Skip to main content

Posts

Showing posts from March, 2011

எக்ஸ்ட்ரீம் சூப்பர் மூன் - மார்ச் 19 என்ன நடக்கும் ?அறிவியல் விளக்கம்

ஜப்பானில் ஏற்ப்பட்ட புவியதிர்வு மற்றும் சுனாமி தாக்கத்திற்கு பின்னர் அனைவரிடமும் கேள்வி எழுப்பி இருக்கும் செய்தி இந்த சந்திரன்  பூமிக்கு அருகில் நெருங்கி வரவிருக்கும்  செய்தி . இந்த நிகழ்வு  மார்ச் மாதம்  19 ஆம் திகதி இடம்பெறும் . இதன் விளைவாக தான் ஜெப்பானில் பூமியதிர்ச்சியும் ,ஆழிப்பேரலையும் ஏற்ப்பட்டது எனவும்  மார்ச் 19 ஆம் திகதி மிகப்பெரிய பூகம்பங்களும் சுனாமி அலைகளும் உலகம் முழுதும் ஏற்ப்படும் எனவும் சில  வானவியலாளர்கள்  கூறிவருகின்றனர்  . இதெல்லாம் உண்மையா ? ஜெப்பானில் ஏற்ப்பட்ட சுனாமிக்கும் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கும் சந்திரனும் தொடர்புண்டா ? வரலாற்றில் இப்படி நிகழ்ந்த போது ஏதாவது இதற்க்கு முதல் நடந்திருக்கிறதா? இந்த சூப்பர் மூன் என்றால் என்ன ? என்பவை பற்றி ஆராய்வோம் . சந்திரன் வழமையாக பூமியை சுற்றி எப்படி இயங்குகிறது ? சந்திரன் பூமியை சரியான வட்ட பாதையில் சுற்றுவதில்லை .நீள்வட்ட பாதையில் தான் சுற்றுகிறது . சந்திரனின்  நீள்வட்ட பாதையில் மற்றைய பக்கத்தை விட ஒருபக்கம் 31 ,000 மைல்கள் குறைவாகும் .பூமியிலிருந்து மிக தூரத்தில் இருக்கும் போது Apogee நிலையிலும் மிக நெருங