தேஜா வு - முன்னரே பார்த்திருக்கிறேன் 2

தேஜாவு என்பது பிரெஞ்சு சொல் என்றும் நாம் பார்க்கும்  சில விடயங்கள் ஏற்க்கனவே பார்த்துள்ளோம் ஏற்க்கனவே இதைப்பற்றி பேசியுள்ளோம் ஏற்க்கனவே இந்த  விடயம்  நடந்துள்ளதே  போன்ற எண்ணங்களை தோற்றுவிக்கும் .இது அனைவருக்கும் தோன்றும் உணர்வு . அது பற்றிய முதலாவது பதிவு முதலாவது  பதிவு 


இதற்க்கு பலர் பல  தியரிகள் சொன்னாலும் பலவற்றின் தொகுப்பாக டச்சு மனோதத்துவவியலாளர் ஹெர்மன் ஸ்னோ  (Hermon Sno ) ஒரு விளக்கத்தை தொகுத்து வெளியிட்டிருந்தார் .நாம் பார்த்த  முப்பரிமாண தோற்றங்களை உடைந்த காட்ச்சிகளோ நிகழ்வுகளையோ நம் மூளை  தொகுக்க முற்ப்படும் . காரணம் நாம் உணரும் பல விடயங்கள் மீண்டும் பல வழிகளிலேயே பல புலன்கள் மூலம் மூளையை வந்தடைகிறது .  
அதாவது நாம் பார்த்த சத்தமோ அல்லது மனமோ மீண்டும் மூளையால் தொகுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. ஆனால் இது சில செக்க்கன்களே நீடிக்கும் . இதை உணர்ந்திருப்பீர்கள் .


வேறு ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக சில வேளைகளில் நாம் ஏற்க்கனவே உணர்ந்த நிகழ்வுகளில் சிறு உணர்வுகள் அதிர்வுகள் மீண்டும் நினைவை கொண்டு வரும் என்பதே . சில வேளைகளில் நீங்கள் ஒரு பழைய காரை ஓட்டி  செல்லும் போது ஏற்க்கனவே நடந்தது போன்று உணர்வு  வரலாம் . உண்மையில் நீங்கள்  சிறு வயதில் உங்கள் தாத்தாவின் காரில் சென்று இருந்தால் அந்த இருக்கையின் உணர்வு , அதன் அமைப்பு போன்ற சிறு சிறு உணர்வுகள் மீண்டும் உருவாக்கப்படலாம் .


பிந்திய  பார்வை 


அதாவது ஆராய்ச்சியாளர் ராபர்ட் எப்போர்ன் என்பவர் தனது ஆராய்ச்சியில் தேஜாவு என்பது நரம்புகளினால் கொண்டு வரப்படும் தகவல்களில் பிந்திய வெளிப்பாடு என்பதாகும் .


ஆனால் இவ்வாறான உணர்வுகள் நாம் நேரில் பார்த்தவற்றால் மட்டுமல்ல சில வேளைகளில் நாம் பார்த்த திரைப்படங்கள் கார்டூன்கள் போன்றவற்றில் இருந்தும் வெளிப்படலாம் .


உதாரணமாக திரைப்படத்தில் ஒரு  காட்சி  பார்த்தோமானால் அதே  காட்சி நாம் மீண்டும் பார்க்கும் போது அதுவும் இவ்வாறான உணர்வுகளை தோற்றுவிக்கும்  .


இதற்க்கு பிரெஞ்சு பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளன .. அவற்றில் சில ...


  • déjà entendu - already heard
  • déjà éprouvé - already experienced
  • déjà fait - already done
  • déjà pensé - already thought
  • déjà raconté - already recounted
  • déjà senti - already felt, smelt
  • déjà su - already known (intellectually)
  • déjà trouvé - already found (met)
  • déjà vécu - already lived
  • déjà voulu - already desiredஆனால் இதில் நிகழ்வுகள் அடிப்படையிலோ அல்லது வேறு விஞ்ஞானிகள் சிந்தனைகள் அடிப்படையிலோ முடிவு எடுக்கப்படவில்லை . உதாரணமாக நிகழ்வுகள் ஒரு கோர்வை அடிப்படையில் நடக்கின்றன போன்ற தியரிகள் அல்லாமல் மூளை சம்மந்தப்பட்ட மருத்துவ பார்வையில் எடுக்கப்பட்டுள்ளன.

Comments

Prasanna said…
நல்ல பகிர்வு.. Matrix படத்தில் இந்த உணர்வை அற்புதமாக உபயோகப்படுத்தி இருப்பார்கள்..
..மூளை உண்மையிலேயே சிறப்பான படைப்புதான்..

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்