வெற்பிடை யாம் கொய்து நாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது. சுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு. ஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது. ஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடி