Saturday, May 29, 2010

அர்த்தமுள்ள இந்துமதம் தொடர் 4 - காரணங்கள்

அர்த்தமுள்ள இந்துமதம் எனும் கண்ணதாசன் தலைப்பில் எனது பார்வையை செலுத்தி வருகிறேன் . இந்து மதம் அடிப்படையிலேயே வாழ்க்கையை நல்வழிப்படுத்தும், அனைவருக்கும்  பொதுவான ஆதி மதம் என்பது என்னுடைய கருத்து . சரியான பாதையில் வழி நடத்தி செல்ல இருந்த இந்து சமயம் சாதிகள் , சரியாக விளங்கி கொள்ளாமை போன்றவற்றால் பிழையாக செல்கிறது .

எனது பழைய பதிவுகள் ஒரு தொடராக - மூன்றாம்  பகுதி    அதில் முதல் இரண்டு பகுதிகளுக்கு லிங்க் உள்ளது . தொடரை வெற்றியாக்கும் உங்களுக்கு நன்றிகள் ...
=========================================================================
இந்து சமயத்தின் ஒவ்வொரு செயல்ப்பாட்டுக்கும் காரணங்கள்  உண்டு . சிலவை மிகைப்படுத்தப்பட்டவை . காரணம் பல ஆயிரம் வருடங்களுக்கு முதல் தோன்றிய சமயம் வெறும் வாய் வழியாகவே பரிமாறப்பட்டு வருகிறது . வாய் வழியாக வரும் போது திரிபுபடுத்தப்படுவது இயல்பு .

பாம்பை கொன்றால் பிழையா ? பாம்பு தெய்வமா ? பாம்புக்கு எதுக்கு முட்டையும் பாலும் அதை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கலாமே ? பாம்பு கனவு ?என கிண்டல் அடிப்பதும் உண்டு .

முக்கியமாக பாம்பு கனவுகள் 
1 > ஒரு பாம்பு உங்கள் கனவில் அடிக்கடி வந்தால் என்ன என்பதை அறிவியல் அழகாக விளக்குகிறது . சாதாரண மனோதத்துவ நிலை தான் அது . உங்கள் குடும்பத்தில் அல்லது சுற்றத்தில் நீங்களா விரும்பிய ஒரு உயிர் இறக்க போகின்றதென்றால் அல்லது இறந்திருந்தால்  கட்டாயம் அந்த கனவு வரும் . ஒரு வித பயத்தின் இழப்பின் வெளிப்பாடு அது .

2 > சிலர் பாம்பு துரத்தி கடிப்பதும் ஆனால் எழுந்தவுடன் உயிருடன் இருப்பது போலவும் உணருவார்கள் . அப்படியானால் எங்கள் வாழ்க்கையில்  நாங்கள் எண்ணும் அளவுக்கு விடயம் ஒன்றும் சீரியஸாக இல்லை என்று அர்த்தம்.

வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் இந்த குறியீட்டில் தான் பிரதிப்பலிக்கப்பட்டன . காரணம் பாம்புக்கு மட்டுமே எல்லோரும் பயந்தது, பயப்படுவது .

முதலில் பாம்பை பற்றியும் கொஞ்சம் அறிவியல் தகவலை தந்து விட்டு மேலுள்ள காரணத்தை விளக்குகிறேன் . இதற்கும் இந்து சமயத்துக்கும் என்ன சம்மந்தம் என விளக்குகிறேன் .

ஒரு பாம்பு மனிதனையே விளங்கும் அளவுக்கு வாய் பகுதி பெரிதா என நினைக்கலாம் . ஆனால் அது 150 டிகிரி வரை வாயை நன்றாக விரிக்கும் . எங்களால் 90 டிகிரி கூட போக முடியாது .ஐந்து  தலை நாகம் இந்து சமய கதைகளில் வந்ததே உண்மையா ?  கூர்ப்பு கொள்கை அதில் செயல்ப்பட்டிருக்கலாம் . 130 மில்லியன் வருடங்களுக்கு முதல் தோன்றிய உயிரினம் பாம்பு . பினைப்புகளாலேயே உயிரினங்கள் யதார்த்தமாக தோன்றியது உண்மை . அதில் ஐந்து தலைகளுடன் தோன்றி இருக்கலாம். மற்றைய தலைகளின் தேவை இருந்திருக்காது . அதனால் காலப்போக்கில் அழிந்திருக்கலாம் .

பாம்பின் அசைவுகள் (நகர்வுகள் )


பாம்பிற்கு காதுகள் இல்லை .பிறகெப்படி மகுடி ஊதும் சத்தம் கேட்க்கும் ?
பாம்பிற்கு காதுகள் இல்லாவிட்டாலும் அவற்றால் ஒலி அதிர்வுகளை செவி மடுக்க முடியும் . நாம் ஏற்ப்படுத்தும் ஒலி அதிர்வுகள் அவற்றில் உடலில் பட்டு தோலினூடாக ஊடுகடத்தப்பட்டு மூளைக்கு ஒலியையும் எச்சரிக்கையையும் விடுக்கிறது . காதின் தொழிலை செய்யும் உள்ளுறுப்பு (சென்சார் ) உண்டு . மகுடியிலிருந்து வரும் ஒலி அதிர்வுகள் வித்தியாசமானவை. அவை பாம்பிற்கு உண்மையில் மயக்கத்தை ஏற்ப்படுத்தும் . எப்படி தான் நம் முன்னோர்கள் கண்டு பிடித்தார்களோ ?

சரி பாம்பிற்கு பால் ஊத்துவதன் முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. அப்புறம் எதுக்கு புற்றுக்குள் ஊற்றினார்கள்  ?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம்  அடர்ந்த காடுகள்.  ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை . அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள் .ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை  கட்டுப்படுத்த முயன்றனர் .

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில்  இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு தேடி வரும் . 

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது .

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள் . அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது .

பாவம் அதால ருசியும் உணர முடியாது விட்டிருங்க. சிலர்  கட்டாயப்படுத்தி தான் பால் ஊற்றுகின்றனர். அவற்றிற்க்கு பால் பிடிப்பதில்லை . ஊர்வன வகை அவை . முளையூட்டிகள் பாலை குடிக்காது .


முக்கியமா இந்த ராமராஜன் படத்தில் எல்லாம் காட்டுவது போல பாம்பு பால் குடிக்காது . பக்தி படங்கள் எடுப்பவர்கள் காரணமும் சொன்னால் நன்றாக இருக்கும் . கிராபிக்ஸ் மட்டும்  காட்டாமல் .

நம்மவர்கள் செய்த பலவற்றிட்க்கும் காரணங்கள் உண்டு . அதை விளங்கினால் இந்துமதம் அர்த்தமுள்ளதாகும் .. தொடருவேன் .....

பிடித்திருந்தா மறக்காமல் ஓட்டு  போட்டு அனைவரையும் சென்றடைய செய்யவும்

Wednesday, May 26, 2010

மரணத்தின் பின்னரான வாழ்க்கை - கனவு -கடவுள் - மர்மம்

மனிதன் எந்த மர்மத்தை கண்டு பிடித்தாலும் இறந்த பின்னரான மர்மத்தை தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறான் . புரியாத பல புதிர்களையும்  கேள்விகளையும் , குழப்பங்களையும் சுமந்து நிற்கிறது . இந்த குழப்பங்களில் வாழ்கிறது கடவுள் நம்பிக்கை. விஞ்ஞானத்தால் எட்ட முடியாத இடம் அது , இருந்தாலும் அதனை அணுகும் முறையில் முன்னேறுகிறது மனோதத்துவமும் விஞ்ஞானமும்  . 

மரணத்தை தொட்டுவிட்டு வந்தவர்கள் சிலர் இன்னமும் உயிர் வாழ்கிறார்கள் அதில் பலர் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் . தமது கண்கள் மூடும் முன்னர் தமது வாழ்வு , தமது சூழல் அனைத்தும்   ஒளியால் நிரம்பி இருந்தது எனவும்  ஒரு வித அமைதி நிலை காணப்பட்டது எனவும் கூறியுள்ளனர் உயிர் பிழைத்து வந்தவர்கள். அமானுஷ்ய விடயங்கள் பல மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது நடைபெறும் .


மரணத்திற்கு அருகாமையில் சென்று வருவது என்றால் என்ன ? அது  என்ன அமானுஷ்யமா ? ஏதாவது சக்தியா ? அல்லது மூளையின் திடீர் மாற்றங்களா ? என பல கேள்விகள் எழுந்தாலும் விஞ்ஞானம், சமய நம்பிக்கை , அறிவியல் எனும் பார்வையில்  கொஞ்சம் பார்க்கலாம் என எண்ணுகிறேன் .

மரணத்திற்கு பின்னரான வாழ்க்கை பற்றி கிறிஸ்துவுக்கு  முன் வாழ்ந்த பிளாடோ என்பவர் தனது குறிப்பில் Er என்ற போர் வீரன் இறந்த போது தனது உயிர் (நாம் கூறுவது இவ்வாறே ) செல்வதை உணர்ந்து கூறியதை குறித்திருக்கிறார் . இது உண்மையா என பலரிடம் கேள்வி எழுந்தாலும் கூடுதலானோருக்கு அதே போன்ற ஒரே உணர்வு ஏற்பட்டிருக்கிறது  .

மரணத்தை அண்மிப்பவர்களின் உணர்வு

அமைதியான உணர்வு 

பதற்றமில்லாது அமைதியாக செயல்ப்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் . அவர்களால் மட்டும் தாம் இறக்கப்போவது பற்றி தெரிந்திருக்கும் ஆனால் அதை எப்படி விளங்கப்படுத்துவது  வெளிப்படுத்துவது  என அவர்களுக்கு தெரிந்திருக்காது . மரணத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இருப்பதை அது காட்டுகிறது. 

மிகவும் கூடுதலான வெளிச்சம் 

ஒரு வித ஒளி வந்து அவர்கள் சுற்றுப்புறம் அனைத்தையும் சூழும் . அவர்களின் ஆள் மனது இறைவனை அல்லது சொர்க்கத்தை காண்பது போல உணர்வை தோற்றுவிக்கும். 

உடலுக்கு வெளியே அனுபவம் 

தான் உடலை விட்டு வெளியேறுவது போல உணர்வு தோன்றும் . கிட்டத்தட்ட மிதப்பது போல . தன்னால் தனது உடலை பார்க்க முடியும் . சிலர் தாம் டாக்டர்கள் தம் உடலுக்கு சிகிச்சை செய்வதை  பார்த்ததாக கூறியுள்ளனர். பின்னர் எங்கோ பறந்து போவது போல உணர்வு தோன்றுமாம் .

இன்னொரு பரிமாணம் நோக்கி  செல்லல்    

சில வேளை அவர்கள் அவர்கள் மனதில் பதிந்த மத நம்பிக்கைகள் படி அல்லது உலக அனுபவங்கள் என்பன அவர்களை  அந்த அந்த பரிமாணங்கள்  நோக்கி இட்டுச்செல்லும் . ஒரு வேளை சொர்க்கத்திற்கும் சில வேளை நரகத்திற்கும். ஒரு வேளை வித்தியாசமான உலகமாக  இருக்கலாமோ .

உயிரின் தொடர் பயணம் 

ஒரு குகை போன்ற அமைப்பினூடு வெளிச்சமான பகுதியை நோக்கி செல்வது போல உணர்ந்திருக்கின்றனர் சிலர் . குகையினூடு செல்லும் போது பல விதமான தேவதைகள் , கடவுள் போல அவர்கள் மனதில் சித்தரிந்திருந்த உருவங்களை கண்டுள்ளனர் .


சக்திகளுடனான உரையாடல் 

அதனூடு பயணிக்கும் போது சில உரையாடல்களை கேட்டுள்ளனர் . பெரிய ஆண் குரலில் இது உங்களுக்கான நேரமில்லைமீண்டும் திரும்பி செல்லுங்கள் என்றெல்லாம் கட்டளை வந்திருக்கிறது . அது இறைவன் குரல் என நம்புகின்றனர் .

வாழ்க்கை மீதான மீள் பார்வை 
சிலர் இறந்த பின்னர் தமது வாழ்க்கை மீண்டும் தொடக்கத்திற்கு செல்வது போல உணர்வர் . கிட்டத்தட்ட பிளாஷ் பக் போல ஒன்று ஓடும்.


இது சிலர்  கண்டு வந்தவை ஆனால் இன்னொருவர் தாம் இந்த உலகை விட்டே வெளியேறுவது போலவும் அந்த உணர்வு  மிகவும் மகிழ்ச்சியானது எனவும் கூறியிருந்தார் . அந்த ஒளிக்குள்ளே செல்ல வேண்டும் என்ற உணர்வு எம்மை தூண்டும் எனவும் அதனுள் சென்றவுடன் அது தன்னை இன்னொரு ஒளி இல்லாத நகரத்திற்கு அழைத்து சென்றது எனவும் அங்கு தன்னுடன் ஒலியுடன் ஒருவர் நின்றதாகவும் கூறியிருந்தார் . (from The vestuble by Jess E. Weiss )

இன்னொருவரின் கருத்துப்படி அது ஒரு சிறந்த அனுபவம் எனவும் தன்னை சுற்றி அனைத்தும்  வெள்ளையாக  இருந்ததாகவும் ஆனால் அதே நேரம் வெட்ட வெளியாக இருந்ததாகவும் கூறியிருந்தார். இவர் தற்கொலை முயற்சி செய்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் .
Tracy Lovell, after a drug overdose suicide attempt (in "The return from silence " by Scott D. Rogo)


இந்த பிரச்னையை விஞ்ஞான ரீதியாகவும் வேறு விதமாகவும் ஆராயலாம் . விஞ்ஞானத்தை தவிர்த்து பார்த்தால் உடலை விட்டு வெளியேறும் உயிர் எமது உலகத்துக்கும் மரணத்திற்கு பின்னரான இன்னொரு உலகத்துக்கும் இடையில் பயணிக்கிறது . இது மிக நீண்ட குகை போன்ற இடங்களினூடு பயணிக்கின்றது . சில வேளைகளில் ஒளியின் வேகத்தில் பயணிக்கலாம் .  

இது நேர இயந்திரத்துடன் அதாவது ஐன்ஸ்டினின் நேர பயணத்துடன் தொடர்பு பட்டுள்ளதா என யோசிக்க தோன்றுகிறது . மேலே கவனித்தீர்களானால் பச்சை எழுத்துக்களால்  அவர்கள் பார்த்த வெளிச்சமில்லாத உலகம் , குகை போன்ற அமைப்பினூடு பிரயாணம், பார்த்த இன்னொரு வெளிச்சமில்லாத நகரம்  போன்றவை இந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு வேளை எமது வாழ்க்கை ஒரு தொடராக மீண்டும் பழைய காலத்துக்கோ அல்லது அதி நவீன காலத்துக்கோ நாம் செல்லலாம் . 

சிலருக்கு நித்திரையில் தியானத்தின் போதும் உடலை விட்டு மேலே செல்வது போல உணர்வுகள் தோன்றும் . உடலை விட்டு வெளியே செல்வது மரணத்தின் ஒரு அங்கமே .
மரணத்தை அண்மித்தால் விஞ்ஞான ரீதியாகவும் பார்க்கலாம் . எனது அடுத்த பதிவில் விஞ்ஞான  அறிவியல் பார்வையில் இடுகிறேன் . 

தகவல் பிடித்திருந்தால் ஓட்டு போட்டு அனைவரையும்  சென்றடைய செய்யவும்... 

Monday, May 24, 2010

விமான விபத்திலிருந்து எப்படி தப்பலாம்..?

உலக உயிர்கள் எதனால் வாழ்கிறதோ தோன்றியதோ ,ஆனால் அனைத்தும் தக்கென பிழைத்தல் எனும் அடிப்படை தியரியை வைத்து தான் தோன்றின . தம்மை பாதுகாத்துக்கொள்ள , எச்சரிக்கையாக இருக்க தெரிந்த உயிர்கள் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் .


அண்மையில் நடந்த மேன்களூர் விமான விபத்தில் பல உயிர்களை தீ விழுங்கியது . அதில் அந்த விமானத்தை தவறவிட்டவர்களுடன் மொத்தம் 15 பேர் உயிர் தப்பினர் . உயிர்களின் பெறுமதி மதிப்பில்லை . அதில் ஒரு அறுபது பேராவது தப்பியிருந்தாலும் மகிழ்ச்சி தான் . நம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நோக்கம் முழுக்க யார் மீது யார் பழியை போட்டு பிழைக்கலாம் என்பதே .அது தான் இப்போதும் நடக்கிறது . அதனால் பயன் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை .


இனி எவ்வாறு இவ்வாறான விபத்துகளை எதிர் கொள்கிறோம் என்பதே முக்கியம் . இது குறித்து எவராலும் விழிப்புணர்வு நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டதாக காணவில்லை . விமானப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். 1 .2 மிலியன் விமானங்களுக்கு ஒன்று என விபத்து நடந்தாலும் எச்சரிக்கை மிகவும் முக்கியம் .இதுவரை நடந்த அகோர விமான விமான விபத்துக்களில் இருந்து 56 % ஆன உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கின்றன . சிலவை தவிர்க்கமுடியாதாயினும் உயிர் பிழைக்கும் விகிதத்தை எம் இறுதி நேர நடவடிக்கைகளால் அதிகரிக்கலாம்.


எவளவு பெரிய விபத்தானாலும் ஒரு விமானம் முழுமையாக தீப்பிடித்து வெடித்து எரிவதற்கு 90 செக்கன்கள் ( 1 1/2 நிமிடங்கள் ) ஆகும். இது சர்வதேச தீ விபத்து பாதுகாப்பு மையத்தின் ஆய்வு அறிக்கை கூறும் தகவல் . அந்த 90 செக்கன்களையும் நாம் பயனுள்ள விதத்தில் பாவிப்பதிலேயே உயிர் பிழைக்கும் சந்தர்ப்பம் உண்டு .


நடை பெற்ற விபத்தில் இருந்து பிழைத்த உமர் பாரூக் கூறிய கருத்தின் படி பார்த்தால் முடிவெடுக்கும் சந்தர்ப்பம் அதிகம் . சில உயிர்கள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் ஏன் மற்றயவர்களால் எழுந்து வரமுடியவில்லை ??


"திடீரென விமானம் தள்ளாடியது. விமானத்தின் இறக்கை ஒன்று மலை மீது உரசியதை பார்க்க முடிந்தது. நாங்கள் எல்லாரும் அலறினோம்.சிறிது நேரத்தில் மலை மீது பலத்த சத்தத்துடன் விமானம் மோதியது. விமானம் முழுக்க தீ பிடித்தது. எங்கும் புகையாக இருந்தது."தைரியத்தை வர வழைத்துக்கொண்டு எழுந்து வெளியில் ஓடிவந்தேன். அடுத்த சில நிமிடங்களில் நான் இருந்த இடம் உள்பட விமானத்தின் பெரும் பகுதி வெடித்து சிதறியது."


I got caught in some cables but managed to scramble out

தான் இடையில் மாட்டிக்கொண்டதாக கூறியிருந்தார் உமர் . விமானம் எரிந்து தீப்பற்ற முதலே சிலரது உயிர்கள் பதற்றத்தால் செல்லும் வாய்ப்பு அதிகம் . மற்றும் பொருள்கள் ஏதாவது எதிர்பாராத விதமாக அடிபடும் . முக்கியமாக தலைப்பகுதியே முதலில் தாக்கப்படும் .
தலைப்பகுதி அடிபடுவதால் சிலர் முதலே மயக்கமடைவர் . தலைப்பகுதியை முன்னாள் இருக்கும் இருக்கையில் வைத்து படுக்க வேண்டும் . இதனால் முதல் சந்தர்ப்பத்தில் இருந்து பிழைக்கலாம் .


என் அருகில் இருந்தவர்கள் எல்லாரும் மயங்கி, சரிந்து கிடந்தனர். ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.


பலரால் எழுந்து ஓடி வந்திருக்க முடியும் ஆனால் நெருப்பு எரிந்ததால் வந்த புகை அவர்கள் மயக்கத்திற்கு காரணம் . வரும் நெருப்பு புகை மேலாக தான் கூடுதலாக செல்லும். குறைவாக சுவாசிப்பதன் மூலமும் கீழே குனிந்து கொண்டு வெளியேறுவதன் மூலமும் அந்த மயக்கத்தை தவிர்க்கலாம் .இல்லாவிட்டால் ஈரமான துணியால் மூக்கை மூடிக்கொள்ளவும்இந்த செயன்முறை உயிர் பிழைக்கும் இரண்டாவது சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் .


"நான் இருந்த பகுதியில் விமானம் இரண்டாக பிளந்து கிடந்தது. இதனால் வெளியில் செல்ல வழி கிடைத்தது." ஏன் அவரால் விரைவாக வெளியேறும் பகுதியை திறக்கம் முடியவில்லை? அவர் இருந்த இருக்கைக்கு அருகாமையில் தான் வெளியேறும் பகுதி இருக்கிறது . தான் விமானத்தின் பின் பகுதியில் இருந்ததாக கூறினார் .அனைவரும் கட்டாயமாக விரைவாக வெளியேறும் பகுதி திறக்கும் முறையை அறிந்திருக்க வேண்டும். சில வேளைகளில் விமானம் எரியும் போது அதில் பணி புரிபவர்கள் கூட இறந்திருக்கலாம் . ஆகவே எமக்கு அதை திறக்க தெரிந்திருக்க வேண்டும் . இதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் .

நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் நமது பாதுகாப்பை மேலும் உறுதி செய்கின்றன .கூடுதலாக விரைவாக வெளியேறும் கதவுக்கு அருகில் இருப்பவர்களுக்கு அதிகம் வாய்ப்புகள் மற்றும் விமானத்தில் பின்னால் இருப்பவர்கள் உயிர் பிழைக்கும் வீதம் 60 % ஆம்..


முக்கியமான தவறுகள்


விரைவான அதிர்ச்சி

அனைவரும் அதிர்ச்சியில் செய்வதறியாது தான் இருப்பார்கள். சிலர் கடவுளை வணங்குவர் . கண்களை மூடிக்கொண்டு இருந்து விடுவார்கள் . அடுத்த படியை யோசிப்பதில்லை . இது தான் உண்மை .


பொதிகளை கை விடாமல் இருத்தல்


முக்கியமாக எம்மவர்கள் பொதிகள் மீது கவனம் செலுத்தி அதை எடுத்துக்கொண்டு செல்ல முற்படுவர். பொதிகளை விட்டு விட்டு உடனடியாக வெளியேற மட்டுமே பார்க்க வேண்டும் . எந்த நேரத்தில் வெடிக்கும் என்பது கூற முடியாது . ஆனால் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்பது நிச்சயம் .

தயவு செய்து விமான பயணத்தில் குடிக்காதீர்கள் . அது உங்கள் செயல்ப்படும் திறனை இன்னும் குறைக்கும் .


விமான பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கும் போது அலட்ச்சியம்


அனைத்திற்கும் காரணம் அலச்சியம். கூடுதலாக நாம் ஒருவரும் விமானம் புறப்படும் முன் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை . காரணம் எத்தனையோ தடவை கேட்டு விட்டோம் என்ற அலட்ச்சியம் . ஆனால் சில தகவல்கள் விமானத்துக்கு விமானம் வேறு படும் எனபதே உண்மை .பாதுகாப்பு உறையை கூடுதலாக உடனே அணிய வேண்டும் ஆனால் விமானம் விழுந்தது நீர் பரப்பாக இருந்தால் விமானத்தை விட்டு உடனே குதிக்க தேவையில்லை .


இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து பார்த்தால் தான் தெரியும் என்பது சிலருடைய கருத்து . சிலருடைய கருத்து அந்த நேரம் என்ன செய்வதென்றே தெரியாது என்பதே . நாம் அதிர்ச்சியடைவதன் மூலம் உயிர் காப்பாற்றப்படப்போவதில்லை .உயிர் பிழைக்கும் விகிதம் மனதளவில் குறைக்கப்படும் . ஆனால் மன அழுத்தத்தை எதிர் கொண்டு விரைவாக செயல்ப்பட வேண்டும் . சில திடீர் வெடிப்புகள் தவிர்க்க முடியாது .இவற்றால் உயிர் பிழைக்கலாம் என்றில்லை . உயிர் பிழைக்கும் விகிதத்தை கூட்டலாம்.


இந்த தகவல் பிரயோசனமாக இருந்தால் அனைவரையும் சென்றடைய ஓட்டை கிளிக் செய்யவும் .

Thursday, May 20, 2010

இறந்த பின்னரான வாழ்க்கை - மம்மிபிகேஷன்

மம்மிகள் நாம் சினிமாவில் பார்த்ததோடு சரி . அவர்களின் இறந்த பின்னரான வாழ்க்கை பற்றிய நம்பிக்கை பற்றியோ  அவர்களின் ரகசியம் பற்றியோ அறிந்ததில்லை . மம்மிகள் சீனா மம்மிகள் , அரசியல் வாதி மம்மிகள் , குரு மம்மிகள், மிருக மம்மிகள் , உரிந்த மம்மிகள் , காய்ந்த மம்மிகள் என எத்தனையோ வகை . அவற்றையும் இறந்த பின் வாழ்க்கையையும் , பிரமிட்டையும் அவர்களின் முறைகளையும் பார்ப்போம் .

உலகத்தில் எத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும் பெரும்பாலான விடயங்கள் எகிப்த்தியர்களின் வழிகாட்டலிலேயே தோன்றியுள்ளது . ஏன் இப்போது உலகில்  உள்ள இரு பெரிய மதங்களும் அவற்றின் கதைகளும் எகிப்தியர்களிடம் இருந்து எடுக்கப்பட்டவை என்றும் கூறலாம் .அதன் காரணம் எகிப்தியர்கள் அனைத்து  விடயங்களையும் தமது கல் வெட்டுகளில் பொறித்து விட்டு  சென்றமை .

எகிப்த்தியர்களின் (கி மு (4650 - 3050 ))  கல் வெட்டுகளில் அவர்களின் பொருளாதாரம் , விஞ்ஞானம், கணிதம் , போக்குவரத்து என அனைத்தும்  குறிக்கப்பட்டுள்ளது .


இவை அனைத்தையும்  பொறித்து விட்டுசென்றவர்கள் அவர்களின் இறந்த பின்னரான வாழ்க்கை பற்றியோ அல்லது அவர்கள் இறந்த உடல்கள் பாதுகாத்தல் தொடர்பையோ எந்த குறிப்புகளையும் எழுதி வைக்க வில்லை . எழுதி வைக்காததன் மர்மம் என்ன ? அதற்க்கான கேள்வி மனதில் நிற்கட்டும் . இவ்வாறு  எழுதி வைக்காத முறைமை கிரேக்க சுற்றுலாப்பயணி(கி மு 2500 ) ஒருவரால் அடிப்படை விடயங்களை வைத்து ஊகித்து எழுதப்பட்டது தான் மம்மிபிகேஷன் .

அனைத்து  தொழில்நுட்பவியலாளர்களும் , தற்ப்போதைய கட்டிட நிபுணர்களும் பார்த்து வியந்த பிரமிட்டுகள் ஆயிரமாயிரம் தொழிலாளர்களை வைத்து கட்டப்பட்டது . அதற்க்கான காரணம் அவர்களது இறந்த உடல்களை பாதுகாக்கவும் இறந்த பின்னரான வாழ்க்கையை உறுதி செய்யவுமே .

இறந்த உடல்களை பத்திரப்படுத்தி வைக்கும் முறையில்  எகிப்தியர்களை பார்த்து வியந்து நிற்க்கிறது மருத்துவ உலகம் . மம்மிபிகஷோன் நடந்த மம்மி 18 ஆம் நூற்றாண்டுகளில் கண்டு பிடிக்கப்பட்டது . இறந்த உடல்களை பத்திரப்படுத்தி வைப்பது தான் மம்மிபிகாஷோன் .

மம்மிபிகேஷன்

நைல்   நதியை தாண்டி கொண்டு செல்லப்படும் இறந்த உடல்களுக்கான மம்மிபிகாஷோன் உயர்ந்தமலையில் வைத்து நடத்தப்படுகிறது . மம்மிபிகேஷன் ஆரம்பமாக அவர்களுடைய குருமார்களால் பிரார்த்தனை நடத்தப்படுவதுடன் ஆரம்பிக்கிறது  .

பின்னர் மூக்கினூடாக ஒரு நீண்ட கம்பி போல ஒன்றை வைத்து மூளை இழுத்து எடுக்கப்படும் . வயிற்றிலிருந்து ஏனைய முக்கிய உறுப்புகளும் எடுக்கப்படும் . அவை தான் உடல் கெட்டுப்போக காரணமானவை .


பின்னர் கழுவப்பட்ட உடல் நீரை உடலில் இருந்து உறிஞ்சும் உப்புக்களால் முழுமையாக மூடி நாப்பது நாட்களுக்கு விடப்படும் . நாற்ப்பது நாட்களுக்கு பின்னர் நைல் நதியில் இருந்து எடுக்கப்படும் நீரால் உடல் கழுவப்பட்டு உடலை லாஸ்டிக் போல வைத்திருக்க எண்ணெய் வகை பூசப்படுகிறது .


எடுக்கப்பட்ட உள் உறுப்புகளிட்க்காக வேறு பொருட்கள் இட்டு உடல் நிரப்பப்பட்ட பின்னர் , எடுக்கப்பட்ட உறுப்புகள் சாடிகளில் இடப்படும் . அதாவது அவர்கள் வணங்கிய கடவுள் ஹோறச்சின் நான்கு மகன்கள் என அழைக்கப்படும் ஜாடிகளில் இட்டு  வைக்கப்படும் .


வாசமான திரவியம் உடலை சுற்றி பூசப்பட்ட பின் துணியால் சுற்றப்படும் .


அவர்களின் சுற்றும் முறையே தனி . சுற்றிய பின் சடங்குகள் இடம் பெற்று அவை உறவினர்களிடம் விடப்படும் . அங்கு அவர்களுக்கு இறுதி உணவு , இறுதி சடங்குகள் அனைத்தும்  செய்யப்பட்டு அவர்களுக்காக செய்யப்பட்ட பிரமிட்டுகளில் வைக்கப்பட்டு மூடப்படும் .இதில் நெகிழ வைக்கும் விடயம் என்னவென்றால் . அரசன் மறுபடியும் வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கை இருந்தவர்கள் பணம், பொருள் , உணவு என அணித்தையும் இட்டு அனுப்புவர் .அதனுடன் வேலை செய்பவர்களையும் காவலாளிகளாக உயிருடன் வைத்து மூடுவதே . காரணம் இறந்த பின்னரும் அரசன் உயிரித்து எழுந்தால்  காவலுக்கு காவலாளிகள் தேவை என்பதே .

எகிப்தியர்கள் இறந்த உடல்களை வரிசையாக பிரமிட்டுகளுக்குள் இறக்கும் விதம் . அப்போதே இத்தகைய தொழில் நுட்பம் .ஆனால் நமக்கெல்லாம் தெரிந்தது எகிப்திய மம்மிகள் தான் . அவை தான் பிரபல்யமும் கூட . ஆனால் தேன் அமெரிக்காவில் கடற்க்கரை பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களின் மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன . இதுவரை கண்டெடுக்கப்பட்ட மம்மிகளில் 6000 ஆண்டுகள் பழமையான சின்ன குழந்தை ஒன்றின் மம்மியே மிக மிக பழமையானது .

எகிப்திய ராஜாக்களால் தாம் இறக்கும் முன்னர் தாம் இறந்ததன் பின்னான வாழ்க்கைக்கு தேவையான இடத்தை அவர்களே இருந்து கட்டுகின்றனர் . மிகவும் பணம் செலவழிக்கும் விடயம் என்றால் இது தான் .நவீன மம்மி (லெனின் )

உலக புரட்ச்சியாளன் லெனின் இறந்த பின்னர் (1924 ) அவருடைய உடலை பக்குவப்படுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது . காரணம் மக்களால் அனைவராலும் அதிகமாக விரும்பப்பட்டவர் , தம்முடனேயே இருக்க வேண்டும் என முடிவு செய்தனர் .
முதலில் அடியில் வைத்து -30 டிகிரியில் புதைக்கப்பட்ட அவரது உடல் மீண்டும் எடுக்கப்பட்டு மருத்துவர்களால் மேலும் நிறைய காலம் வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டது .


ஆனால் அவரது உடலுக்கு மம்மீகளுக்கு  செய்யப்பட்ட அதே வேலைகள் மாற்றமில்லாமல் இடம் பெற்றது . ஆனால் ரகசியமாக ஒரு முறை இன்று வரை பேணப்பட்டு வருகிறது ரஷ்ஷியர்களால் . இறந்த அவரது உடல் 70 வருடங்களாக அப்படியே இருக்கிறது . இப்போதும் பேணப்பட்டு வருகிறது .

ஒரு வேலை லெனினின் உடலும் நிலத்துக்கடியில் செல்லலாம் . காரணம் கம்யுனிஸ்ட் ஆட்சி இல்லை . அனைத்து மம்மிகளும் , அது எகிப்திய மும்மியோ ,6000 வருடங்கள் பழமையான குழந்தை மம்மியோ!!. இவை அனைத்தும்  காலத்தால் கூறும் ஒரே பதில் . எமது இறந்த காலத்துக்கான எயக்ச்டயினின் நேர பயணம் . பல விடயங்கள் மர்மமாகவே தொடர்கிறது .

மம்மிகள் பற்றி அறிந்திருந்தால் அனைவரையும் சென்று அடைய  ஓட்டு போடுங்க ...

Tuesday, May 18, 2010

ஏலியன்ஸ் - பிரபஞ்ச தேடல் 2

எனது அடுத்த பதிவு :- ஒன்று ஏன் ஒன்று இரண்டு ஏன் இரண்டு ??? கிளிக்   

முன்னைய பதிவில் நூறு பில்லியன் பால்வீதி உள்ள  இந்த அண்டத்தில் நம்மைப்போல ஒரு சூரிய குடும்பமோ அல்லது எமது பூமி போலவே ஒரு பூமி இருப்பதற்கோ  எவளவோ சாத்தியங்கள் உண்டு என பார்த்தோம் . எமது பூமியில் உயிர்கள் எதிர்பாராத ஒன்றாகவே உருவாகியது என பார்த்தோம் . மற்றும் அடிப்படை மூலக்கூறுகள் எரி கற்கள் மூலம் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லப்படலாம் எனவும் பார்த்தோம்  . போதுய ஓட்டுகள் இல்லாததால் அந்த பதிவு அனைவரையும் சென்றடையவில்லை . முதல் பதிவை வாசிக்க :-- ஏலியன்ஸ்  பாகம்  1
==================================================================================

அவ்வாறு  எதிர்பாராத விதமாக எமது உலகில் தோன்றிய உயிர்கள் நாமாக இருந்தாலும் அனைத்திற்க்கும் ஒரே தியரி தான் . அது தான் தக்கன  பிழைத்தல் . எத்தனையோ உயிர் பிணைப்புகள் வந்தாலும் சூழலுக்கு  ஒத்துப்போகக்கூடிய உயிர்கள் தான் நிலைத்திருக்கின்றன . இவ்வாறு வந்த உயிரினங்களுக்கு  சக்தி (உணவு) தேவைப்பட்டது . அப்போது தொடங்கியது தான் தேடலும் உயிரினங்களின் பரம்பலும் .

இதற்க்கு பல உதாரணங்கள் நாம் தற்ப்போது  காணும் விலங்குகளிடம் உண்டு . கவனித்து பார்த்தால் தாவர உன்னிகளுக்கு கண்கள் முகத்தின் இரு பக்கமும் பக்க வாட்டில் இருக்கும் ஆனால் மாமிச உன்னிகளுக்கு கண் நேரே பார்த்த படி தான் இருக்கும் . தாவர உண்ணிகள் மாமிச உன்னிகளிடம் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள சுற்றி இருக்கும் கண் உதவுகிறது , ஆனால் மாமிச உன்னிகளுக்கு அவற்றின் இலக்கு தான் குறி அதனாலேயே அவற்றின் கண்கள் முன்னோக்கி இருக்கிறது .

இதை ஏன் கூறுகிறேன் என்றால் இவ்வாறன செயல்ப்பாடுகள் நாம் இன்னொரு உயிர் இருப்பதாக கூறும் உலகத்திலும் நடக்கிறது என்பது தான் ஸ்டீபன் ஹவ்கிங் எனும் கொஸ்மொலோஜிஸ்ட் , பௌதீகவியலாளர்   கூறியிருக்கும் கருத்து . நான் முன்னர் கூறிய  அடிப்படை மூலக்கூறுகளின்  வளர்ச்சிக்கு தேவையானது நீர் . நீர் வேறு சூரிய குடும்பத்திலும்  இருக்கலாம் . ஆனால் நம் அருகில்  இருக்கும் செவ்வாயிலும் உறைந்த நிலையில் நீர்  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . செய்மதி புகைப்படங்கள் உரை நிலை நீர் இருப்பதை உறுதி செய்வதோடு இன்னொரு சான்றும் கிடைத்துள்ளது .


இவை நீருடன் தொடர்பிருந்தால் மட்டுமே உருவாகும் என்பது விஞ்ஞானிகள்  கருத்து . செவ்வாயில்  உயிரினங்கள் இருக்கலாம் என்பது ஒரு கருத்து . அது இல்லாவிட்டால்  வியாழனின் உபகோள் யுரோப்பா விழும் இருக்கலாம் . முன்னைய பதிவில் யுரோப்பா  பற்றி பார்த்திருக்கிறேன் .  எம்மால் கிரகங்களுக்குள் தான் செல்ல முடியுமே தவிர நட்ச்ச்சத்திரங்களுக்குள் செல்ல  முடியாது .

ச்டீப்ஹன் ஹவ்கிங்கின் தேடல் படி ஏலியன்ஸ் எவளவோ வகைகளில் இருக்கலாம் . நிச்சயம் நம்மை போல நம் உயிரினங்களை  போல இருக்க வேண்டும் என்றில்லை .


நிச்சயம் நீரை தவிர இன்னொரு விடயத்தை அடிப்படையாக கொண்டு உயிர் வாழலாம்  . அது தான் நைற்றேஜன் . நம் பூயில் அது வாயுவாக இருக்கிறது . ஆனால் -320 பாகை பாரனயிட்டில் அது நீர் . நைற்றேஜன் கடல்கள் கூட நம் அண்டத்தில் இருக்கலாம் . அதில் கூட உயிரினங்கள் இருக்கலாம் .ஏன் வாயுக்களில் கூட உயிரங்கள் வாழலாம் என்பது எதிர்வு கூறல் . சுற்றி வர எங்கு பார்த்தாலும்  அங்கே உயிரினங்கள் வாழ்வதற்க்கு  சாத்தியம் அதிகம் .

ஏலியன்ஸ் எப்படி இருந்தாலும் கவலையில்லை அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதே முக்கியம் . அவர்களும் எம்மை போல யோசிப்பார்களா ? இல்லை எம்மை விட தொழில்நுட்பம் கூடியவர்களா ? . எம்மை விட தொழில் நுட்பம் கூடியவர்களாக இருந்தால் எமக்கு தான் ஆபத்து .


கூடுதலாக ஏலியன்ஸ் கடத்தல் சுமார் 50 வருடங்களாக நிகழ்வதாக கதை . தனியான வழியில் இரவு வேளையில் செல்பவர்கள் காணாமல் போவதாக கதை . ஆனால் இது அரசால் மூடி மறைக்கப்பட்டுள்ளது . நாசாவும் மறைத்து வருகிறது . அமெரிக்க அரசு பறக்கும் தட்டை கண்டு எடுத்ததாக தகவல் . அது பற்றிய எனது பதிவை வாசிக்க . அமெரிக்காவின் ரகசிய இராணுவத்தளம் ஏரியா ரியா  51 பற்றியது .

ஏலியன்ஸ் இருப்பதற்க்கு உறுதியான சில தகவல்கள் மேலும் உண்டு . ஆகஸ்ட் 16 1997   செய்மதியில் இருந்து தொலைத்தொடர்ப்பு நிலையத்துக்கு ஒரு சிக்னல் கிடைத்தது .


அதனை தொலைத்தொடர்பு நிலைய கருவிகள் பதிவு செய்தது . அது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது . கணணி  அந்த சிக்னலை ஆறு எழுத்துகளாகவும் இலக்கங்களாகவும் பதிவு செய்தது .  அதனை மாற்றிய போது வாவ் எனும் சொல் என கண்டறியப்பட்டது .

எலியன்சால்  எமது சூரிய குடும்பத்திட்க்கே பிரச்சனை காத்திருக்கிறது .
எலியன்சால்  என்ன பிரச்சனை ? மனிதன் பூமிக்கு என்ன செய்கிறானோ அதையே அவையும் செய்யுமா ?  அவற்றுடன் ஆனா ஆராச்சியில் வெற்றி காண முடியுமா ? என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் .


பிடித்திருந்தால் ஓட்டு போட்டு அனைவரையும் சென்றடைய செய்யவும் .

Thursday, May 13, 2010

12 B திரைப்படமும் பார்க்காத உலகமும்

குப்பைகளுக்குள் முத்து போல வந்த சில அருமையான தமிழ் திரைப்படங்கள் , கிட்டத்தட்ட நாம் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும்  சில  தியரிகளை வைத்து வந்த படங்கள் சரியான விளக்கமின்மை காரணமாக பெரிதாக பேசப்படவில்லை .

அவ்வாறான படங்களில் தசாவதாரம்( வண்ணத்து பூச்சி விளைவு ) , அதாவது இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களுக்கும் இடையில் ஒரு தொடர்புண்டு, ஒரு சிறிய மாற்றம் பெரியதொரு விளைவை கொண்டு வரும் என்கிறது அந்த தியரி .கயோஸ் தியரியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது . ஒரு வண்ணத்து பூச்சியின் இறக்கையின் படபடப்பு ஒரு பெரிய சூறாவளியையே உருவாக்கலாம் என்கிறது கயோஸ்  தியரி . 

 இன்னொரு அருமையான பேசப்படாத படம் தான் 12 B . அநேகருக்கு படம் விளங்கியிருக்க வாய்ப்பில்லை . போதிய விளக்கமின்மை காரணமாக இருக்கலாம் . விளக்கம் போதாது என்றும் கூற முடியாது . ஒரு படத்தில் வெறுமனே தியரியை விளங்கப்படுத்திக்கொண்டு இருக்க முடியாது .ஒரு வேளை நம்மவர்கள் ( பெரும்பாலான சதவீதம் ) இன்னும் அந்த நிலையை அடையவில்லையோ என்னவோ . அநேகரின் கருத்து விமர்சனங்கள் கூட அந்த படம் நேரத்தின் முக்கியத்துவம் கூறுவதாக மாத்திரம் அமைகிறது என நினைக்கின்றனர் . நிச்சயமாக  இல்லை .முடிந்தவரை விளக்க முயற்ச்சிக்கிறேன். வாசித்து விட்டு படத்தை மீண்டும்  பார்த்தால் விளங்கும் .12 B திரைப்படம் எடுத்துக்கொண்ட தியரி தான் ஐங்ஸ்டாயினின் ஸ்ட்ரிங் தியரி (String theory ), நேர பயணம்  அல்லது சமாந்தரமான உலகம் எனலாம் . மிக மிக ஆச்சரியமான தியரி தான் .

நாம் வாழும் உலகம் ஒன்றல்ல . முடிவிலி உலகங்கள் உண்டு .எமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்முடனேயே நகர்கிறது . நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் மாறு இருக்கிறது . நீங்கள் ஒரு பாதையால் செல்கிறீர்கள் என்றால் , அந்த பாதைக்கு  எதிராகவும் நீங்கள் செல்வது போல ஒரு நிகழ்வு உங்கள் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் .உங்கள் காதலி காதலை ஏற்றுக்கொள்கிறாள் என்றால் , ஏற்க்காமல் இருப்பது போல இன்னொரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் . ஆனால் அது முடிவிலி .ஒரு காரியத்தை செய்யும் நிகழ்வு செய்யாத நிகழ்வு என எம்முடனேயே இந்த நிகழ்வுகளும் நகர்கிறது .
  

நாம் பிரதிகளாக , எமது நிகழ்வுகள் கிளைகளாக  உருமாறி எமக்கு சமாந்தரமாக எம்முடனேயே  எமது இன்னொரு(பல)  வாழ்க்கை நிகழ்கிறது .

சில உதாரணங்கள்  சொல்கிறேன் 

சில இடங்களால் நீங்கள் செல்லும் போது அந்த இடங்கள் எப்போதோ பார்த்த இடங்கள் போல இருக்கும் .ஏற்க்கனவே அந்த இடத்தில் இருந்த ஒரு உணர்வு . சில செயல்கள் நாம் ஏற்க்கனவே செய்து முடித்தவையாக இருக்கும் .சிலரை எங்கேயோ பார்த்த உணர்வும் தோன்றும் . காரணம் எல்லா நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பு . நான் கூறியது போல இன்னொரு கோணத்திலும் நீங்கள் நகர்கிறீர்கள் .

சில நேரங்களில் நீங்கள் சில பொருட்களை தொலைத்துவிட்டு தேடுவதுண்டு , ஆனால் அது கிடைக்காது . போட்ட இடமும் தெரியும் ,அங்கே தேடினாலும் கிடைக்காது . ஆனால் பல காலங்கள் கழித்து அதே பொருள்  கிடைக்கும் .

சிலர் உங்களை எங்கேயோ  பாத்திருக்கேன் என்று கூட கேட்டிருப்பார்கள் . அதற்க்கான விடைகள் தான் இந்த தியரியில் .


அந்த தியரியை பிரதிபலிக்கும் படம் தான் 12 B . சாதாரண இளைஞனின்(ஷியாம் ) வாழ்க்கை ஒரு பஸ்ஸை தவறவிடுவதால் எவ்வாறு போகிறது எனவும் , அதே நபர் பஸ்ஸில் ஏறி இருந்தால் அவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும் என காட்டுவது தான் அந்த படத்தின் கரு . அதாவது இதில் அனைவருக்கும் விளங்காத மறந்த விடயங்கள் என்னவென்றால் இருவரின் வாழ்க்கையும் சமாந்தரமாக தான் செல்கிறது . ஒரே இடத்தில் இருவர் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் நடக்கும் .  

ஒரு ஷியாமுக்கு(இண்டர்வியூக்கு  பஸ்ஸை பிடித்த ) வேலை கிடைக்கிறது , ஜோதிகாவுடன் காதலில் தோற்கிறார் , வேலை  செய்யும் இடத்தில் சிம்ரனை சந்திக்கிறார் . மற்றைய ஷியாம்(பஸ்ஸை தவறவிட்ட ) வாழ்க்கையில் தோற்றாலும் ஜோதிகாவுடன் காதலில் ஜெயிக்கிறார் . ஆனால் ஜோதிக கண்ணுக்கோ அதே ஷியாமின் கண்ணுக்கோ மற்றைய ஷாம் தெரிய மாட்டார் , ஆனால் நிகழ்வுகளில் தொடர்பு இருக்கும் .

படத்தின் ஆரம்பத்தில் மருத்துவமனையில் சிம்ரனை(கவலையில் வந்து அழுகையில் ) சந்திக்கும் ஷியாம் . படத்தின் இறுதியில் அதே போல ஒரு நிகழ்வில் மீண்டும் அதே இடத்தில் சிம்ரனை பார்ப்பார் . ஆனால் சிம்ரன் முதல் அழுதமைக்கு காரணம் அதே ஷியாமின் இன்னொரு நிகழ்வு இறந்து கிடப்பது . அதாவது அதே ஷியாம் இறந்து கிடப்பார் . ஆனால் ஜோதிகா பின்னால் செல்லும் ஷியாமை கடந்து தான் சிம்ரன் செல்வார் . ஆனால் சிம்ரன் கண்ணுக்கு மற்றைய  ஷியாம் இருப்பது தெரியாது . கண்ணுக்கு தெரியாத இன்னொரு ஷியாம் உயிரோடு இருக்கிறார் .


பல இடங்களில் நடை பெறும் நிகழ்வு , உதாரணமாக சண்டை இடம் பெறும் இடங்கள் ,  இரு ஷாமும் மாறி மாறி ஜோதிகாவை சந்திக்கும் இடங்கள் என்பன பொதுவாகவே இருக்கும் . அது தான் அந்த தொடர்பு முறை . ஒவ்வொரு நிகழ்வுக்கும் பல பிரதிகள் இருக்கிறது .


இந்த தியரியை விளக்க தனிப்பதிவு தான் போட வேண்டும் . ஆனால் இதன் அடிப்படையாவது விளங்கியிருக்கும் .சுருக்கமாக விளக்கியுள்ளேன் . தவறவிட்டவர்கள் , விளங்காமல் விட்டவர்கள் இந்த படத்தை மீண்டும்  பாருங்கள்.  நிச்சயம் விளங்கும் . 

நல்ல படங்களை தந்த ஜீவா நம்முடன் இல்லை . உன்னாலே உன்னாலேயில்  ஆண் பெண் பிரச்சனைகளை சரியாக காட்டி இருப்பார் . இரண்டும் அருமையான படங்கள் . ஐங்ஸ்டாயினும் தியரிகளை முடிக்காமல் சென்றதும் கவலை தான் .

நல்ல படங்கள், வித்தியாசமான படங்கள்  நிச்சயம் மக்களை சென்றடைய வேண்டும் .

To Watch it Online- 12 B


பிடித்திருந்தால்  இந்த தகவல் அனைவரையும் சென்றடைய ஓட்டளிக்கவும் .அன்பான  உங்கள் பின்னூட்டங்களை தெரிவியுங்கள் .

Tuesday, May 11, 2010

ஏரியா 51

சுற்றி சுற்றி பார்த்தா எப்பிடியும் ஏலியன்ஸ் க்கும்  எல்லாத்துக்கும் தொடர்பு எப்படியோ வருகிறது .  படித்தவற்றை தொகுத்தவற்றை இங்கே தொகுக்கிறேன் .

ஏலியன்ஸ் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய வாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது . ஏலியன்ஸ் யாரும் நேரே பார்க்கவில்லை ஆனால் பறக்கும் தட்டு ? வீடியோக்களில் கூட கண்டு விட்டோம் .  ((UFO ) Unidentified flying object ) என அழைக்கப்படுகிறது. அதாவது கண்டுகொள்ளப்படாத பறக்கும் பொருள் . அது எங்கிருந்து வருகிறது ? உண்மையில் ஏலியன்ஸ் எனும்வேற்றுக்கிரக வாசிகளுடையதா ?

கற்பனைக்கு  எட்ட முடியாத உலகின் தொழில்நுட்பம் நிறைந்த மிக மிக ரகசியமான ஒருவரும் போக முடியாத இடம் தான் ஏரியா 51 . 1990 வரை அமெரிக்க அரசு இப்படியொரு இடம் இருப்பதையே மறைத்து வந்தது .  மிக பெரிய ரகசிய இராணுவத்தளம் . இது லெஸ் வேகஸ்( அமெரிக்காவின் லொஸ் என்ஜெல்சில் இருந்து 250 மயில்கள்  ) நகரத்திலிருந்து சுமார் 100 மயில்களுக்குள் அமைந்துள்ளது . இந்த இடத்தின் மேலே ஒரு விமானம் கூட பறக்க முடியாது . இன்று வரை யாரும் அங்கு சென்றது கிடையாது .  
1955 ,1960  களில் உருவாக்கப்பட்ட இந்த தளம் முன்னர் (NTC ) என அழைக்கப்பட்டது . இதில் 1 -30 வரையான பிரிவுகள் காணப்பட்டது . இந்த பெயர் பெற காரணம் சில வேளைகளில் 15 ஆவது தளத்துக்கு அருகில் அமைந்திருப்பதாக இருக்கலாம் . சகோதர தளமாகையால் 1 ஐயும் 5 ஐயும் ( 51 ) மாற்றி மாற்றி வைத்திருக்கலாம் . 

அப்பிடி என்ன தான் இங்கிருக்கிறது? மிக மிக நவீன தொழில்நுட்பப விமானங்கள் நவீன ஆயுதங்கள் , மிக மிக நவீன நமக்கு தெரியாத பல கண்டுபிடிப்புகள் இருக்கலாம் . ஏன் அனைவரையும் ஆச்சரியத்தில் வியக்க வைக்கும் பறக்கும் தட்டு இங்கிருந்தும் வரலாம்!! . வெளிவராத எவளவோ தொழில்நுட்பங்கள் அரசால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது .இவளவு ரகசிய தன்மைக்கு  காரணம் அது தான் . ஒரு வேளை  ஒளிக்கு இணையான வேகத்தில் அல்லது மிக வேகத்தில்  செல்லும் பொருட்களை கண்டு பிடிக்கும் முயற்ச்சி அங்கு நடைபெறுவதாக சில தகவல்கள் உத்தியோகபூர்வம் இல்லாது  கிடைத்துள்ளது . 


முக்கியமாக பல ஏக்கர்கள் பரப்பு கொண்ட பாரிய தளம் . அனேகமாக நிலத்துக்கு அடியில்  மிகப்பெரிய பல தளங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது . இதுவரை யாரும்  செல்லமுடியாத இடத்து செய்மதி புகைப்படங்கள் தான் கிடைத்துள்ளது . இங்கு பணியாற்றுபவர்கள் சத்திய வாக்குறுதி(வெளியில் எவருக்கும் சொல்ல மாட்டோம் ) எடுத்து தான் கடமையாற்றுகின்றனர் .

முக்கியமாக ஏலியன்ஸ் வந்த பறக்கும் தட்டு கண்டெடுக்கப்பட்டு அதை பற்றிய பரிசோதனைகள் இடம் பெறுவதாக ஊகிக்கப்படுகிறது . சில வேளை இவர்களுடைய கண்டுபிடிப்பாகவும் இருக்கலாம் . ஆளில்லாத விமான கண்டுபிடிப்பில் மிகவும் மும்முரம்  காட்டி வருகிறது ஏரியா 51 .     இஸ்ற்றேல்த்(strealth )  ஜெட்டின் இன் ஆரம்ப கட்ட வடிமைப்பு 1977 இலேயே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 1990 இல் அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக அறிவுக்கும் 
வரை  யாருக்கும் இப்படியொரு விமானம் தயாராவது தெரியாது .

 F117-A பின்னர்  தெரிய வந்த SR-71 Blackbird என்ற ஜெட் ஒரு மணித்தியாலத்தில் 2300 மயில்களை கடக்கும் . 90 ,௦௦௦ அடி உயரம் வரை செல்லக்கூடியது .

SR-71 Blackbird


TR3A Black Manta எனும் ஆளில்லாத விமானம் தாக்குதல் நடத்த ( இது வரை வேவு மட்டுமே செய்யப்பட்டது ) ஏரியா 51 இல் தயாராகுவதாக செய்தி . அதன் வேகம் ஒரு  மணித்தியாலத்துக்கு 3100 மயில்கள். தயாரிக்க திட்டமிட்டிருக்கும் விமானம் ஹைபெர்சொனிக் (சுமார் 4600 மயில் வேகம் ).   

அதி தொழில்நுட்பப  விமானங்கள்  அனைத்தும் உருவாக்கப்பட்டு பரீட்ச்சிக்கப்படும் இந்த ஏரியா  51 இன்னொரு அதி உச்ச தொழில்நுட்ப்பத்திட்க்கு தயாராவது தெரியவருகிறது . அது தான் பறக்கும் தட்டு . சிலர் பறக்கும் தட்டு இரவு வேளையில் அங்கிருந்து புறப்படுவதை அவதானித்து உள்ளனர் .


ஏலியன்ஸ் க்கும்  இந்த ஏரியா 51 க்கும் தொடர்புண்டா ? ஏலியன்ஸ் உலகம் ஒன்று அடித்தளத்தில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அது முழுவதும் ஏலியன்ஸ் தொழில் நுட்பம் நிறைந்ததாக கூறப்படுகிறது . 


வழமையாக பறக்கும் தட்டுகள் செய்தி வரும் போது அதை நாசா மறுப்பதும் , வழமை போல அமெரிக்க அதை பூசி மறைப்பதுமே  வழமை . வழமை போல பலூன் என கூறுகிறது அமேரிக்கா .ஆனால் இது வரை ஏரியா 51 பற்றிய எந்த அறிவிப்பும் அமெரிக்க அரசால் வெளியிடப்படவ்வில்லை . 

இந்த ஏரியா 51 பற்றியும் ஏலியன்ஸ் க்கும் அதட்க்குமான தொடர்பு பற்றியும் அடுத்த பதிவில் இடுகிறேன் . மேலும் பல நவீன தொழில் நுட்பங்களும் காணப்படும் அடித்தள ஏலியன்ஸ் தொழில் நுட்பம் பற்றியதாகவும் அமையும் . 

பிடித்திருந்தால் தகவல் அனைவரையும் சென்றடைய ஓட்டை கிளிக் செய்து அளிக்கவும்  .

கேள்விகள் ஏதாவது இருந்தால் மறக்காமல் பின்னூட்டத்தை அளிக்கவும் ..