மானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில் மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில் கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம். கருநீலப் போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம். வைரமுத்து கண்ணாடியின் முன்நின்று (Katoptronophilia) காமத்தின் நுண்கலைகள் பயில்வது காதலைத் தூண்டும். அதேநேரம், அது உணர்வின் கவனத்தைத் திசை திருப்பாமல் இருப்பதும் முக்கியம். தனியே, கண்ணாடியில் எமது அழகைக் கடந்திருக்கிறோம். அப்படிக் கடக்கையில், ஒன்று அழகை மெச்சிக்கொள்வோம். இல்லையென்றால், தாழ்வுமனப்பான்மை தோன்றும். நம் அழகை நாமே மெச்சிக்கொள்வதன் தீவிர நிலை நார்சிஸம். இப்படித் துணையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொள்வதையும் நார்சிஸம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், காமத்தைச் சேர்ந்து கண்ணாடியில் பார்ப்பது ஒருவர் சம்பந்தப்பட்டது கிடையாது. எதுவுமே எல்லைக்குள் இருக்கும்வரை அழகு. கரை மீறாதவரை ஆழி அழகு. உள்ளக் காதலும் அப்படித்தான். எதிலும், நுண்கலை காண்பது காமத்துக்கு அழகு. புதுக் கலைகள் அழகு. சிலருக்குத் தம் உடல் பற்றிய அதிருப...