'சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள்' என்ற முதலாவது பதிவு பொதுவானதாக அமைந்திருந்தது. மேலும் சில உதாரணங்கள், காரணங்களோடு, 'உள்ளம் துறந்தவன்' நாவலை முன்னிலைப்படுத்தி இரண்டாவது பதிவு.. ********************************************************************************* எதிர்பாராத தன்மைதான் அவள் சிறப்பம்சம். இத்தனைக்கும் அழகி என்று உடனே சொல்லிவிடமுடியாது. பத்து நிமிஷம் உற்றுப் பார்த்துப் பேசினால் அவள் உண்மை அழகு புலப்படும். உயரமும் இல்லாமல் குள்ளமும் இல்லாமல் கச்சிதமான உடலமைப்பு. இடக்கைப் பழக்கம், aquiline nose (டிக்க்ஷனரியைப் பாருங்கள்). எல்லாவற்றிலும் ஓரளவுக்கு ஆர்வம். எதில் ஆர்வம் என்பது தினம் தினம் மாறும். ஒருநாள் இகேபானா, ஒருநாள் கர்நாடக சங்கீதம், ஒருநாள் சூடான் நாட்டு பட்டினிக் குழந்தைகள். - சுஜாதா (உள்ளம் துறந்தவன்) மில்லியன் யூரோக்கள் பெறுமதியான தொழில் நிறுவனக் குழுமத்தின் உரிமையாளர் ராகவேந்தர். அவரின் அன்பிற்குரிய வளர்ப்பு மகள் மஞ்சரி. அந்நிறுவனத்தின் பெரும்பாலான ஷெயார்களை அவள் பேரிலேயே எழுதி வைத்துவிட்டார். ஏழையான அழகேசன் என்பவனைக் காதலிக்கிறாள். இந...