Monday, August 16, 2010

மனிதன் ஏன் இரண்டு கால்களால் நடக்கிறான் ??

மனிதன் ஏன் இரண்டு கால்களால்  நடக்கிறான் ?? மனிதன் உருவாக்கிய கடவுளும் இரண்டு கால்களுடன் இருப்பதாலா ?


டார்வினி கூர்ப்பு கொள்கைக்கு எதிராக  சில கேள்விகள் கேட்க்கப்பட்டு மதவாதிகளால் அலட்ச்சியப்படுத்தப்பட்டாலும் இன்றும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது . இறைவன் இந்த பூமியை ப்ராஜெக்ட் எடுத்து மனிதனை படைத்து அவனுக்காக எல்லாம் படைத்தது என்று பல ஆண்டுகளுக்கு முன் பகுத்தறிவு குறைவான காலத்தில் எழுதியவற்றை இன்றும் பின் பற்றி வருகிறான் .

அப்படியானால் எதற்கு மனிதனுக்கு முதல்  டைனோசர்களை  படைத்தார் ? இவ்வாறான கேள்விகளை மீண்டும்  கேட்டாலும் அவற்றிற்க்கு பதில் அளிப்பதில்லை ..

ஆனால் மனிதன் இரண்டு காரணங்களால் இன்று மற்றைய உயிரினங்களை விட அறிவாலும் அனைத்து விடயங்களாலும் முன்னேறி  உள்ளான். அதற்க்கு  முக்கிய காரணம் மனிதனின் சிந்தனை . இதில் முக்கிய பங்கு பகுத்தறிவு ...

ஆபிரிக்காவில் 4 மிலியன் ஆண்டுகளுக்கு முதல் ஒரு வகை குரங்குகளில் (Apes ) இருந்தே கூர்ப்பின் அடிப்படையில் மனிதன் முழுமையாக ஆனான் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது ஆய்வாளர்களால் ... 

australopithecine என்ற இனத்தை சேர்ந்த தெற்க்கு குரங்குகளின் மூளை விருத்தி ௨ மில்லியன் வருடங்களுக்கு விருத்தி  அடைந்தமை ஆராய்ச்சியில் இருந்து எலும்புகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

  முதலாவதாக தற்போது உள்ள சிம்பன்சி குரங்குகளின் மண்டை ஓடு .. 
இரண்டாவது Australopithecine என்ற எமது மூதாதை உயிரினத்தின் 3 .5 மில்லியன் ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு .... 

முன்னர் சாதாரண சமூகம் போல எம்மை போலவே  வாழ பழகி கொண்டன. தாமாகவே தம்மை முன்னேற்றி கொண்டன அவை . ஆனால் எப்போது இரண்டு கால்களில் நடக்க தொடங்கின ...

இதற்க்கான ஆய்வு நடத்தப்பட்ட போது சிம்பன்சிகள் இரண்டு கால்களால் நடக்கும் போது அவற்றிக்கு குறைவான சக்தியே பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நான்கு கால்களால் நடக்கும் போது கூடுதலான சக்தி தேவைப்படுகிறது என ஆய்வறிக்கையில் தெருவிக்கப்பட்டுள்ளது . -University of Arizona, the University of California, Davis, and Washington University in St. Louis

தனது கைகளை வேறு தேவைகளுக்கு ஏற்ப்ப ஆக்கி கொண்டான் அதனால் தான் இத்தனை படைப்புகளும்  . தனது தேவைகள் அதிகரிக்க கைகளை பயன்படுத்தினான் .

மதவாதிகள் கேட்க்கும் இன்னொரு கேள்வி ? உயிரினங்கள் தானாக இரசாயன,  DNA கலப்புகளில் தோற்றம் பெற்றது என்றால் ஆண் பெண் எவ்வாறு  தோற்றம் பெற்றனர்  என்பதே .. இதற்க்கு ஒரே பதில் உலகம் தோன்றி பல மில்லியன் வருடங்களின் பின்னரே உயிரினங்கள்  தோன்றியது என்பது  நிரூபிக்கப்பட்ட வெளிப்படை உண்மை .

ஆண் பெண் தோற்றம் எவ்வாறு ? அப்படியானால் ஆண்  பெண் கலந்த பாலினம் என்று ஒரு இனம் உள்ளதே ??? இதை எப்போது கடவுள் உருவாக்கினார் ? ஆதாம் ஏவாள் தான் கேள்விப்பட்டிருக்கிறேன் ... இதற்க்கான விடையை யோசியுங்கள் . அடுத்த பதிவில் ஆண் பெண் உருவாக்கம் பற்றி பார்ப்போம் .

சிந்தனைகள் அனைவரையும் சேர மறக்காமல் ஓட்டை போடவும் .......

Monday, August 9, 2010

எது செய்ததாலும் பிழைக்குதா? - விதி இல்லை- முர்பியின் விதி

ஒரு உதாரணத்தோடு தொடங்கலாம் ....

நீங்கள் ஒரு தெருவில் வாகனத்தில் ஒரு வரிசையில் காத்திருக்கும் போது அருகில் இருக்கும் வரிசையில் வாகனங்கள்  நகரும் . அருகில் இருக்கும் வரிசைக்கு மாறினால் அந்த வரிசை நின்றி விடும் . ஏனைய வரிசைகள் யாவும் வாகனங்கள்  அசையும் .

இன்னொரு உதாரணம் சொல்லலாம் . யாருக்காவது கால் பண்ணலாம் எண்டு பார்த்தா அந்த நேரம்பார்த்து பண மீதி போதாததா இருக்கும் . இல்லாவிட்டால் பட்டெரி தீர்ந்து  விடும் .

முர்பியின் விதி இதை தான் சொல்க்கிறது .ஒருவிடயம் பிழையாக செல்ல வேண்டுமானால் பிழையாகவே செல்லும் . மொழி நடையில் சொன்னால் , சுதப்பினால் தொடர்ந்து சுதப்புவது பற்றி தான் அந்த விதி சொல்கிறது . இது அனைவருக்கும் நடந்திருக்கும் .

உண்மையில்  மூர்பியின் விதி முன்னரே பிரபல்யம் அடையவில்லை . முர்பி எனும் அமெரிக்கா விமான படை அதிகாரி ஒருவர் இருந்தார்(இறந்த வருடம் 1990 ) .


அவர் விமான பாதுகாப்பு பற்றி ஆராய்ச்சி மேட்க்கொள்ளும் போது  விமான விபத்தில் மனிதர்களின் நிலையை அறியும் பரிசோதனையும்  நடை பெற்றது .  அதற்ட்க்கு ஒரு மனிதர் தேவைப்பட்டார் . அதற்க்கு முர்பியையே தெரிவு செய்தனர் . அந்த பரிசோதனையை செய்ய முன்னர் பல கருவிகள் நிலையை அளவிட பொருத்தப்பட்டிருந்தன . பரிசோதனை  நிகழ்ந்த போது முதல் சந்தர்ப்பத்தில் பதிவுகள் மேட்க்கொள்ளப்படவில்லை . பூச்சிய வாசிப்பையே காட்டியது . அதற்க்கான காரணத்தை கண்டறிந்தார் முர்பி .

இரண்டு வயர்களையும் மாற்றி பொருத்தியதால் இந்த விளைவு ஏற்ப்பட்டது . அப்போது முர்பி  கூறியது ." ஒரு வேலை செய்வதற்கு இரண்டு வழிகள் இருந்தால்  ,ஏதாவது ஒரு வழி தவறாக இருக்கும் , அதே வழியில்  தான் நாம் செய்வோம்  ". இந்த கூற்றை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தளபதி ஒருவர் இவ்வாறு கூறினார் .  பிழையாக செல்வது நிச்சயம் பிழையாகியே தீரும் . 


இதன் பின்னரே  முர்பியின் விதிக்கு வரவேற்ப்பு கிடைத்தது . 


கூடுதலாக நிகழ்தகவு அடிப்படையில் இந்த நிகழ்வுகள் நடந்தாலும் பெரும்பாலும் சிலசான்றுகள் பல விதிகளுடன் ஒன்றிணைந்து  நிற்கின்றன  . நாம் அனைவரும்  அன்றாட வாழ்வில் உணர்ந்திருப்போம் இதை .

மறக்காமல் ஓட்டை போடுங்கள் . தகவல் அனைவரையும் சென்றடையட்டும் . 

Thursday, August 5, 2010

ட்ரோஜன் குதிரைகள் - இணைய பாதுகாப்பு

ற்றோஜோன் ஹோர்செஸ் வைரஸ்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் சிலர் . ஆனால் அவை எவ்வாறு இயங்குகின்றன எப்படி தடுக்கலாம் பார்ப்போம் . இவை சாதாரண வைரஸ்கள் போல  அல்ல . 


 முதலில் ஒரு கதையை சொல்லி விட்டு பின்னர் தகவலை வழங்கினால் விளங்கும் என்று எண்ணுகிறேன்  . 

கிரேக்கர்கள் ஒரு காலத்தில் ற்றோஜங்களிடம் மிகப்பெரிய குதிரையை கொண்டு செல்ல முயன்றனர் . அந்த மரத்தாலான பெரிய குதிரையை பார்த்தவர்கள் அதை தமது வெற்றி பரிசு என்று எண்ணி உள்ளே வரவைத்தனர் .

அதன்  பின்னர் அந்த குதிரைக்குள் இருந்த கிரேக்கர்கள் படபடவென இறங்கி சண்டை இட தொடங்கினர் .
இந்த கதை அனைவரும் கேட்டிருப்பீர்கள் . 

அதே போல தான் இந்த ற்றிஜோன் குதிரை வைரஸ்களும் .

சாதாரண வைரஸ்களை கணனியின் fire wall (பயர் வோல்) அனுமதிப்பதில்லை . அதனால் இவை வேறு ஒரு வடிவிலோ அல்லது எமக்கு தெரிந்த பழகிய ஏதாவது ஒன்றாகவோ உள்ளே நுழைய பார்க்கும் . முக்கியமாக அவை எம்மை கவரும் வகையிலே பெரும்பாலும் இருக்கும் . 

  

இவை உள்ளே வந்தவுடன் தமது வேலையை ஆரம்பிக்கும் .  எமது கணனியில் உள்ள தகவல்களை அதன் உரிமையாளருக்கு அனுப்பி வைக்கும் . அவரால் எங்கிருந்தும் கணனியை இயக்க முடியும்.

ஒரு தடவை கணனியில் இன்ஸ்டால் செய்து விட்டால் தனது வேலையை தொடங்கிவிடும் . பயர்  வோல் மூலம் ப்ரோக்ராம்களை அனுமதிக்கும் போது கவனமாக இருக்கவும் .
ஆனால் இது வைரஸ் அல்ல ... வைரஸ் செயல்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது . ஆபத்தானது கூட . 

இவை கூடுதலாக மெயில் மூலமாகவே பரவுகின்றன . மெயில்களுக்கு வைரஸ் பாதுகாப்பு முக்கியம் . தெரியாதவர்களிடம் இருந்து வரும் மெயில்களையோ அல்லதுவித்தியசமான மெயில்களையோ  திறக்காமல் அழிப்பது நல்லது .

ஏதாவது ப்ரோக்ராம் பதிந்த பின்னர் ட்ரோஜன் ஆபத்து கண்டறிந்தால் இணைய இணைப்பை துண்டித்து விட்டு . அந்த பயிலை அகற்றுவது நல்லது . இல்லாவிட்டால் உங்கள் கணணியை மீள் இன்ஸ்டால் செய்தால்  சரி .

Wednesday, August 4, 2010

மனிதனை விட திறமையான விலங்கு - புறா 1

மிகவும் நீட தூர பிரயாணத்திற்கு பின்போ ஏன் குறுகிய தூர பிரயாணத்தின் பின்பே நாம் வந்த வழியை மறந்துவிடுவோம் . ஆனால் புறாக்கள் எவளவு தூரம் பறந்தாலும் அதே இடத்தை வந்தடையுமாம். 1100 மயில்கள் எந்த வித வழிகாட்டியும் இல்லாமல் வந்தடையும் .


இதற்க்கு அவற்றிற்க்கு உதவி புரிவது அவற்றின் சொண்டுகளில் காணப்படும் இரும்பு தாது பொருந்திய கட்டமைப்பே .
இவை அவற்றிற்க்கு பூமியின் மின்காந்த  அலைகளை உணர  செய்கின்றன . அவற்றின் மூலம் அவை புவியியல் தன்மையை இனம் கண்டு கொள்கின்றன .


புறா பறக்கும் போது அதன் திசையை மாற்றும் போது வடக்கு நோக்கியே இரும்பு மூலக்கூறுகள் திரும்பும் .எப்போதும் பூமியின் மின்காந்த அலையை திசையை நோக்கிய படியே இருக்கும் .

முதன் முதலாக புறா மூலமே எகிப்தியர்களால் தகவல் பரிமாறும் சேவையும் ஆரம்பிக்கப்பட்டது . மிகவும் திறமையான புறாக்கள் ஒரு நாளைக்கு 500 மைல் தூரம் பறக்குமாம் .
படத்தில் காட்டியுள்ளது போல சொண்டின் மேற்ட்பகுதியில் உள்ள இரும்பே கூடுதலான உணர்திறன் கொண்டது .

European Robins, domestic chickens, and Silvereyes  போன்ற பறவைகளுக்கும் இவ்வாறான அலகே உள்ளது . 


நன்றி :- According to research by the University of Frankfurt


காகங்கள் 


காகங்கள் ஆர்க்டிக் பகுதிகளையும் தென் ஆபிரிக்க பகுதியையும் தவிர அனைத்து பகுதிகளிலும் வாழ்த்து வருகிறது . அவை தாம் வாழும் பகுதிகளுக்கு ஏற்ப்ப இசைந்து கொடுக்க கூடியவை . மனிதனுடன் ஒன்றி வாழும் இவை மனிதனின் பழக்கங்களை  உள்வாங்கி  அவற்ர்தக்கு ஏற்ப்ப நடந்து கொள்கின்றன . 


இது காகங்களின் தக்கென பிழைத்தல்  காட்டுகிறது ... அவை மனிதனுடன் ஒன்றி வாழ ஆரம்பித்து விட்டன . மஞ்சள் கடவையால் கடக்கும் காகம் .  அவற்றின் வீடியோ இணைப்பை பார்க்க கிளிக் செய்க .
http://www.ted.com/talks/joshua_klein_on_the_intelligence_of_crows.html 


யானைகள் 
யானைகள் கூட்டம் கூட்டமாகவே செல்லும் . ஆனால் இவற்றின் தும்பிக்கை விசேடமானது .அவற்றால் ஒருவித வாசனையை தூவுவதன் மூலம் அவற்றின் மூளையில் ஒரு அமைப்பை போட்டு அதன் மூலம் மற்றைய யானைகள் எங்கே என கண்டறிந்து விடும் .
நன்றி :- Research from the University of St. Andrews