Skip to main content

Posts

Showing posts from September, 2018

மழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி

' மழைக்குருவி ' பாடலில் இடம்பெறும், "கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது!" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான்.    "ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது? ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பா

நகர்த்தப்படுதல் - மணிரத்னம்

"To be moved by some thing rather than oneself"  <3 span=""> 'மௌனமான நேரம்' பாடலில், "புலம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ" என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். அது அலையின் புலம்பலை மோகத்தின் உச்ச உணர்வோடு ஒப்பிட்டு எழுதிய வரிகள்.   'காதல் சடுகுடு' பாடலில், 'தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய்  அருகில் வந்தால் இல்லை என்றாய்." எனும் அலையின் செயலை, காதற்பெண்ணின் செயலுடன் ஒப்பிட்டு எழுதியிருப்பார் வைரமுத்து. கடல் அலையின் ஒப்பீடு என்பது, அழைப்புக்கும் ஈர்ப்புக்குமிடையிலான இலக்கணம். இந்த இலக்கணத்தை உடல் அசைவுகளை வைத்து எழுதுவது எப்படி? பாடல் முழுக்கவும், கொஞ்சம் மெல்லிய விரகத்தின் சாயல் இருப்பதை காட்சியில் வெளிப்படுத்துவது எப்படி? உடல் அசையும் நடனம் ஒருவகை என்றால், ஒரு பொருளால் உடல் நகர்த்தப்படும்படி காட்சிகளை எழுதுவது இன்னொரு கலை. சூழலுக்கேற்றபடி, இரு உயிரின் உணர்வு ஸ்தலங்களைப் பிரதிபலிக்கும் பொருட்களாக இருக்கவேண்டும். அதேநேரம், அந்தப் பொருட்களையும் உயிர்ப்பொருளென உள்வாங்கிக்கொண்டு கலைக் காட்சிகள் எழுதவேண்டும்.

உண்ணத் தலைப்படுதல் - மணிரத்னம்

பேஸ்புக்கில் எழுதிய பதிவு   I want to eat the fleeting shade of your lashes. - நெரூடா  <3 span=""> ஒரு நல்ல கூடலுக்கு முன்னரான பழக்கமும், ஒருவருக்கொருவர் சொல்லிவிட்ட மிக நேர்மையான காமமும், உச்ச நம்பிக்கையும், நெடுந்தூர உலவுதலும், ஆழமான உரையாடல்களும், எப்படி நிறைவில் ஒரு நல்ல காமமென மொழிமாற்றப்பட்டு உடல்களால் உரையாடப்படுகிறதோ, அதுபோல, நேசத்தையும் அழகையும், உடலால் சரிவர எழுதித் தெளிதல், கொண்டாடுதல் எல்லாம் என்றும் ஆராத அந்த அன்புக்கு அவசியமானது.   'காதல் வெறியில் நீ காற்றைக் கடிக்கிறாய்' என்று வைரமுத்து எழுதிய வரிகளின் அழகை, 'ஓக்கே கண்மணி' திரைப்படத்தில் காட்சியாகக் காட்டியிருப்பார் மணிரத்னம். மிகமிக மெல்லிதாக அந்தக் காமத்தின் தீவிரத்தை காட்சிப்படுத்தியிருப்பார். காமத்தில் பற்குறி பதித்தல் ஒரு கலை. அதிலும், உச்சூனக, பிந்து, ப்ரவாளமணி போன்றவை கன்னத்தில் இடக்கூடியவை. சில முத்துவடம் போன்ற பதிப்புகள் மார்புக்குரியது. இந்த இலக்கணங்கள் யாவும் காமசாஸ்திரம் சொல்லுவது. மெல்லிய வலிதரும் சுகங்கள் சில உயிர்களுக்குப் பிடித்தம். அது மிகை அன்பை வெளிப்படுத்த

மணிரத்னம் - தீண்டல் - Irresistible desire

பேஸ்புக்கில் எழுதிய  பதிவு 'உலகங்கள் ஏழும் பனிமூடும் போதும், உன் மார்பின் வெப்பம் போதும்' - Fire & Ice 'Fire & Ice' எனும் தலைப்பில், ரொபேர்ட் ஃரொஸ்ட் எழுதிய பிரபலமான கவிதை ஒன்று இருக்கிறது. வெறும் ஒன்பது வரிக் கவிதை, விஞ்ஞானிகளைப் பல விஞ்ஞான விவாதங்களுக்கு அழைத்துப்போனது. தத்துவார்த்த விவாதங்களுக்கு அழைத்துப் போனது. பலரையும் பேசவைத்தது. அந்தக் கவிதை தன்னுள்ளே பல முகஙகளைச் சுமந்திருப்பதுதான் அதன் உள்ளழகுக்குக் காரணம் எனலாம். பல கேள்விகளுக்கான பதில்களைப் புதிராக எழுதி வைத்திருக்கிறது. அந்தக் கவிதையில், ஆசை அல்லது வெறுப்பு எனும் இரண்டில் ஒன்றில் மனித உணர்வுகள் அழியும் என எழுதியிருப்பார். ஆனால், தன் நிலைப்பாட்டை ஆசையின்(Desire) பக்கம் வைத்திருப்பார். இங்கு ஆசை என்பது தீ அல்லது வெப்பத்தைக் குறிக்கும். வெறுப்பு என்பது, குளிர் அல்லது பனியைக் குறிக்கும். கூடவே தீ அல்லது பனியில் உலக உயிர்கள் அழியும் என்கிற அர்த்தத்தையும் அந்தக் கவிதை சுமந்து வரும். வைரமுத்து தெளிவாக, நிலம் கடலாகும், கடல் நிலமாகும் நம் பூமி அழிவதில்லை என்று நிலவியலை எழுதினார். அதுபோலத்தான்

வீராவின் காதல் - மணிரத்னம்

பேஸ்புக்கில் எழுதிய பதிவு ஆண்டாளுக்கு, கண்ணன்மீது நெருக்கமான காதல் உணர்வு இருந்தது. இதை, 'Limerence' என்றும் சொல்லலாம். வேட்கை அதிகமுள்ள காதல். அவனுடைய மார்பில் அணிந்த மாலையைக் கொணர்ந்து என் மார்பில் புரட்டுங்கள் என்று கேட்பாள். அவன் மார்பு தொட்டாடிய பூக்களைத் தன் மார்புமீது பூசிக்கொள்வாள்.  இன்னும் கொஞ்சம் மோகத்தோடு, அவனின் அரையில் தவளும் ஆடையைக் கொண்டுவந்து அங்கமெங்கும் வீசுங்கள் என்பாள். அந்த வாசத்திலே தன் வாட்டம் தணியும் என்று சொல்வாள். அவள் நினைவு மற்றும் உடலெங்கும் அவனின் நினைவே சூழ்ந்திருக்கும்.  வைரமுத்து எழுதிய, "துருவி என்னைத் துளைச்சுப்புட்ட தூக்கம் இப்போ தூரமய்யா தரைக்கு வெச்சு நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா" என்கிற வரிகளில் எல்லாம் கொஞ்சம் ஆடையின் நேசம் உண்டு. விஞ்ஞானத்தின்படி, ஆடையில் ஆடும் வியர்வை வாசனைகளை இந்தக் காதல் நெருக்கம் விரும்பும். எப்பொழுதும் உடலைத் தொட்டாடும் ஆடைகளென்றால் காதலுக்கு மிகப்பிடித்தம். உள்ளாடை இறுக்கங்கள்மீது முத்தம் வைக்குமளவு உம்மத்தம் வளர்க்கும். காதலியின் உள்ளாடைகளை, உள்ளங்கைக்குள் செலுத்தித் துவைப்பதை

மணிரத்னம் - Fabric dance

பேஸ்புக்கில் எழுதிய பதிவு "காதல் சடுகுடு" பாடலில், ஒருவித துடுக்குத்தனம், வேட்கை, காதலின் இறுக்கம் எல்லாமுமே இருக்கும். அலைபோல சடுகுடு ஆடும் காதல் இருக்கும். ஒருவித கண்ணாமூச்சி ஆட்டம்,  Sexual Playfulness எல்லாமும்  இருக்கும் .  அதை ஆடைகளைக் கொண்டு(Fabric dance) அத்தனை நயமாக எழுதியிருப்பார் மணிரத்னம். கவனித்துப்பார்த்தால், ஒவ்வொரு சட்டகத்தினுள்ளும் அத்திரைமொழி உள்ளாடும்.  துணிகொண்டு ஆடப்படும் நடனத்தில்(Fabric dance), இசைக்கேற்றபடி அலைபோல அசைவுகள் ச ெய்யலாம்; அலைகளைப் பிரதிபலிக்கலாம். 'உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே' என்கிற நெகிழ்வான வரிகளுக்குக் காட்சியில் நியாயம் சேர்க்கலாம். மொழி வளைத்து வளைத்துத் தரும் நெகிழ்வுத்தன்மையையும், அதன் பொருளையும் நடனக் கலைகொண்டு எழுதலாம். ஆடைகள் மீதான காமம் என்பது தனிக்கலை; ஒருவித Fetishism. 'தலைக்கு வைச்சு நான் படுக்க அழுக்குவேட்டி தாருமய்யா' என்பதுபோல, மிகுகாதலின் விரகத்தில் எழும் வேட்கை. ஒரு மொழியின் உட்பொருளைக் களைந்து களைந்து, ஒரு மறைபொருள் கொண்ட கவிதையைப் படிப்பதில் இருக்கும் சுகம், ஒரு ஆடை க

அவளுக்கு, வாளினிற் கொடிய வயமான் கண்கள்.

அவளுக்கு, வாளினிற் கொடிய வயமான் கண்கள், அம்மம்ம!   செந்தூரப் பொட்டும், சீரான பூந்துகிரும், கொண்டைக்குச் சில சின்மலர்களும் சூடியபடி நின்றாள். கண்ணாடி முன்னால், வளைகள் ஆர்க்க, அம்மம் ததும்ப, இரு கைகளையும் உயர்த்தி, குழலை வாய்ப்பாகச் சொருகி முடிந்தாள். இதழில், செம்முகை முத்தங்கள் பல வரச்செய்து, குதிக்கால்கள் தத்தி எழ, காற்றை முத்திமுத்திச் சிரிக்கும் குழந்தை அவள். இப்படி எல்லாமும் கோர்த்து, புறத்தில் இயற்கை போற்றி வளர்த்த பொம்மல் மலரழகுபோல், அழகினை வாரிக் கட்டிக்கொண்ட பதுமைபோ ல், பொலிவான தோற்றம் அவளுக்கு. அகத்தின் ஆழத்தில், மிகையான அழகுகள் கண்டால், அவளுக்கு அதைக் கண்ணீர் விட்டுக் கொண்டாடத் தோன்றும். இப்படி அழகினால் மனதைப் பழக்கிக்கொண்டவளிடம் மிகுதிப் பண்பெல்லாம் வந்து வணங்காதா என்ன? இதற்குமேலும் அவள் மனதின் வடிவைச் சொல்ல உவமைகள் வேண்டுமா? ஆனால், இவை மட்டுமா மதிப்பிற்குரிய பெண்ணின் இலட்சணைகள்? அவளின் இன்னொரு முகமும்தானே அரவணைப்புக்குரியது? ஒரு நாளின் இரகசிய யோசனைகளில், மாராப்புப் பெருமூச்சில், தன் அழகைத் தானே மெச்சி மருவும் மோகப் பொழுதுகளில், அவளிடம் தோன்றும் அந்த வாளினிற்