரபல அமானுஷ்ய தேடல் விஞ்ஞானி( paranormal research ) J.B. Rhine என்பவரால் இது 1934 இல் அறிமுகப்படுத்தப்பட்டது . கூடுதலாக அனைவரிடமும் காணப்படும் ஒன்று ,அதை நாம் அன்றாடம் அனுபவிக்கிறோம் என சிலரும் , அது ஒரு வித மனோதத்துவ சக்தி கடத்தப்படும் நிலை எனவும் அதை சிலரால் மட்டுமே செய்ய முடியும் எனவும் கூறுகின்றனர் . ஆனால் சிலருக்கு சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது . இது இரு வித சாதாரண ஒளி , எக்ஸ் ரே கதிர்கள் கடத்தப்படுவது போல சாதாரண விடயம் எனவும் ஆனால் இதை விஞ்ஞான ரீதியில் இன்னும்