Skip to main content

வைரம் (தமிழ்) முத்து பிறந்த நாள் - வைரமுத்து

வைரமுத்து தமிழுக்கு கிடைத்த முத்து என்றே சொல்லலாம் . வைரமுத்து வந்த பின்பு  தான் கவிதை என்ற முறை மாறி பாடலுக்கேற்றவாறு வரிகள் எழுதும் முறைமை வந்தது . இன்று அவரின் பிறந்த நாள் ... ஜூலை  13

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .......


இளையராஜாவின் மிக மிக அருமையான இசை அமைப்பில் உருவானா சுஜாதா அவர்களே பீதொவனை மிஞ்சும் இசை என பாராட்டிய  பாடல் இது "ஒரு பொன் மாலை பொழுதே" அவரது முதல் பாடல் . இந்த முதல் பாடலே அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது .

அதிலும் இரவை பற்றிய இயற்க்கையுடன் கூடிய வர்ணனை எந்த காலத்தை சேர்ந்தவர்க்கும் பிடிக்கும் . அது போன்ற ஒரு உச்ச  கற்ப்பனை  பிரமிக்க வைக்கும் .

" வான மகள்  நானுகிறாள் "
வேறு உடை பூணுகிறாள் " 


என்ற  இரவின்  வருகையை வர்ணிக்கும் பாடல் மிகவும் பிடிக்கும்.


"வானம் எனக்கொரு போதி மரம்,
நாளும் எனக்கது சேதி தரும்"..

போன்ற வரிகள் முதல் பாடலிலேயே அவரை தூக்கி நிறுத்தியது . பின்னர் ரஹ்மானுடன் இணைந்த போது ரஹ்மான் பாடல்கள் வெற்றிக்கு வைரமுத்து மிக துணையாக இருந்தார் .

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் மிக அருமையான வரியாக
"அட உலகை  ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு "
வரஈன்னும் பிடித்தது ..

இடையில் ரஹ்மானும் வைரமுத்துவும் பிரிந்து ராவனாவில் சேர்ந்த  உடனேயே உசுரே போகுதேவில் கலக்கி விட்டனர் . பழைய வைரமுத்து ரஹ்மான் ஜோடியை உணர முடிந்தது .


காட்டு சிருக்கியிலும் பல வரிகளில் அருமை 


தண்டை அணிஞ்சவ
கொண்ட சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு
!



ஏர்கிழிச்ச தடத்துவழி
நீர் கிழிச்சு
போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு 



என்ன ஒரு எளிமையான வரிகள் ....எளிமையான உவமானம் ..


காதல் பாடல்களிலும் தவற விடவில்லை ...


நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்



அழகாக விஞ்ஞானத்துடன் காதலையும் கவிகளால் இணைத்திருப்பார் அது மிகவும் பிடிக்கும்.


காதல்சடு குடு குடு பாடலில் காதலை சரியாக இப்படி தான் வெளிப்படுத்த முடியுமென்ற கோணத்தை காட்டியவர் .... இந்த வரிகளும் மிகவும் பிடிக்கும் .


உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது



பெண் வர்ணனையிலும் சளைத்தவர் அல்ல .. எத்தனை பாடல்கள் இருந்தும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடல் வரிகள்  மிகவும் பிடிக்கும் .


பெண்பால் கொண்ட சிறுதீவு
கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே



கலை மானே பாடலில் இந்த வரிகள்  மிகவும் பிடிக்கும் ...


பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே



1 . பூங்காற்று திரும்புமா
2 .சின்னச்சின்ன ஆசை
3 .போறாளே பொன்னுத்தாயி
4 .முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்
5 .விடை கொடு எங்கள் நாடே.


போன்ற பாடல்களுக்கு மொத்தமாக 5 தேசியவிருதுகள் கிடைத்துள்ளது ...


கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்



உவமைகளில் இந்த வரிகளும் 


விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி!
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது?
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி!



போன்ற வரிகள் பாடல் வகைகளில் சிறந்த உவமை நயம் கொண்டதாகவும் இருக்கும் .. 

Comments

கவிப் பேரரசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...