ஒருவன் தானாக தன்னை உணர்ந்து தானாக சிந்திக்க தொடங்கும் போது தான் ஒரு பூரண அறிவை எட்ட முடியும் என்பது உண்மை என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் ஐங்ஸ்டெயின் ஒரு சிறந்த உதாரணம் என்பது சிறு குழந்தைகளில் இருந்து அவர்களது பெற்றோர்கள் வரை தெரிந்திருக்க வேண்டும் . வெறும் புள்ளிகளிலும் , வேறு ஒருவர் சொல்லிக்கொடுத்த விடயங்களிலும்,மனப்பாடங்களிலுமே தற்போதைய அறிவு நிர்ணயிக்கப்படுகிறது . இவை அனைத்திற்கும் விதிவிலக்கு ஐங்ஸ்டெயின் எனலாம் .. ஐங்ஸ்டெயின் தனது ஆரம்பக்கல்வியிலேயே பல கேள்விகளையும் தேடலையும் தொடங்கியவர் . " ஏன் மாணவர்கள் எல்லோரும் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் , ஆசிரியரை பார்த்து கேள்விகள் கேட்க்காமல் " என மனதிற்குள் இருத்திய முதல் கேள்வி , இறுதிவரை அவரை கேள்வி கேட்க்க வைத்தது . " He who asks a question is a fool for five minutes; he who does not ask a question remains a fool forever ." என்று ஒரு சீனத்தத்துவம் உண்டு . "யார் ஒருவன் கேள்வி கேட்க்கிறானோ அவன் ஐந்து நிமிடம் தான் முட்டாள் , கேள்வியே கேட்க்காமல் இருப்பவன் முழுநேர முட்டாள் " . ஐன்க்ச்டேயி