Skip to main content

Posts

Showing posts from April, 2016

உற்சவதேவி...

பறித்துக்கொண்ட அத்தனை உயர்வான மலர்களையும் சாமிக்கு வைத்துவிடும் ஓர் அழகிக்காக வாய்மூடி அழும் மொட்டுகளின் சலசலப்பில் உன் பெயர் கேட்கிறேன். உற்சவதேவி உனது தேக சுவாசத்தைக் கொண்டாடித் தீர்ப்பவைதான் மிச்சம் மீதமின்றிக் காலையில் நான் தரும் மென்முத்தங்கள். கொஞ்சம் கைகோர்த்து நட. வானத்துக்கு மாதங்களை அடைமொழியாக வைக்கலாம். வஞ்சனையில்லாத மனிதரின் தெருக்களுக்குப் போகலாம். வானவில்லின் மிகுதி அரைவட்டம் தேடித் திளைக்கலாம் வற்றாத நதியோடு ஓடி நாணலில் ஓய்வெடுப்போம் கொஞ்சம் கைகோர்த்து நட... உனக்காக நீல நிறக் கூழாங்கற்களை விழுங்கிய ஒருசில வெள்ளை நதிகள்கூட பார்த்து வைத்திருக்கிறேன்.அவசர யுகத்தின் சொந்தக்காரி போலே எங்கே ஓடுகிறாய் செவி சாய்த்துக் கேட்டால் உனது காதோர வெப்பம் மட்டும் போதுமென்று சொல்லக்கூடும் என் இருதய அறைகள். அவள் குழலை மிருதுவாய்க் கொத்தாகப் பற்றுவது என்பது அத்தனை நகரும் இரவுகளையும் துயரங்களையும் தொகுத்துக் கவிதை சேர்ப்பது போன்றது. காற்றும் முகராத விரலிடைப் பற்றுதல்கள் போதும். உன்னோடு உலாவுவது வெறும் எண்ணக்காடுகளாக இருந்தாலும் எனக்குச்

பனாமா பேப்பர்ஸ்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வாஷிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் புலனாய்வு இதழியலாளர்களின் சர்வதேச கூட்டியக்கமானது, உலகில் பெருமளவில் பணம் படைத்த பலருடைய இரகசிய தகவல்களையும் "பனாமா பேப்பர்ஸ்" என்று பெயரிட்டு வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணக்கசிவானது, உலகில் அதிக பணம் படைத்தவர்கள் அனைவரும் தங்களது பில்லியன் கணக்கிலான பணங்களை வரி கட்டாமல் எப்படி மறைத்து வைத்திருக்கிறார்கள் என மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. குறிப்பாக, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள்  என அதிக பணம் கொண்ட அனைவரையும் இந்தத் தகவல் கசிவு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதுவரை வெளியான தகவல்களின் படி  பீபா தலைவர் கியானி இன்பான்டினோ, மெஸ்ஸி, ஜாக்கி சான் போன்ற பிரபலங்களோடு சேர்த்து 143 அரசியல் பிரபலங்களில் 12 தலைவர்களும் உள்ளடங்குகிறார்கள். குறிப்பாக புட்டின், டேவிட் கமேரூன், நவாஸ் ஷரிப் உட்பட பல தலைவர்கள் தங்களது உறவினர்கள் பெயர்களில் நிறுவனங்கள் ஆரம்பித்து பெருமளவிலான பணங்களை முதலிட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த விவகாரத்தால் ஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகியிருக்கிறா