Thursday, February 24, 2011

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

முதலில் பாலியல் தெளிவூட்டும் இப்படி மன பக்குவம் அடைந்தவர்களுக்கான(18 +) படங்கள் எடுப்பதற்கு தைரியம் வேண்டும்.அதுவும் முக்கியமாக எமது சமுதாயம் இன்னும் பகுத்தறிவு ,மனப்பக்குவம் அடையாத நிலையில் .ஆனாலும் கவுதம் தெளிவாக சொல்லியிருக்கிறார் பக்குவநிலையை அடைந்தவர்களுக்கான படம் என்று .


பலரின் தவறான புரிதலுக்கு உள்ளான ஆரம்ப கதையின் சுருக்கம் .


சிறுவயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் வீராவிடம் சில வருடங்கள்  கழித்து இளம் பராயத்தில் ஏற்ப்படும் மனோநிலை மாற்றமே பல பிரச்சனைகளுக்கு வழிகோலுவதுடன் வாழ்க்கையையும் புரட்டிப்போடுகிறது .

சிறுவயதில் தாயை இழந்து ,தனது தந்தையால் பாலியல் வன்புணர்ச்சிக்கு,துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தப்படும் சமீரிட்க்கு(வீராவுக்கு அல்ல ) அவனது பதின்ம வயதில் (Teenage (13 )) அவன் மீது அக்கறை செலுத்தும் பக்கத்து வீட்டு பெண் மீனாட்சி என்பவருடன் பார்த்தவுடனேயே காதல் ஏற்ப்படுகிறது .

இந்த கொடுமைகளை தெரிந்துகொண்ட மீனாட்சி சமீரை காப்பாற்றி தன்னுடன் வைத்துக்கொள்கிறார் .சமீரின் பெயரை வீரா எனவும் மாற்றி அவனை வளர்ந்தார் .வீராவும் மீனாட்சி அம்மா என்று அழைக்க வீரா மீனாட்சி அம்மா உறவில் எந்த களங்கமும் இருக்கவில்லை .வீராவின் நடத்தைகளும் அமைதியாகவே இருந்தது .

 இளம்பருவத்தை அடைந்தபோது தனது சிறுவயதில் சமீராக இருந்த போது ஏற்ப்பட்ட பாலியல் கொடுமைகள் அவனை மீண்டும் சமீராக மாற்றுவதோடு மன அழுத்தம் ,பயம் ,எரிச்சலையும் உண்டாக்குகிறது .சிறுவயதிலேயே பாலியல் நடத்தையின் பால் தூண்டப்பட்ட சமீர் தன்னுடன் இருக்கும்  தான் காதலித்த பெண்ணாக மட்டுமே தெரியும் மீனாட்ச்சியுடன் கட்டாய உறவு வைத்துக்கொள்கிறான்.

தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை ,இனி அப்படி நடக்காது என கூறும் வீரவை புரிந்துகொள்ளாமல் ,ஒரு நல்ல மனநோய் மருத்துவரிடம் காட்டாமல் விட்டத்தில் இருந்து இல்லாத ஒருவரை இருப்பது போல கற்ப்பனை செய்தல்(Hallucinations ) போன்ற பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது .மிகுதியை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .

வீரா என்ற ஒரு மனிதனுக்குள் பல மன போராட்டங்கள் நடக்கிறது .சமீரிடம் இருந்து சில பெண்களை காப்பாற்றி வைத்திருக்கிறேன் என சமீரா ரெட்டியிடமும்  ,போலீசிடம் "நாயை கொன்னுட்டியே நீ எல்லாம் ஒரு மனுசனா" என்று சொல்லுமிடங்கள் வீராவின் குணத்தை தனித்து காட்டுகிறது .


முக்கியமாக படத்தின் ஒலிப்பதிவு ,ஒளிப்பதிவு அருமை.மனோஜ் பரமஹம்சா வின் ஓளிப்பதிவு சொல்லவா வேண்டும் . எந்தவித பின்னணி இசையும் இல்லாமல் இயற்க்கை சப்தங்களை வைத்து சிறப்பான ஒலிப்பதிவு .அதுவும் இறுதியில்  மழை காட்ச்சிகள் அருமை .

எந்தவித பெரிய நடிகர்களும் இல்லாமல் திரைக்கதையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து இயக்குனர் படமாக வெளிவந்திருக்கும்  நடுசி நாய்கள் கவுதம் மேனனின் முன்னைய மென்மையான படைப்புகளில் இருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது ..வாழ்த்துக்கள் கவுதம் மேனன் .

மனப்பக்குவம் அடைந்தவர்கள்  பார்க்கவேண்டிய படம் . இப்படி நமது கண்ணுக்கு தெரியாத பல நடக்கிறது என்பதை காட்டியுள்ள படம் . சிலது அல்ல பல . இந்தியாவில் 53 % மான சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்ப்பத்தப்படுகின்றனர் என அறிக்கைகள் கூறுகின்றன .முக்கியமாக நம்பிக்கைக்குரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் கூடுதல் .ஆனால்  பலர் முன்வந்து போலீசிடம் தெரிவிப்பதில்லை .

குறை -சில பாலியல் காட்ச்சிகள் குறைத்திருக்கலாம் .ஆனால் எந்த காட்ச்சியிலும் முகத்துக்கு கீழே கமெரா போகவில்லை .பாராட்டுக்கள் கவுதம் .
ஆனால் இதே படம் ஆங்கிலத்தில் வந்திருந்தால் மனம் ஏற்றுக்கொண்டிருக்கும் .!!!

கலாச்சாரம் கட்டுப்பாடு வக்கிரம் என்று கட்டுப்பாடு விதிக்கும் இடம் எயிட்ஸில் முதல் ஐந்துக்குள் உள்ளது .
இப்படி சொல்லி சொல்லியே தெளிவு அற்றவர்கள் ஆக்குவது இல்லாமல் செய்யப்பட வேண்டும் .


யதார்த்த சினிமா என்ற வகையில் சேர்க்க கூடிய படம் இது . படம் குப்பையில்லை .சமூகம் குப்பை என்பது மறுக்கமுடியாத உண்மை .அதை அப்படியே பிரதிபலித்திருக்கிறது இந்தப்படம் .


இந்தப்படத்தை உங்கள் பக்கம் இருந்து பார்க்கவேண்டாம் .மனநோய் பாதிக்கப்பட்ட வீராவின் பக்கம் இருந்து பாருங்கள் .அவனுக்கு பந்த பாசமோ அம்மா அப்பா உறவோ ஒன்றுமே தெரியாது .தயவு செய்து யாரும் உங்கள் மனதில் வைத்திருக்கும் வக்கிரங்களை கக்காதீர்கள். விமர்சனங்கள் வாசிக்க முதல் படம் பார்த்திருந்தால் இந்த தாய் மகன் உறவு என்ற சிந்தனை அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு வந்திருக்காது ..காரணம் அப்படியொன்ற இல்லை . படம் தெளிவாக விளங்கவில்லை என்றால் தெளிவாக்கி கொள்ளுங்கள் .
சில விமர்சனங்கள் ஏன் படைப்பை விமர்சிக்காமல் !! இயக்குனரை விமர்சிக்கின்றன ??. இதை தூக்கி பிடித்து எதிர்த்து தவறானது தான் என காட்ட முனைவது நீங்கள் . .


நடுநிசி நாய்கள் படத்தில் தெளிவில்லை .இப்படியோன்றும் நடப்பதில்லை என்றால் இந்த லிங்க்கை வாசிக்கவும் . இந்தப்படமே உங்களை பாதிக்கிறது என்றால் இந்த சிறுவர் துஷ்பிரயோகம் இவ்வளவு தூரம் அனைவரையும் பாதிக்கும் என்பதை தான் படம்  கூறுகிறது .
குடும்பத்தவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டியது . ஆனால் குடும்பமாக சென்று பார்க்காமல் தனியே சென்று பாருங்கள் .


படம் முடிந்த பின்பு இறுதியாக படத்தில் மருத்துவர் கூறுவதை கேளுங்கள் .பாதி பேர் முதலே எழுந்து வந்துவிட்டார்கள் .

Friday, February 18, 2011

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்

ந்த கடவுள் பேய் இரண்டும் சிறுவயதில் இருந்து குழந்தைகள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்கள் கிளப்பிவிட்ட புரளியாக இருந்தாலும் பேய்களின் பாதிப்பு வெளிநாடுகளில் நடந்தால் அவர்கள் வேற்று வழிகளை விட இப்போது அதற்கென்று  படித்த ஆய்வாளர்களை வைத்தே ஆராய்ச்சி  செய்கின்றனர் .

இதுவரை காரணம் தெரியாமல் இருந்திருக்கலாம் ,அதற்க்கான விஞ்ஞான அறிவியல் விளக்கங்களை கொஞ்சம் ஆராய்வோமே .

பேய் அடித்தல் அல்லது பிடித்தல் என்று சொல்லுமிடங்களில் ஆய்வாளர்கள் மின்காந்த சக்தியை அளந்து பார்த்திருக்கிறார்கள் . அதில் கிடைத்த அளவு  சாதாரண இடங்களில் இருக்கும் மின்காந்த சக்தியின் அளவை விட மிக அதிகம் . வழமைக்கு மாறான மிகப்பெரிய மாற்றம் என்றும் சொல்லலாம் . இது அருகில் இருக்கும் மின் சாதங்களில் இருந்து வரலாம் அல்லது பூமியின் காந்த சக்தியின் பாகமாக இருக்கலாம்.

ஆனாலும் சில ஆய்வாளர்கள் அதாவது Paranormal Investigators என்று சொல்லப்படுபவர்கள் .இது ஒரு அமானுஷ்ய சக்தி அதாவது Supernatural இருப்பதற்கான சான்று என்றும் பேய்கள் தான் இதை தோற்றுவிக்கின்றன என்று கூறுகிறார்கள் .

பொய்யோ உண்மையோ ஆனால் நாம் அனுபவித்திருக்கிறோம் அல்லவா சரியான விளக்கம் வரும் வரை அலசுவோம் . 

சிலரின் கருத்து இந்த மின்காந்த அலைகள் மனித மூளையினுள் ஊடறுக்கின்றன என்பதே . ஆனா படியால் தானே எந்த வித உடல் பாதிப்பும் இல்லாமல் உணர மட்டும் முடிகிறது . Hallucinations ,Dizziness அல்லது வேறு பல நரம்பியல் சம்மந்தமான பிரச்சனைகள் போன்றன இதனால் தான் ஏற்ப்படுகிறது . 

இந்த Hallucinations என்றால் நேரில் நடக்கும் விஷயம் போல உணர்வுகள் ,புலன்கள் இருக்கும்  ஆனால் மனத்தால் தோற்றுவிக்கப்படுவது .

உதாரணமாக அண்மையில் நீங்கள் விரும்பிய ஒருவர் இறந்திருந்தால் அவரின்  குரல் கேட்டல் ,அல்லது தெளிவாக அவரை பார்க்க கூடியதாக இருக்கும் .

இந்த Dizziness என்பது மயக்கம் ,அல்லது உறுதியற்ற தன்மை ,அறை சுழல்வது போல உணர்தல் போன்றன .

ஆனால் ஏன் இரவில் மட்டும் பேயின் தாக்கம் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதில் இதிலேயே இருக்கிறது .


இந்த சூரிய காற்று பூமியின் மின்காந்த அலைகளுடன் குறுக்கிடுகிறது .பூமியின் மின்காந்த சக்தி இரவில் வெளியில் விரிகிறது .மேலே உள்ள படம் தெளிவாக விளக்கும் .

இது தான் மனிதர்களுடைய மூளையில் மிகப்பெரும் தாக்கத்தை செலுத்துவன.


மேலும் பல பரிசோதனைகளில் Infrasound எனப்படும் 20 Hz இலும் குறைந்த ஒலி அலைகள் தான் இப்படி பிகளுடனான மனித தொடர்ப்புக்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது . இந்த சத்தங்கள் தான் கண்களினூடு அதிர்வுகளை ஏற்ப்படுத்தி இல்லாத ஒரு விடயத்தை பார்க்க வைக்கிறது என்கிறது ஒரு ஆய்வு .

உண்மையில் சாதாரண மனித காதுக்கு 20 Hz க்கு கீழே உள்ள ஒலிகள் கேட்பதில்லை . அதனால் தான் கேட்பதை விட அதன் விளைவுகள் சாதராண மக்களை பாதிக்கின்றன  .  

ஆனாலும் ஒரு இடத்தில் ஆய்வாளர்கள் இந்த சிறிய ஒலி உருவான  இடத்தையும் கண்டுபிடித்தார்கள். அது மின் விசிறியில் இருந்து வந்தது .அந்த மின்விசிறியை திருத்தியவுடன் அந்த சிறிய ஒளியும் இல்லாமல் போனது .அதன் பின்னர் அந்த அறையில் இருந்தவர்களுக்கு பேய் அறிகுறிகள் தென்படவில்லை .("The Ghost in the Machine" by Vic Tandy and Tony Lawrence )

பிடிச்சிருந்தா கருத்து சொல்லுங்க ..தொடர்ந்து எழுதலாம் .. தொடரும் ...

Source
http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003093.htm -Dizziness
http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003258.htm -Hallucinations
http://en.wikipedia.org/wiki/Infrasound -Infrasound

Thursday, February 17, 2011

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

//அர்த்தமுள்ள இந்துமதத்தின் விளக்கத்தையும் அதனோடு விஞ்ஞான விளக்கத்தையும் ஆராய்ந்து எழுதும் 8 ஆவது பதிவு //
முன்னைய ஏழு பதிவுகள் : அழுத்துக 

வேறு எல்லா மதங்களும் தமது இறைவன் பிறந்த நாளை அல்லது அதனோடு ஒட்டிய நாளை பிறந்த தினமாக/புதுவருடமாக  கொண்டாடும் போது தமிழன் உழவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உழவர் திருநாளாக தைப்பொங்கலை கொண்டாடி வருகிறான் . தற்ப்போது உழவர்களுக்கு மரியாதை இல்லை என்பதும் மரியாதை கொடுக்கும் சீனா எப்படி வளர்ந்திருக்கிறது என்றும் பார்த்தாலே தெரியும் .

இந்த தைப்பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது . இந்த நான்கையும்  பற்றி பலர் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர் .

போகி நாள் என்பதை "போக்கி" நாள் என்கிறார்கள் . அதாவது வீட்டில் உள்ள கழிவுப்பொருட்கள் பழையனவற்றை போக்கும் நாள் என்கிறார்கள் .இது முதலாவது தவறு . 

எப்போதும் சுத்தப்படுத்தும் நாளை ஒரு திருநாளாக கொண்டாடியதில்லை .இதென்ன உழவர் சம்மந்தமான நாளில் சம்மந்தமே இல்லாமல் இந்த போகி வருகிறது என சிந்தித்து பார்த்ததில்லையா .

"போகி" என்ற வார்த்தையை தெளிவாக கவனித்தால் தெளிவு பிறக்கலாம் . விளைச்சல் என்பது போகம் . போகத்துக்குரியவன் நிலத்தின்  சொந்தக்காரன் . அதனால் தான் அந்த விழா நிலம் உள்ளவர்கள் வீட்டில் நடக்கும் .

போகத்துக்குரியவனின் விழா "போகி" விழா .


வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிக்கு உள்ள விழா பொங்கல் விழா ,அவனுக்கு பயன்படும் மாடுகளுக்கான விழா மாட்டுப்பொங்கல் விழா .

அந்த உணவை பகிர்ந்துகொள்ளும் நிலமும் இல்லாத ,விவசாயமும் செய்யாத போது மக்களின் விழா "காணும் பொங்கல்" விழா .

கவனித்துப்பார்த்தால் இது தான் சரியான வரிசை

நிலத்துக்குரியவன் 
விவசாயி 
காளைமாடு 
பொதுமக்கள் 

இந்த ஒழுங்கு பொருத்தமாக வரும் . இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த தமிழன் சூரியனுக்கு நன்றி செலுத்த ,உழவனுக்கு நன்றி செலுத்த கொண்டாடிய அர்த்தமுள்ள விழா இது . 

Wednesday, February 16, 2011

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

//இலங்கையில் பல மசாலா படங்களை நடிகர்களுக்காக அவர்கள் ரசிகர்களுக்காக வெளியிடும் திரையரங்குகள் இதை வெளியிடாததால் ராதாமோகனின் "பயணம்" பார்க்கும் ஆர்வத்தில் திருட்டு  வி சி டியில் பார்த்த அனுபவம் .DVD வந்ததும் ஒளிப்பதிவை  ரசிப்பதற்கு மீண்டும் பார்க்க வேண்டும் //

பிரகாஷ் ராஜின் பணச்செலவில் ராதாமோகன் வேகமாகவும் விறுவிறுப்புடனும் தமிழ் சினிமா காணாத, காட்டாத நிலைக்கு  விமானத்தில் பட குழுவுடன் சேர்ந்து கூட்டிச்சென்றுருக்கிறார் . இடையிடையே பயணத்துக்குள் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் பயணத்தையும் சேர்த்து நகைச்சுவையாக கேலியான தமிழ் சினிமாவையும் பார்த்த படியே பயத்துடன் சிரிப்பு  கலந்த  பயணம் இனிது .


சென்னையில் இருந்து டெல்கி செல்லும் பயணிகளை பாகிஸ்தான் கடத்திச்செல்லும் தீவிரவாதிகள் யூசுப் கான் எனும் இன்னொரு தீவிரவாதியை விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்து தமது கோரிக்கையை முன் வைக்கின்றனர் . இந்த வழமையான சினிமா திரைக்கதையில் யதார்த்தமான  மாற்றம் ஏற்ப்படுகிறது .அது ராதாமோகனின் சாமர்த்தியம் . இடையே தீவிரவாதி சுட்டதில் விமான கட்டுப்பாட்டில் பாதிப்பு ஏற்ப்பட்டு திருப்பதியில் தரையிறக்கப்படுகிறது . மிகுதி திரைக்கதையை வேகமாக திருப்பிய திருப்பங்களை  படத்தில் பாருங்கள் .

விமானத்துக்குள் ,வெளியில் ,பத்திரிக்கை  நிருபர்கள் என பல கோணங்களில் கதையை ,திரைக்கதையை கச்சிதமாக கொண்டு சென்றுள்ளனர் .திரைக்கதை யதார்த்தமாக இருக்க முயற்சி செய்துள்ள இயக்குனர் ராதாமோகனிட்க்கு  பாராட்டுகள் .


இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் எனும் தமிழ் சினிமா வட்டம்  இல்லாதிருந்தும் படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களும் மனதில் ஒட்டிக்கொள்கின்றன ,கூடவே திரைக்கதையும் ஒரு பாத்திரமாக .நாகர்ஜுன் ,பிரகாஷ்ராஜ் ,டீலா நோ டீலா ரிஷி ,சனாகான் ,தலைவாசல் விஜய் ,பாஸ்கர் ,ரமணி VS ரமணி புகழ் பப்லு என அனைவருமே இதில் ஹீரோக்கள் . இது படத்திற்கு மிகப்பெரிய வெற்றி .


ஒரு சினிமா நடிகரின் முகத்திரையை எம்மை அனுபவிக்க வைப்பதன் மூலம் கிழித்து எறிந்திருக்கிறார்  ராதாமோகன் . சினிமாவில்  நடிக்கும் ஹீரோவிடம் இருந்து நிஜ வாழ்க்கையில் ஹீரோயிசத்தை எதிர்பார்க்கும் ஒரு சாதாரண ரசிகனையும் கரப்பான் பூச்சிக்கே பயப்படும் ,அந்த நிஜ வாழ்க்கையில் ஹீரோ அல்லாத நிழல் வாழ்க்கை ஹீரோவையும் தனியே காட்டியிருக்கிறார் . 

ஒரு பயணியாக வரும் குமாரவேல் ஜோசியராக வரும் பாலாவுக்கு அண்மையில் இருந்து பயணிக்கிறார் . ஏன் தம்பி தீவிரவாதிகளிடன் கோவப்படுகிறாய் என்று ஜோசியன் கேட்க்க ,உங்களை மாதிரி ஜோசியம் படிச்சிருந்தா பரவாயில்லை ,காந்தியையும் கார்ல் மாக்சையும் படிச்சா இப்பிடி தான் என்று கூறுமிடம் அருமை .தனித்து தெரியும் வசனம் எழுதியவருக்கு பாராட்ட வேண்டும் .

 படத்தில் நடிக்கும் நிஜ ஹீரோ தீவிரவாதிகளை பார்த்து பயந்துகொண்டிருக்க 
சாம்ஸ் ஹீரோவை பார்த்து : ஏதோ பிளான் பண்றீங்க ? புரியுது ..அஞ்சே அஞ்சு பேர் தான் சேர் .."நீங்க பாத்தா சயிலேன்ட் பாஞ்சா வயலேன்ட் " இது உங்க படத்திலை நீங்க சொன்ன பஞ்ச சேர் - பப்லுவின் முகபாவமும் ,சாம்சின் நடிப்புமே வயிறுகுலுங்க சிரிக்க வைத்தது .

ஜோயிசர்:-சாமி கோயில் இதெல்லாம் இல்லைன்னா ஜனங்க  என்ன பண்ணுவாங்க சொல்லு ?  
குமாரவேல் :-தானா உழைச்சு முன்னுக்கு வந்திருப்பாங்க .... எனும் வசனங்களும் வசனகர்த்தாவின் அடையாளம் .

இவ்வளவு விடையங்களை தாண்டி அனைத்தையும் நிழல்ப்படம் போல மனதில் பிடித்து வைத்திருக்கிறது மனது .பயணங்களில் மேடுபள்ளங்கள் இருந்தாலும் அதை விட்டு விட்டு பயணத்தை மாத்திரம் ரசிப்போம் இல்லையா அதே போல குறைகளை விட்டு தமிழுக்கு  வந்திருக்கும் புதிய சினிமாவை வரவேற்ப்போம் .. நல்ல சுவாரசியமான பயணம் .

Tuesday, February 15, 2011

கலிலியோ கலிலி - வானவியல் அறிவியலின் ஆரம்பம்

வீன அறிவியலின் தந்தை ,அறிவியலுக்காய்  தன்னையே அர்ப்பணித்த அந்த மனிதன் கலிலியோ கலிலியின் பிறந்தநாள் இன்று (கி பி 1642 ). அறிவியலின் பிறப்பு என்றும் சொல்லலாம் .கலிலியோ இறந்த தினத்தன்று 300 ஆண்டுகள் கழித்து பிறந்தவர்  ஸ்டீபான் ஹவ்கிங் என்பது மேலதிக தகவல் .

சூரியனை தொடர்ந்து அவதானித்து சூரியப்புள்ளிகளை கண்டுபிடித்தவர் .அதனாலேயே தனது கண் பார்வையை இறுதிக்காலத்தில் இழந்தவர் . மதத்தின் கொடும்கோல் ஆட்சி நிலவிய வேளையிலும் தனது கொள்கைகளை நிரூபிக்க தவறாதவர் பற்றி பெரிதாக அறிந்திராதவை பற்றி பார்ப்போம் .

றிவியல் அவதானிகள் ,விஞ்ஞானிகள் வளர்ந்த காலம் அது . அவர்கள் மதங்கள் அழுத்தம் பிரயோகித்தன . விஞ்ஞான ,அறிவியல் வளர்ச்சியை அடக்கி ஒடுக்கிய காலம் அது .

அவரது முதல் கண்டுபிடிப்பு பைசா நகர தேவாலயங்களில் தொங்கிக்கொண்டிருந்த எண்ணெய் விளக்குகள் ஆடிக்கொண்டிருந்தன.அவர் அதன் நேரத்தை கணக்கிட்டார் .நேரத்தை கணக்கிட தனது நாடித்துடிப்பையே பயன்படுத்தினார் .அது பிற்காலத்தில் ஊசல் மணிக்கூடுகள் வர உதவின .

ஊசலை அதன் அலைவு  வைத்து(அலைவில் எந்த நிறையை ஊசலில் கட்டினாலும் ஒரே மாதிரி தான் அலைவு இருக்கும் ) மேலிருந்து கீழே போடும் நிறைகள் எதுவாக இருந்தாலும் அது கீழே விழ ஒரே நேரம் தான் என முடிவுக்கு வந்தார் .சிலர் நினைக்க கூடும் பாரமான பொருட்கள் தான் உடனே கீழே விழும் என்று .அவ்வாறே எல்லோரும் அப்படி நினைத்து இதை ஏற்க்கவில்லை . அதனை அவர் பரிசோதனை மூலம் அப்போதே மக்களுக்கு நிரூபித்தார் .

பைசா கோபுரத்தின் மேலே ஏறி நின்று இரு வேறு பாரமான பொருட்களை கீழே போட்டார் .இரண்டும் ஒரே நேரத்தில் விழுந்தது .

1609 இல் வானியல் தொலைக்காட்டியை கண்டுபிடித்து அதன் உருப்பெருக்கும் வலுவையும் அதிகரித்தார் .அதன் மூலம் வியாழனின் 4   உப கோள்களையும் கண்டு பிடித்தார் .அவரே சந்திரனில் மேல் புறத்தில்  இருக்கும் மலைகளையும் பள்ளங்களையும் கண்டறிந்தார் .

அவர் 1632 இல் பிரபஞ்சத்தின் பெரும் தொகுதிகள் எனும் ஆராய்ச்சியை வெளியிட்டார் . இவ்வளவு கண்டுபிடிப்புகளை செய்தவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்கிறீர்களா ? இல்லை என்பது தான் பதில் .
கலிலியோவின் நண்பன், இத்தாலியை சேர்ந்த Giordano bruno (ப்ருனோ )(கி பி 1548 -1600 ) எனும் வானவியலாளர் இந்த பிரபஞ்சம் முடிவிலி என்ற கூற்றை வெளியிட்டதற்கு கிறிஸ்தவ ஆட்ச்சியாளர்கள் அவரை தீ மூட்டி கொன்றனர் .


கலிலியோ கலிலுக்கு தெரிந்திருந்தது அந்த நேரத்தில் உண்மை எவ்வளவு ஆபத்தானது என்று . காரணம் கத்தோலிக்க தேவாலயங்கள் 1000 வருடங்களுக்கு மேலாக சூரியன்,மாற்ற கோள்கள் தான்  தான் பூமியை சுற்றி வருகிறது என கற்றுக்கொடுத்துக்கொண்டிருன்தனர் . 

ஆனால் பூமியையும் சூரியனையும் பிரபஞ்சத்தையும் அவதானித்து கலிலியோ கலிலி தான் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் . பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்று .அதனை முதலில் நண்பர்கள் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை . அப்படி உலகம் சூரியனை சுற்றுகிறது என்றாள் நாம் அதை உணர வேண்டும் என கேள்வி கேட்டனர் ?

ஒரு நீர் ஊற்றப்பட்டு  மீன் போடப்பட்ட குடுவையை சுற்றி அசைத்தால் மீன் அப்படியே தான் இருக்கும் . அதே போலவே பூமியின் அசைவு நம்மை கடினப்படுத்தாத வகையில் நிகழ்கிறது என விளக்கினார் .ஆனாலும் அந்த நேரம் இதை வெளியிடுவது ஆபத்து என்று கலிலியோவுக்கு தெரிந்திருந்தது .

அவர் தனது விளக்கங்களை புத்தகமாக வெளியிட்ட போது மக்களிடையே வரவேற்ப்பு பெற்றது . இந்த விடயம் போப்பை கோவத்துக்கு உள்ளாக்கியது  . கலிலியோவை வீட்டுக்காவலில் வைத்து அவரது படைப்புகளை தடுத்தனர் . அங்கேயே அவர் இறந்தார் .அவருக்கு போது மரண சடங்கு நடத்த தேவாலயம் அனுமதிக்கவில்லை . 

அந்த மனிதனின் இறுதி காலம் ,அறிவியலின்  ஆரம்பம் அன்று முடிந்து போனது . ஆனால் அறிவியலை மதங்களால் நிரந்தரமாக தடுக்கமுடியவில்லை என்பது நவீன காலத்தில் தெரிகிறது .(ஆனாலும் அண்மையில் டேஸ்ட் டியூப் பேபியை கண்டுபிடித்தவருக்கு நோபெல் பரிசு அளித்ததை வத்திக்கான்  எதிர்த்தது உண்மை )

படங்கள் :- Google

Sunday, February 13, 2011

காதல் - ஹார்மோன்களினூடு ஒரு பயணம் !

இந்த காதலை ஹார்மோன் செய்யும் கலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் . நீங்க காதலிக்காம இருந்தா கூட இந்த அடுத்த,பக்கத்துவீட்டு ,நண்பர்கள்  காதலை கவனித்தாலே போதும் எவ்வளவு அடிமையாகி இருக்கிறார்கள் என தெரியும். பேஸ்புக் வாலில் கவிதை கிறுக்கல்கள் ,எஸ் எம் எஸ் என அனைத்திலும் அதன் அடிமைத்தன வெளிப்பாடு பார்த்திருபீங்க .

எதனால் இப்படி ? ஏன் இவ்வாறான அடிமைத்தனம் என்ற கேள்விகளுக்கு சேதன இரசாயனத்தோட கொஞ்சம் அறிவியலையும் குழைத்து பயணம் செய்து பார்ப்போம் . எதிர்ப்பு பதிவல்ல ,காரணம் தெரிந்துகொள்வதில் தவறும் இல்லை .குருநாதர் சுஜாதா அவர்கள் ஆயுத எழுத்தில் எழுதிய வசனம் சுருக்கமாக இருக்கும் . 

காதல்னு ஒன்னு கிடையவே கிடையாது . நாம் பிறந்ததெல்லாம் , நாமண்ணா நான் நீ இதோ இந்த பச்சை சட்டை மஞ்ச சுடிதார் போலீஸ்காரர் எல்லாரும் பொறந்தது எதுக்காக நம்மோட நலத்துக்காக . இந்த காதல், பாட்டு, ஓவியம் ,கண்ணீர் இதெல்லாமே இருட்லையும் ,ஹோடேல்லையும் ,பெட்லையும் முடியிறது தானே .estrogen  testosterone Vasopressin  வெறும் ஒர்கனிக் கெமிஸ்ட்ரி . x கிரோமொசொம் y கிரோமொசொம் xx ,xy அவ்வளவு தான் மேட்டர்" .என்று முடித்திருப்பார் . இதை கொஞ்சம் விளக்கத்தோடு ஆராய்வோம் .

எதற்கும் அடிமையாகும் போது நடக்கும் மூளையில் ஏற்ப்படும் அதே இரசாயன மாற்றம் தான் காதலில் விழும் போதும் ஏற்ப்படுகிறது  .


Neurochemical (நரம்பியல் ) அடிப்படையிலான காதல்/அன்பு  ?


மூளையில் இருந்து வெளிவிடப்படும் இரசாயன மாற்றங்களாலேயே காதல் எனும் உணர்வு தூண்டப்படுகிறது .இது அனைவருக்கும் தெரியும் .மூன்று  பிரதான இரசாயன பதார்த்தங்களில் முதலாவதாக டோபமைன் டோபமினே(pleasure chemical )ஆரம்ப கால தீவிரமான காதல்/அன்போடு நெருங்கிய தொடர்புடையது . (Note :-According to Helen Fisher, anthropologist and well-known love researcher from Rutgers University )இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது இப்போது வெளிவிடப்படும் இந்த இரசாயன பதார்த்தம் போதைப்பொருள் பாவனையின் போதும் வெளிவிடப்படுகிறது . ஆரம்ப காதலின் படிமுறைகளில் அடிமைகள் போல இருப்பார்கள் . இதை பலரிடம் அவதானித்திருபீர்கள் .ஏன் நான் நீங்கள் அனைவரும் உணர்ந்தது .


Norepinephrine அதிரினலின் என்ன வேலையை செய்கிறதோ அதே வேலையை தான் செய்கிறது . இவை குளுகோஸை சுரந்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது . இருதய துடிப்பும் அதிகரிக்கிறது .இந்த இரண்டும் சேர்ந்து தீவிர சக்தியையும் ,தூக்கமின்மையையும் ,ஒரு விடயத்தில் கவனமின்மையையும் ஏற்ப்படுத்துகிறது . Note :- According to Helen Fisher, anthropologist and well-known love researcher from Rutgers University


நாம் ஏன் காதலில் விழுகிறோம் உடலில் எது இந்த செயல்ப்பாட்டை நிகழ்த்துகிறது என விரிவாக பார்ப்போம் . காதலில் முதலில் எது நீங்கள் விரும்பும் துணையை தீர்மானிக்கிறது ? பொருத்தமா அல்லது  pheromones (பரோமோன்ஸ்) எனப்படும் வெளிவிடப்படும் வாசனையா  என்பது பற்றியும் பார்ப்போம் .


இந்த இரசாயனங்கள் தான் எம் இனம்  நிலைத்திருக்கக் தேவையான இனப்பெருக்கத்தை நிகழ்த்துகிறது .அந்த தேவை முடிந்தவுடன் அதே இரசாயன மாற்றங்கள் அந்த குழந்தைகளை வளர்ப்பதட்க்கும் ஏற்றபடி எம்மை மாற்றுகிறது .


எது காதலில் விழ வைக்கிறது...... 
அனைவரது ஆழ மனதிலும் தமக்கான துணை பற்றி ஒரு ஓரத்தில் உருவம்/வரைபடம்  இருக்கும் . இதில் அவர்கள் பார்ப்பவர்களுடன் எது ஒத்துப்போகிறதோ அவர்களையே பெரும்பாலும் விரும்புகின்றனர் .


இதில் பல ஆராய்ச்சிகளின் படி முதலாவது தமது பெற்றோர்கள் போல அல்லது சிறுவயதில் இருந்து யாரை பார்த்து வளர்ந்தார்களோ அவர்கள் போல இருப்பவர்களை அவர்களை நினைவுபடுத்துபவர்கலையே மனம் தேர்வு செய்கிறது .


அடுத்தது இன்னொரு  ஆராய்ச்சி  தம்மை பிரதிபலிக்கும் உருவத்தை தான் நாம் தெரிவு செய்கிறோம் என  கூறிகிறது . ஒரு ஆணின் உருவத்தை எடுத்து ககனியில் அதை பெண் போல வடிவமைத்துவிட்டு பல பெண்களின் படங்களுடன் கலந்து கொடுத்த போது அதில் அவர்கள் மனதை அதிகம் கவர்ந்தது அவர்களின் படத்தை கணனியில் பெண்ணாக மாற்றிய படம் தான் .அவர்களால் அது தாம் தான் என உணரமுடியவில்லை. 


இந்த pheromones பற்றிய ஆராய்ச்சிகள் தான் காதல் பற்றிய ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்தவை . 1986 இல்  Chemical Senses Center ஆல் மனித வியர்வையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இவை எமது வியர்வை,உடலில் இருந்து வெளியேறும் வாசனைகளோடு தொடர்புபட்டது . நாம் இதை body smell என்று சொல்கிறோம். சில விலங்குகள் இவ்வாறு தான் இனப்பெருக்கம் செய்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் .


பாம்பும்  இவ்வாறு தான் இனப்பெருக்கம் செய்கிறது .பாம்பு தன் உடலில் இருந்து வாசனையை சுரக்கும் .அதை வைத்து தான் ஆண் பாம்பு தேடி வரும் . இதை தடுக்க தான் இந்துக்கள் பாம்பு புற்றுள் பால் ,முட்டை ஊற்றுகின்றனர் . இந்த வாசனை பாம்பின் உடலில் இருந்து வெளியேறும் வாசனையை இல்லாமல் செய்துவிடும் .


ஆனாலும் பல விலங்குகளுக்கு இதனை சுவாசிக்கவென சிறப்பான அமைப்பு(vomersonasal organ ) -VNO  மூக்கில் காணப்படுகிறது . மனிதர்களுக்கும் இந்த இயல்பு  இப்போது சில ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது  . இவையெல்லாம் இதுவரை தெரிந்திராமல் தானாகவே மூளை செயல்ப்படுத்தும்  வேலைகள் .


காதலில் இருக்கும் போது பல இரசாயன வேலைகள் ,மாற்றங்கள் நடக்கிறது . ஆராய்ச்சியாளர்கள் இன்னும் அவை காதலில் , நீண்ட கால காதலில் எவ்வாறு பங்களிக்கின்றன என்று ஆராய்கின்றனர் . 


ரொமாண்டிக் காதலில் ஆணும் பெண்ணும் உறவு வைத்துக்கொள்ளும் போது oxytocin எனும்  இரசாயன பதார்த்தம் சுரக்கிறது . இது தான் அவர்கள் காதலை ,உறவை மேலும் பலப்படுத்துகிறது  .Vasopressin நீண்ட கால உறவை தீர்மானிக்கும் . 


சில ஆராய்ச்சிகள்  இது ஆரோக்கியமான மன நிலையையும் உறவையும் பேண உதவுகிறது என கூறுகின்றன .Note :- According to researchers at the University of California, San Francisco


காதல்/அன்பு எமது மனதில் ஒரு பகுதி .இது ஜீன்கள் , குழந்தை பருவத்தில் இருந்து வளர்ப்புமுறை இதில் பாரிய செல்வாக்கு செலுத்துகிறது . 3 % ஆன விலங்குகள் தான் நாம் அமைத்திருப்பது போல குடும்ப முறையை அமைத்திருக்கிறது .அவற்றுள் எலியும் ஒன்று ..அதற்கும் காதல் வரும் ..


References
http://users.rcn.com/jkimball.ma.ultranet/BiologyPages/P/Pheromones.html
http://en.wikipedia.org/wiki/Dopamine  
http://en.wikipedia.org/wiki/Oxytocin  
http://en.wikipedia.org/wiki/லவ்
http://www.wisegeek.com/what-is-adrenaline.htm 
http://en.wikipedia.org/wiki/Norepinephrine
http://www.sensualism.com/love/loving-voles.html


pictures :-Google


அனைவருக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள் ....

Saturday, February 5, 2011

இமான் மலேகி(Realistic painter) - ஒரு ஓவியனின் ரசனை

நவீன ஓவியங்களை(Modern Arts) பெரிதாக ரசிப்பதில்லை . காரணம் ஒன்றுமே புரிவதில்லை அதை வரைந்தவர்  விளக்கினால் மட்டுமே விளங்கும்.

ஆனால் நான் பார்த்து பிரம்மித்த ஓவியங்கள் அப்படி அல்ல. சாதாரண கண்களுக்கு ரசிப்புத்தன்மை என்பதை விட வியப்பை தரக்கூடியது . ஓவியங்களில் பல வகைகள் இருக்கலாம் அதில் இமான் மலேகி  என்ற மிகச்சிறந்த ஓவியனை  Realistic painter  என்ற வகைக்குள் சேர்க்கலாம் .அதாவது ஒரு நிகழ்வை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் ஓவியங்கள் .  வியப்புக்கான காரணங்களை  பகிர்ந்துகொள்கிறேன் .
இந்த படத்தில் சுவரிலிருந்து தரை வரை வந்திருக்கும் நிழல் .சீமெந்து தரையின் மீது இருக்கும்  வெடிப்புகள் , சுவரில் இருக்கும் அழுக்குகள் ,மாலை வேளை அல்லது காலை வேளையில் வெயில் மரக்கிளைகள் இடையே  வரும் அழகு . தரையில் ஊற்றப்பட்டிருக்கும் நீர் சில இடங்களில் காய்ந்திருக்கிறது என ஒவ்வொன்றையும் ரசிக்கலாம் ..
அமைதியான பெண் போன்ற  முக பாவனை ,தோலில் இருக்கும் மென்மை,உடையில் இருக்கும் மடிப்புகள்,ஓரத்தில் இருக்கும் முடி ஆடைகளில் பட்டு தெறிக்கும் வெளிச்சம் .ஒரு பொருளை பிடித்திருக்கும் போது கை விரல்கள் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது .
மேலே இருக்கும் பெண் தலையில் அணிந்திருக்கும் துணியில் சூரிய ஒளிபட்டு அந்த துணியின் ஊடாக தெரிகிறது .முகத்தில்  சுருக்கம் இல்லாவிட்டாலும் தெரியும் முதுமைப்பருவம் . புத்தகத்தை திறக்கும் போது கை நரம்புகள் . ஆடையின் மடிப்புகள் . கீழே இருக்கும் இளமையான பெண்ணின் நீள் காட்ச்சட்டையில் உள்ள மடிப்புகள் . ஒவ்வொரு இழையையும் பார்த்து பார்த்து கீறியிருக்கிறார் .


இதே படத்தை இன்னும் கிட்டவாக பார்ததால் ஆடையை இழை இலையாக செதுக்கியிருக்கிறார் என எண்ணத்தோன்றும் . கையில் தெரியும் நாளங்கள் முதல்க்கொண்டு அனைத்தும் உண்மையான படமோ என எண்ணத்தோன்றும் .


நிழல்களிநூடு தெரியும் ஒளி ,செருப்பின் மீதிருக்கும் அழுக்கு .பூச்சாடியின் அடியில் இருக்கும் அழுக்கு . சுவரில் இருக்கும் கறை . செங்கல்களுக்கு இடையே இருக்கும் சீமெந்து பூச்சு . சில கட்கள் காலப்போக்கில் நிறம் மாறும் .அதை கூட அப்படியே வரைந்திருக்கிறார் . எதையோ கொறித்துக்கொண்டிருக்கும் குருவிகளில் நிழலை கூட கீறியிருக்கிறார் .


இப்படி ஒவ்வொரு படங்களையும் ரசித்துக்கொண்டிருக்கலாம் . 


மேலும் படங்களை பெரிதாக பார்க்க click here


வளர்ந்து வரும் ஈரானை சேர்ந்த இந்த பிரபலமான ஓவியனின் இணையத்தளம் :- Click here 

Wednesday, February 2, 2011

மதன் கார்க்கி : நெஞ்சுக்குள் பெய்திடும் தமிழ் மழை

இறுதியாக வெளியாகிய  பயணம் பாடலுக்கு கீழே செல்லவும் ...


பூச்சியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு என்று பைனரிக்குள் பூவாசத்தை கொண்டு வந்து தமிழையும் அழகாக தொழில்நுட்பத்தோடு ஒருமைப்படுத்தி என்னை மிகவும் கவர்ந்தவர் மதன் கார்க்கி . ஏன் பெரும்பாலானவர்கள் அறிந்துகொண்டதும் இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ என்ற இந்த பாடல் மூலம் தான் .

ஆனால் அவர் தான் கண்டேன் காதலே பட பாடல்  ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன் என்ற பாடலை எழுதினார் என்று பிறகு தான் தெரியும் .
ஆனால் அப்போதே அவர் புதிய ஆரம்பங்களை வரிகளுக்கு கொடுக்க எத்தணித்தது பாராட்டுக்குரியது.

மிதவை மனமே.. மிதவை மனமே..
என்னை முந்திச் செல்லாதே
என்று ஆரம்பிக்கப்பட்ட அந்த பாடல் இசையமைப்பாளர் வித்தியாசாகரின் வேண்டுகோளுக்கு இணங்க மாற்றியிருக்கிறார் .

எந்திரனில் தன் திறனை காட்டிய மதன் கார்க்கியின் பயணம் நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ விலும் தொடர்ந்தது . வரிகள் அனைத்தும் புதிது .ஏதோ ஒன்று இருக்கிறது வரிகளில்  . தமிழ் அழாகான மொழி என வெளிப்படுத்தும் எழுத்து , அவரின் பார்வையில் இருந்து பார்க்கும் போது ஆச்சரியம் .


ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி.. :)காதலர்களுக்கிடையேயான மௌன மொழியின் வெளிப்பாடு . தமிழில் மட்டுமே உள்ள  ல ள லகரங்கள் வைத்து எழுதும் போது ஒரு அழகு இருப்பது உணர்கிறது மனது . 


மாலை வேளை வேலை காட்டுதோ... 
நல்ல வேளை ஹரீஸ் ராகவேந்திரா பாடியதால் ள ல உச்சரிப்புகளை ,வரிகளின் அழகை உணரமுடிகிறது . உதித்நாராயணன் பாடியிருந்தால் என்ன ஆகிறது ?


இந்த  வரிகள் மீதிருந்த ஈர்ப்பு குறைய முதலே நெற்றிப்பொட்டில் பற்றிய எண்ணம்  எட்டுத்திக்கும் பரவ விரும்பும் பாடல் கவர்ந்தது . பாடலின் வரியும் சரி வார்த்தை பிரயோகமும் சரி .அனைத்தும் புதிது .facebook wall இலும் எங்கள் கொள்கை தீட்டினோம்  .. வித்தியாசமான சிந்தனை ஆனால் புதிய சிந்தனையும் கூட .. எனது பார்வையில் facebook wall தான் கொள்கை உள்ளவர்களுக்கு ஒரேயொரு வழி.

அதே கோ படத்தில் தான் இந்த பாடலும் ஏனோ குவியமில்லா 
..இந்த படத்தில் ஹீரோ படப்பிடிப்பாளர் என்பது பாடல் வரிகளில் தெரிகிறது . . நிச்சயம் காட்சி அமைப்பில் ஆனந்த் கலக்கியிருப்பார் . பாடல் ஒரு அழகான கவிதை போல மதனின் அழகான வரிகள் ,முக்கியமாக தமிழோடு திரையிலும் தெரியும் .

என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்


இந்த வரிகளை உச்சரிக்கும் போது தமிழ் இனிக்கிறது அடி மனதில் :)) ஆலாப் ராசுவின் உச்சரிப்பும் சரி பாடிய விதமும் சரி அனைத்தும் அருமை . 


இந்த பாடல்கள் அனைத்தும் பெரும்பாலானவர்கள் ரசித்திருப்பீர்கள் . அண்மையில் பயணம் திரைப்பட பாடல் .என்னை மிக மிக கவர்ந்த பாடல் ..


நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம்
வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம்
கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம்... 

பிறப்பில் இருந்து ஒரு மனிதனின் பயணம் .இந்த வரிகளின் அழகு இதை உணர்ந்து வாசித்து பாருங்கள் புரியும் .. புதிய சொற்க்கள் .. அனைத்தும் தமிழ் பாடல் வரிகளுக்கு புதிது .

இந்த பாடல் வரிகள் 

நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம்
வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம்
கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம்
முடியும்
பயணம்!
கனவுகள் குறைய இளமையின் பயணம்
காதல்கள் மறைய முதுமையின் பயணம்
ஊர்மறந்தொழிய மரணத்தின் பயணம்
முடியும்
பயணம்!
வானினைச் சேர தீயின் பயணம்!
பூமியைச் சேர நீரின் பயணம்!
வெற்றிடம் தேடும் காற்றின் பயணம்!
எல்லைகள் தேடும் வானின் பயணம்!
பாதை போகும் போக்கில்
பாதம் போகும் பயணம்!
முதலோ முடிவோ அறியா
கனவின் கனவில் பயணம்!
நாளைக் காலை காண
ஆயுள் ஏந்திப் பயணம்!
விடியும் விடியும் என்றே
முடியும் முடியும் பயணம்!
கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும்
உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும்
தனையிழந்து வெளியினில் தேடும்
மனிதனின் நெடும் பயணம்!
முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம்
கடைசியில் நான்கு மடங்குகள் கூடும்
முடிவடைந்த புள்ளியில் மீண்டும்
தொடங்கிடும் ஒரு பயணம்


இதுவரை தொடர்ந்து ஒரே வரிகளில் ஆரம்பித்த கவிஞர்கள் மத்தியில் தாமரை ,முத்துக்குமார் போன்றோர் பரிணமித்தாலும் அவர்களுக்குள்ளேயே மிகவும் வித்தியாசமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மதன் கார்க்கிக்கு நானும் ஒரு ரசிகனாய் ரசித்த வரிகள்,பாடல்கள் இவை  ..இது போன்ற ஆரோக்கியமான தமிழ் வரிகளை வரவேற்க்க வேண்டும் .