Tuesday, December 28, 2010

ஆத்திகன், நாத்திகன்(பகுத்தறிவு ) இடையே உரையாடல் -அறிவியல் ? கடவுள்?


பாரபட்ச்ச்சமின்றி ஒரு நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் டாக்டர் பால் டேவிஸ் என்பவரால் "The mind of the god " என்ற புத்தகத்தில் எழுதப்பட்டதை சுஜாதா அவர்கள் பகிர்ந்திருந்தார் ..... நான் உங்களோடு பகிர்கிறேன் ....


நாத்திகன் :- ஒரு காலத்தில் உலகத்தில் நடக்கும் அத்தனை காரியங்களுக்கும் கடவுள் தான் காரணம் .கல்லுக்குள் தேரை ,கருப்பை உயிருக்கு எல்லாம் கடவுள் தான் ஏற்ப்பாடு செய்கிறார் .அடுத்த பஸ் வருவது ,சிப்மண்டு பணம் திரும்பி வருவது கூட கடவுள் செயல் என்கிற விளக்கம் தேவைப்பட்டது .அது அறியாமையினால் வந்தது .மெல்ல மெல்ல அறிவியல் எல்லாவற்றின் இயற்கையையும் விளக்க கடவுளின் பொறுப்புக்கள்  படிப்படியாக குறைந்து வருகிறது . அந்த முதல் வெடிவரை( பிக் பாங் ) கடவுளே இல்லாமல் போய்விட்டார்கள் . அதற்க்கு மட்டும் எதற்கு ஒரு கடவுள் தேவைப்படும் என்கிறாய் .

ஆத்தீகன் :- உங்கள் அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க முடியாது . உலகில் பல விந்தைகள் உள்ளன. உதாரணமாக ,பெரிய வியப்பு உலகில் - முதல் உயிர் எப்படி உருவானது என்பதே சரியாக விளக்கப்படவில்லை .உங்கள் அறிவியலாளர்கள் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் .

நாத்திகன் :- உண்மை தான் அறிவியல் எல்லாவற்றையும் இன்னும் விளக்கவில்லை . இதில் இன்னும் என்பது முக்கிய சொல் .விளக்க முடியாது என்றில்லை . கொஞ்ச நாள் ஆராச்சியில் அதன் அறிவு விஸ்தாரமாக ,மெல்ல மெல்ல விளக்கம் கிடைக்கும். ஆத்திகர்களான எல்லோரும் எப்போதும் இதை தான் சொல்கிறீர்கள் .உங்கள் அறிவியலால் இதை விளக்க முடியவில்லை என்பீர்கள் . விளக்கி விட்டால் இது எப்படி ? இது எப்படி ?இதை விளக்க முடியுமா ? என்று அந்த நிமிடத்தில் இன்னமும் விளக்கம் காணாத ஒரு பகுதியை எடுத்துக்காட்டாக சொல்கிறீர்கள் .

இப்படி இந்த விளக்கப்படாத ஓட்டைகள் இடம் மாறிக்கொண்டே போகின்றன .மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகின்றன .என்னை பொறுத்த வரை இவை அனைத்தும் அறிவியலால் விளக்கப்பட்டு விடும் .அவகாசமும் ஆராய்ச்சி வசதிகளும் கிடைத்தால் அத்தனை பள்ளங்களுள் குழிகளும் நிரப்பப்படும் .கடவுள் என்கிற தத்துவத்திற்கு தேவை இல்லாமல் ;அதாவது உங்கள் கடவுளுக்கு மெல்ல மெல்ல பவர் குறைந்து பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஏற்ப்பட்ட மகா வெடிக்கு (பிக் பாங் ) மட்டும் உண்டானவர் என்று முடியும் இன்று .

ஆத்திகன் :- உங்கள் அறிவியல் பிரபஞ்சம் இயங்க கடவுள் தேவையில்லை என்று நிரூபித்தாலும் ,அதனை ஆரம்பிக்க ஒரு கடவுள் தேவைப்பட்டே தீருகிறார் .

நாத்திகன் :- சரி.............. வேறு காரணம் எதுவும் இல்லாமல் கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார் என்ற கூற்றுக்கு மட்டும் தேவைப்படுகிறார் என்றாள் ,நீங்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விட்டீர்களா ?

ஆத்திகன் :- பின் ?

நாத்திகன் :- இது தீர்வு அல்ல .பிரச்னையை வேறு தடத்துக்கு திசை திருப்புவது அவ்வளவு தான்  ."கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார் " -இதற்க்கு என்ன அர்த்தம் ? இது எனக்கு எந்த செய்தியையும் தருவதில்லை .அந்த படைப்பு கணத்தின் போது யாரும் இல்லை . அதை சோதித்து பார்க்க முடியாது . ஒரு மர்மத்தை (பிரபஞ்சத்தின் ஆரம்பம் ) விளக்க மற்றொரு மர்மத்தை (கடவுள்) பயன்படுத்துகிறீர்கள் .அவ்வளவே ...நான் உங்களை உடனே கேட்கலாம் கடவுளை படைத்தது யார் ?

ஆத்திகன் :- கடவுளை யாரும் படைக்க தேவையில்லை .அவர் சுயம்பு .அவர் ஒரு தேவை .அவர் இருந்தே ஆக வேண்டும் .அதில் ஏதும் நமக்கு தேர்வு இல்லை .

நாத்திகன் :- அதே போல நம் பிரபஞ்சத்தையும் யாரும் படைக்கத்தேவையில்லை .அது சுயம்பு .அது தேவை .அதில் தேர்வு ஏதும் இல்லை என்று சொல்லலாமல்லவா ?

ஆத்திகன் :- விஞ்ஞானிகள் தர்க்கச்சங்கிலியை கவனிக்கலாம் .ஏன் மரத்தில் இருந்து பழம் விழுகிறது ? புவியீர்ப்பு விசையால் ..,ஈர்ப்பு விசை எப்படி வந்தது ?- அது ஒரு புலம் போல பரவியிருப்பதால் என்கிறீர்கள் .அது விண்வெளியின் வளைவு என்கிறீர்கள் .இவ்வாறு ஒரு விளக்கத்தை மற்றொரு விளக்கத்தால் இடம் பெயர்த்துக்கொண்டே போகிறீர்கள் .நாங்கள் கூறும் கடைசி கடவுளை மட்டும் ஏன் மறுக்கிறீர்கள் ?]

நாத்திகன் :- அப்படியில்லை .எங்கள் விளக்கங்கள் அனைத்தும் பரிசோதித்து பார்க்க கூடியவை  .விண்வெளி வளைந்திருப்பதை கருவிகளையும் விசைகளையும் வைத்து அளந்து பார்க்க முடியும் .இல்லையெனில் அந்த விளக்கம் நிராகரிக்கப்படும் . விளக்கங்கள் எப்போதும் திருத்தத்துக்கு தயாராக இருப்பவை அவை வெறும் பேப்பர் முயற்ச்சிகள் அல்ல .

பிரபஞ்ச அறிவை விஸ்தரிக்கின்றன .அவைகளில் இருந்து நமக்கு பயனுள்ள நூற்றுக்கணக்கான டேக்நோலோஜிகளும் வின்வேளிப்பயனங்களும் அன்றாட விடயங்களும் நடக்கின்றன .ஆனால் இந்த கடவுள் என்கிற தத்துவத்தை வைத்துக்கொண்டு ஒரு பயனும் இல்லை .அது இன்னொரு சிக்கலான அம்சத்தை தோற்றுவிக்கிறது .மேலும் கடவுள் பிரபஞ்சத்தை படைத்தாரா என்பதை நம்மால் சரி பார்க்கவே முடியாது .பரிசோதனைக்கு உட்படுத்தவோ நிரூபிக்கவோ முடியாது ." கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார்" என்பது வெற்று வாக்கியம்,அவ்வளவு தான் .அவருடைய குணங்கள் என்ன ?பொறுப்புக்கள் என்ன ? என்ன கருவிகளை பயன்படுத்தினார் ? ஏன் இப்படி படைத்தார் ? இந்த விபரங்கள் இல்லாமல் "கடவுள் இருக்கிறார் என்பதற்கு நீங்கள் வேறு விதமான நிரூபணம் தராத பட்ச்சத்தில் அந்த கடவுளை என் போன்றவர்கள் நம்பத்தேவையில்லை .

ஆத்திகன்  :- பிரபஞ்சத்தின் ஆரம்பக்கணம் வரை உங்களிடம் விளக்கம் இருக்கலாம் .ஆனால் அந்த ஆரம்பக்கணத்தை ஒரு நிகழ்வாகவே முரட்டு உண்மையாகவே அறிய விரும்புகிறீர்கள் .அதற்க்கு ஓர் ஆழமான விளக்கத்தை தேட மறுக்கிறீர்கள் .

நாத்திகன் :- நீங்களும் கடவுளை ஒரு முரட்டு உண்மையாகவே ஒப்புக்கொள்ள விரும்புகிறீர்கள் .நாங்கள் பிரபஞ்சத்தை .அவ்வளவு தான் வித்தியாசம் .வாருங்கள் காப்பி சாப்பிடலாம் ...


Thursday, December 16, 2010

மனித மனம் ,உயிர் -ஈகோ, சூப்பர் ஈகோ , இட்- சிக்மன் புரோயிட்

மனித அறிவின் அசுர பரிணாம  வளர்ச்சியில் விஞ்ஞானம் பல புராண கட்டுக்கதைகளையும் பல நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து அனைத்திற்கும் காரணம் தேடும் பயணத்தில் நேரம் எனும் பாதையில் செல்கிறது . மனோதத்துவம் பல வகைகளில் விஞ்ஞானத்தோடு ,விஞ்ஞானத்தில் ஒரு பெரும் பகுதியாக செயல்ப்படுகிறது  என்றால் மிகையாகாது . 

சீனாவில் சீ எனவும் இந்தியாவில் பிராணா எனவும் மேற்கில் soul எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இறை நம்பிக்கையில் உள்ளவர்கள். ஆனால் அதற்க்கு எந்தவித விஞ்ஞான ஆதாரமோ இதுவரை கிடையாது . ஆனால் இப்போது சமயங்கள் நிறுவனங்கள் வேறு விதமாக கதையை மாற்றுகின்றன . அதாவது பிழைப்பு தொடர்ந்து நடக்க மனோதத்துவத்திற்கு மாறி விட்டன .உள்ளிருந்து இயக்கும் மனசாட்சி இறைவன் என்கிறார்கள் .

 உயிர் ,மனது ,மரணம்,பயம்  இது மூன்றும் இறை நம்பிக்கையை தூண்டுவன . ஆனால் உயிர் ,மனது,மனசாட்சி போன்றன இருக்கின்றனவா ? இது தான் விடயம் ....... 


முன்னர் ஒரு தனிமனிதனுக்கு ஏற்ப்படும் மனோதத்துவ  பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்ச்சிகள் வேறு விதமாகவே நடந்தது . அவர்களை தனிமையில் வைப்பது ,இருட்டில் வைத்திருப்பது போன்றன . ஆனால் சிக்மன் பிரெயுட்(freud ) வேறு விதமாக முயற்ச்சித்தார் .அதாவது நோயாளிகளின் பிரச்சனைகளை கேட்டறிவது . ஒருவருடன் கதைத்து அவர்களுடைய  துன்பங்களை கேட்பதன் மூலம் மனநோய் பிரச்சனைகளில் இருந்து மீட்டார் .

மனித மனதை  ஈகோ, சூப்பர் ஈகோ , இட் என்று  மூன்று வகையாக பிரித்தார் ..
இதில் இட் சிறு வயதிலேயே இருக்கும் . ID (Internal Drive ) இட் தான் சிறு வயதிலேயே மனதில் உருவாகும் முதல் வளர்ச்சி .இது கட்டுப்படுத்த முடியாதது . இது மிகவும் ஆழ மனதின் செயல்ப்பாடு . இதனுள் ஒரு பிரிவு  Thanatos (தனடோஸ்)  என அழைக்கப்படும். "ஆபத்தை தூண்டக்கூடிய செயல்ப்பாடுகளின் பால் ஈர்க்கப்படல் " மற்றையது  Libido (லிபிடோ) என்று அழைக்கப்படும் "பாலியல் ரீதியான காம ,காதல்  நிலைக்கு தூண்டப்படல்" . இவை இரண்டும் இட் இல் பகுதிகள் .

பின்னர் இரண்டாவதாக குழந்தைப்பருவ வளர்ச்சியில்(இரண்டு மூன்று வயதுகளில் ) சூப்பர் ஈகோ பரிணமிக்கிறது . உதாரணமாக அம்மா ஒரு செயலை செய்ய வேண்டாம் என சொல்லும் போது இது பரிணமிக்கிறது . அதாவது மேலே கூறிய இட் இல் உள்ள தனடோஸ்(ஆபத்தை தூண்டக்கூடிய செயல்ப்பாடுகளின் பால் ஈர்க்கப்படல்,கூடாத செயல்கள் ) இந்த சூப்பர் ஈகோ வை தூண்டுகிறது .

சூப்பர் ஈகோ வின் பகுதி  இட்  இல் உள்ள அந்த செயல்ப்பாட்டை கட்டுப்படுத்துகிறது . இறுதி வளர்ச்சியான   ஈகோ முழுமையாக ஒரு மனிதனை எது சரி எது பிழை என தன்னிச்சையான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது .சில விடயங்களை பிழை என நேரேயே சுட்டிக்காட்டும் . மனசாட்சி என்று சொல்லலாம் .


இதில் சமயத்தை அழகாக தொடர்ப்பு படுத்துகிறார் . இந்த சூப்பர் ஈகோ வில்  ஒரு பகுதியாக சமயம் உருவானது . இட் இல் உள்ள காம மற்றும் தவறான விடயங்களை(லிபிடோ மற்றும் தனடோஸ்) கட்டுபபடுத்த  தொழில்ப்படுகிறது .எத்தனையோ குரு மார்களால்,யோகிகளால்  காமத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது உண்மை  . அது தான் இறைவன் என மனது நினைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது மனித மனங்களை .

அதுவும் இந்த சூப்பர் ஈகோ வில் இறைவனின் ,சமயத்தின் தொழில்ப்பாடு மனித அன்பு ,கருணை வளரும் போது அற்றுப்போகும் . ஒரு காலத்தில் மனித அன்பு ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்  .சமய ,இறைவன் கட்டுப்பாடுகள் உறுதியானதாக இல்லை . என  ப்ரோட் எதிர்வு கூறினார் . 

உதாரணமாக நமது சாமி மார் இறைவனை வணங்குபவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தான் தெரியுமே .

ஆதிகாலத்தில் மனிதனிடம் இட் மட்டுமே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது .

மனித ஆன்மா  21 கிராம் நிறை உடையது என ஒரு ஆய்வு மர்மமாக உள்ளது .
தொடரும்.... .

Tuesday, November 9, 2010

அமானுஷ்ய சக்தி - கனவு உலகம் -தொடர் 2

சென்ற  பதிவில் இந்த ஐந்து புலன்களின் ஊடான உலகத்தொடர்ப்பையும் தாண்டி ஒரு வித சக்தி ,அது ஆறாவது உணர்வாக ஒரு வித அமானுஷ்ய சக்தி இருப்பது பற்றி பார்த்தோம் . உதாரணமாக ஒருவரை நினைக்கும் போது அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும்.. .முதலாவது பதிவு  வாசிக்க :- அமானுஷ்யம்  - ESP  முதலாவது பதிவுக்கு தந்த உற்ட்சாகத்திர்க்கு  நன்றி வாசக நண்பர்களே :)

ஆதிகாலம் தொட்டே இது நிலவி வந்தாலும் நவீன விஞ்ஞான ,மனோதத்துவ முறையில் இருபதாம் நூற்றாண்டில் முதற்ப்பகுதியிலேயே டியுக் பல்கலைக்கழக பேராசிரியர்,பிரபல அமானுஷ்ய தேடல் விஞ்ஞானி( paranormal research )  J.B. Rhine என்பவரால்  இது 1934 இல் அறிமுகப்படுத்தப்பட்டது .


கூடுதலாக அனைவரிடமும் காணப்படும் ஒன்று ,அதை நாம் அன்றாடம் அனுபவிக்கிறோம் என சிலரும் , அது ஒரு வித மனோதத்துவ சக்தி கடத்தப்படும் நிலை எனவும் அதை சிலரால் மட்டுமே செய்ய முடியும் எனவும் கூறுகின்றனர் . ஆனால் சிலருக்கு சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது .

இது இரு வித சாதாரண ஒளி , எக்ஸ் ரே கதிர்கள் கடத்தப்படுவது போல சாதாரண விடயம் எனவும் ஆனால் இதை விஞ்ஞான ரீதியில் இன்னும் அறியமுடியவில்லை எனவும் ஒரு தியரி இருக்கிறது .

ஆனால் இந்த தியரி டெலிபதிக்கு மட்டுமே பொருந்தும் .Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன், Retrocognition - இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன் களுக்கு பொருந்தாது . காரணம் ஒரு மூளையில் இருந்து ஒரு செய்தியை அனுப்பும் போது அதனை வாங்குவதற்கும் ஒரு பெறுனர் இருக்க வேண்டும் .

ஒரு சில உதாரணங்கள் நடைமுறை வாழ்க்கையில் சொல்லலாம் .. "இப்ப தான் நினைச்சன் உன்னிடம் இருந்து அழைப்பு வருகிறது" என நாம் அடிக்கடி அன்றாட வாழ்க்கையில் சொல்வதுண்டு . சிலர் பொய்யாகவும் சொல்வதுண்டு ,ஆனால் பெரும்பாலும் அது உண்மையே .


ஆனால் இந்த செயல்ப்பாடு இருவர் இருக்கும் தூரத்தில் தங்கியிருப்பதில்லை . உதாரணமாக ஒரே அறையில்  இருக்கும் இருவருக்கும் , உலகில் வேறு வேறு மூலையில் இருக்கும் இருவருக்கும் இடையில் இந்த இன்னொரு சக்தி பரிமாற்றம் ஒரே மாதிரியாக இருப்பது உணரப்பட்டுள்ளது . ஆகவே இது எந்த அலைகளாக இருப்பதற்கும் சாத்தியம் இல்லை .மற்றும் உடலில் அவ்வாறான சக்தியை வெளிவிடக்கூடிய  எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .

இத்தகைய குழப்பமான  நிலையில் இன்னொரு தியரியும் முன்வைக்கப்பட்டுள்ளது . அது எமக்கு தெரியாத சமாந்தர உலகம் பற்றிய தியறியோடு  சம்மந்தப்பட்ட விடயம்  . இன்னொரு நேரம் வேறொரு நிகழ்வில் இருக்கும் எம்மால் அந்த உணர்வுகளை மட்டும் உணர முடியும் . சமாந்தர உலகம் பற்றி தெளிவுற எனது 12B திரைப்படம் பற்றிய பதிவு .

இவ்வளவு குழப்பமான உணரமுடியாத பரிசோத்தித்து தெரியாத தியரிகளுக்கு நடுவில் எப்படி இதை ,இந்த அமானுஷ்யங்களை ஏன் நம்பவேண்டி இருக்கிறது ?எப்படி நம்புவது ? என்பது பற்றி பார்ப்போம் .

சிலருக்கு ஏதாவது கெட்டது நடக்கப்போகிறது என மனம் உறுத்தும்.அவரது நெருங்கிய உறவுகளுக்கு உண்மையிலேயே ஆபத்து ஏற்ப்படலாம் . ஆனால் இது டெலிபதியோடு சம்மந்தப்பட்டது அல்ல . இவைகள் பற்றியும் ஆராய்வோம் .. தொடரும் ...

கொஞ்சம் நகைச்சுவைக்கு ..சிந்திக்கவும் ... 
பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள் .. நன்றி ..

Wednesday, November 3, 2010

அமானுஷ்யம்-மனிதன்- டெலிபதி

பல விஞ்ஞான ஆய்வுகளையும் அறிவியலையும் உற்றுநோக்கும் போது அனைத்தும்  ஒன்றோடு ஒன்று இணைந்தவையே. அவதார் படத்தை ஒரு சிறு உதாரணமாக சொல்லலாம் .

நேரம் ,காலம் எனும் பாதையில் அனைவரும் ஒன்று .அதே  நேரம் இந்த எண்ணங்கள் சிந்தனைகள் எனும் வடிவங்களும் உண்டு . ஒவ்வொரு  மனிதர்களிடமும் தனிப்பட்ட ரீதியில் அமானுஷ்ய சக்தி இருக்கிறது என கேள்விப்பட்டிருப்போம் .

சிலரால் பேய்களுடன் , ஆவிகளுடன் உரையாட முடியும் என கேள்விப்பட்டிருப்போம் ,சிலர்  காணும் கனவுகள் அப்படியே மீண்டும் நடக்கும் . இவற்றை திரைப்படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சில வேளைகளில்  அவதானித்திருப்போம் .அவை பற்றி கொஞ்சம் பார்ப்போம் .சிலருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்க முடியும் . சிலர் ஏதாவது விழாக்கள் பற்றி செய்தி  எதிர்பார்க்கும் போது அந்த செய்தி அழைப்பாக வரும் .காணும் கனவுகள் அனைத்தும் அப்படியே எதிர்காலத்தில் நடக்கும் .

இது Extra sensory perception எனப்படுகிறது . இது கேட்டல் ,சுவைத்தல் , பார்த்தல் ,உணர்தல்  போன்ற புலன்களுக்கு அப்பாற்ப்பட்டது. இது உடலோடு சம்மந்தப்பட்டது அல்லாது சிந்தனை ,எண்ணங்களோடு சம்மந்தப்பட்டது . 


இதில் பல வகைகள் உண்டு 


1 . Telipathy  - டெலிபதி- வேறு ஒருவருடைய எண்ணங்களை ,மனதை படிக்கும் திறன்
2 . Clairvoyance - வேறு ஒரு இடத்தில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்க கூடிய தன்மை 
3 . Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன் 
4 . Retrocognition - இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன்
5 . Mediumship -இறந்த உயிர்களினூடான உரையாடல்...
6 . Psychometry -  ஒரு பொருளை தொடுவதன் மூலம் ஒரு நபர் பற்றி , ஒரு இடம் பற்றி அறிந்துகொள்ளல் .

போன்ற பல வகைகள் உண்டு .]

இது ஒரு உதாரணம் ..இவரால் அந்த  நெற்றியின்  மீது இருக்கும் வடிவம் எது என உணரமுடியும்.

இதில் விஞ்ஞான ரீதியாகவும் ,மனோதத்துவ ரீதியாகவும் தர்க்கங்கள் தொடர்கின்றன .

இதில் டெலிபதி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் . இது ஒருவகை எண்ண அலைவரிசைகள் பரிமாற்றம்  போலவே. மின்காந்த அலைகள் போல ஒருவகை அலைகள் இரு எண்ணகளிடையே உரையாடுவதே இது என  ஒரு கருத்து வைக்கப்பட்டிருந்தது .

ஒருவகை சக்தி பரிமாற்றம் இரு முனைகளுக்கிடையே இடம்பெறுகிறது என கூறப்பட்டிருந்தது .

உண்மையில் இவை என்ன என்பதை இரு புறமும் ஆராய்ந்து பார்ப்போம் ..

தொடரும் .........

பிடித்திருந்தா மறக்காம ஓட்டு போடுங்க ..அனைவரையும் சென்றடைய .. உங்கள் பின்னூட்டங்கள் தான் இன்னும் எழுத தூண்டும் ,.. நன்றி ...

Monday, November 1, 2010

வானம் ஏன் நீலம் ? பகுதி -1

ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் . ஏன் ஆப்பிள் மேலே போகாமல் கீழே வருகிறது என நியூட்டன் மனதிற்குள் கேட்ட கேள்விகள் தான் அன்று புவியீர்ப்பு விசை என்று இருப்பதை உலகிற்கு உணர்த்தியது .

பல அடிப்படை கேள்விகள் மனித மனகளுக்குள் இருந்து வருவதே இல்லை ..அவற்றில் ஒன்று தான் இது . ஏன் வானம் நீலம் ? 

இதுவரை காலமும் இறைவன் வானையும் மண்ணையும் படைத்தான் என்றனர். மண் இருக்கிறது ஆனால் வானம் என்று ஒன்றே இல்லை என்பது சிலர் சிந்தனைகளுக்கு மட்டும் தான் எட்டிய விடயம் .. அது பற்றி கொஞ்சம் பார்ப்போம் .


சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது .இதனை வானவில்லில் அவதானிக்கலாம் . 

வாயுமண்டலத்தில்  ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு .   அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது  . 

 ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை . சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது .  கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன . குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது . உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன . அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது  . 


நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன .
அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது . வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள்,மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல்  ஆனதே தவிர 
அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை ..

தொடரும் .....


பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைய வாக்களியுங்கள்... 

Thursday, October 28, 2010

ஐங்ஸ்டெயின் கேள்விகள் ?? - சீனத்தத்துவம்

ஒருவன் தானாக தன்னை உணர்ந்து தானாக சிந்திக்க தொடங்கும் போது தான் ஒரு பூரண அறிவை எட்ட முடியும் என்பது உண்மை என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் ஐங்ஸ்டெயின் ஒரு சிறந்த உதாரணம் என்பது சிறு குழந்தைகளில் இருந்து அவர்களது பெற்றோர்கள் வரை தெரிந்திருக்க வேண்டும் .

வெறும் புள்ளிகளிலும் , வேறு ஒருவர் சொல்லிக்கொடுத்த விடயங்களிலும்,மனப்பாடங்களிலுமே  தற்போதைய அறிவு நிர்ணயிக்கப்படுகிறது . இவை அனைத்திற்கும் விதிவிலக்கு ஐங்ஸ்டெயின்  எனலாம் ..


ஐங்ஸ்டெயின் தனது ஆரம்பக்கல்வியிலேயே பல கேள்விகளையும் தேடலையும் தொடங்கியவர் . " ஏன் மாணவர்கள் எல்லோரும் பதில்  சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் , ஆசிரியரை பார்த்து  கேள்விகள் கேட்க்காமல் " என மனதிற்குள் இருத்திய முதல் கேள்வி , இறுதிவரை அவரை கேள்வி கேட்க்க வைத்தது .
"He who asks a question is a fool for five minutes; he who does not ask a question remains a fool forever."
என்று ஒரு சீனத்தத்துவம் உண்டு . "யார் ஒருவன் கேள்வி கேட்க்கிறானோ அவன் ஐந்து நிமிடம் தான் முட்டாள் , கேள்வியே கேட்க்காமல் இருப்பவன் முழுநேர முட்டாள் ".

ஐன்க்ச்டேயின் படிப்பில் உருப்படப்போவதில்லை என அவனுடைய தலைமை அதிகாரி அவர் தந்தைக்கு சொன்னார் .

வீட்டிலேயே கல்வி தொடர்ந்தாலும் அவருடைய தந்தை அவனுக்கு முதன் முதலாக வாங்கி கொடுத்த கொம்பாஸ் இலிருந்த முனை முள் வடக்கு நோக்கியே இருந்தது .

இது ஏன் எப்போதும் வடக்கு நோக்கியே உள்ளது ..? அப்படியானால் இதற்க்கு எதோ ஒரு விசை எங்கிருந்தோ  பிரயோகிக்கப்பட வேண்டும் . இதை சுற்றி எதோ உள்ளது என அப்போதே சுயமாக சிந்திக்க தொடங்கியவர் .

கல்லூரிகளிலும் வேறு நண்பர்களிடம் குறிப்புகளை எடுக்க சொல்லி விட்டு வகுப்பில் இருக்க மாட்டார் .. பாடத்திட்டத்தில் இல்லாதா புத்தகங்களை தேடித்தேடி படித்தார் . வெளியில் இருந்து அவராக உணர்ந்து படித்ததே அதிகம் எனலாம் . 

அவருடைய வரலாறு எழுதிய கிளார்க் என்பவர் he “found his real education elsewhere, in his own time.” என குறிப்பிட்டு இருந்தார் .

இவ்வாறு தன்னை தானே மேம்படுத்திக்கொண்ட மனிதன் எனலாம் . குழந்தைகளுக்கும் சரி யாருக்கும் சரி உண்மையான வழிகாட்டியாக எப்போதும் ஐங் ஸ்டெயினை எனலாம் ..

இந்த சமுதாயத்திற்கு ஒரு மனிதனை எடை போடும் அளவுக்கு அறிவு கிடையாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர் . 
தொடரும் ...

Monday, October 18, 2010

2017 இல் விஜயதசமி ..

பிரபஞ்சத்தின் இருண்ட பக்கம் திரும்பியிருந்த பூமியின் ஒரு பக்கம்  சூரியன்  நோக்கி திரும்ப ஒளி கசிந்தது . கசிந்த சூரிய ஒளி எல்லையில்லாத வெட்ட வெளிக்கு நீல நிறத்தை கொடுத்தது . கூடுதலான செய்மதிகளின் கண் பார்வை படாத கிராமத்தில் ஆங்காங்கே கோவில்களிலும் தேவாலயங்களிலும் பக்திப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன . 

தெருவெங்கும் விழாக்கோலம் , திருவிழா சுவரொட்டிகள் அருகில் திறக்க இருக்கும் புதிய தொழில்நுட்பப கல்லூரியின் விளம்பரத்தை மறைத்துக்கொண்டிருந்தது .

அன்று விஜதசாமி ஆகையால் காலையிலேயே விழித்துக்கொண்டது குட்டிநேசனின் குடும்பம் . 

வானம் விடிந்துவிட்டது இன்னும் என்னம்மா தூக்கம் என தமிழ்ச்செல்வியை தட்டி எழுப்பினாள் பாக்கியம் பாட்டி .

பாட்டி ! பொய் சொல்லாதீங்க பாட்டி வானம் எண்டு ஒண்ணுமே இல்லை பாட்டி . நேற்று தான் மனோபிரியா டீச்சர் சொன்னாங்க . என்று தமிழ்ச்செல்வியின் அண்ணன்  சொல்ல பாட்டி திகைத்துப்போனாள் .வானம் கடவுள் படைச்சதல்லோ? ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை .

அவன் கொஞ்சம் சுட்டி , சொல்லிக்கொண்டே ஓடி விட்டான் .

சத்தத்தில் திகைத்து எழும்பிய தமிழ்ச்செல்வி , கொஞ்ச நேரம் கண்ணை கசக்கிவிட்டு கட்டிலை விட்டு எழுந்து நடந்தாள் . ஏதோ ஒரு நினைப்பு அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது . நேற்று அவள் அப்பா சொன்ன ஏடுதொடக்கும்  விடயம் ஞாபகம் இருந்தது . எங்கேயோ வெளியில் போகிறோம் என்ற சந்தோசம் அவளுக்குள் . 

 அம்மா அவளுக்கு முகம் கழுவி விட்டுவிட்டு சாமியை கும்பிட்டுவிட்டு வா அம்மா  என்றாள் . அவள் தாய் விஞ்ஞான ஆசிரியை .

சாமி அறைக்கு வந்த அவள் சாமி முன்னிலையில் அடுக்கப்பட்டு இருந்த புத்தகங்களில் அட்டையில் இருக்கும் படங்களை ஒவ்வொன்றாக தலையசைத்து பார்த்தாள் . சிலது அறிவியல் புத்தகங்கள் .நவராத்திரி  பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது .  ஐங்ஸ்டேயினும் நியூட்ட்டனும் சிரித்துக்கொண்டிருக்க அதன் மீது பூ வைக்கப்பட்டிருந்தது . பூவை  விலக்கிவிட்டு அவளும் அவர்களை பார்த்து கொஞ்சம் புன்னகைத்தாள் . 

சிரிக்கும் அவள் முகத்தில் குழி விழ பேபி ஷாலினி போல இருக்கிறாய் என் கண்ணே என அப்பா வந்து கட்டியணைத்து தூக்கிக்கொண்டு சென்றார் ஹோலிட்க்கு .

ஹோலில் இருந்து அண்ணன் சில படங்கள் புரட்டுவதை பார்த்த அவளும் அப்பாவிடம் இருந்து இறங்கி ஆர்வத்தோடு சென்று பார்த்தாள் . அது அவளது மச்சானின் படங்கள் . அவனுக்கும் இவளின் வயது . ஆனால் அவன் கனடாவில் இருக்கிறான் . இவர்கள் பார்ப்பதற்கு அனுப்பி வைத்திருந்தார்கள் .

வீட்டில் உள்ளவர்கள் விஜயதசமிக்கு தயாராகி கொண்டிருக்க ராஜா மாமாவும் அவர்களோடு இணைந்து பூசை பொருட்கள் தயார் பண்ணிகொண்டிருந்தார் .ராஜா மாமா தான் ஏடு தொடக்க இருப்பவர் . அவருக்குள்ளும் ஒரு சிந்தனை . இந்தப்பிள்ளை படிக்காட்டி என்னை ராசியில்லாதவன் ன்னு சொல்லீடுவானுன்களோ என்று .

கனடா மச்சான் ஒவ்வொரு படத்திலும் மிக  சிறிய கணணியை மடியில் வைத்து அமர்ந்திருந்தான் .

அவள் அண்ணன் ஆர்வத்தோடு அருகில் இருந்த செல்விக்கு  சுட்டு விரலால் இது தான் சின்ன பிள்ளைகள் கொம்பியூட்டர் .நல்லா விளையாடலாம்,படிக்கலாம்  என்றான் . 

(ஐந்து வயது பிள்ளைகளுக்கென மிகவும் இலகுவான முறையில் ஆங்கிலம் கற்க கணணியை அறிமுகப்படுத்தி இருந்தனர் .அதை தான் அவன் மடியில் வைத்திருந்தான் .)
அவளும் சின்னக்கைகளால் அதை எடுத்து பார்த்துக்கொண்டிருக்க அப்பா வந்து தூக்கினார் . முதுகுப்பக்கமாக அவளை தூக்கி வைத்திருந்தார் . 

ஒரு கையில் செல்வியும் இன்னொரு கையில் அரிசியில் எழுதுவதற்காக அரிசிப்பையையும் அப்பா கோயிலுக்கு தூக்கிக்கொண்டு புறப்பட்டார் . "அ" எழுதுவதற்காக ......
.
 கைகளுக்குள் மடங்கியிருந்த கணணிப்படத்தையே  பார்த்துக்கொண்டிருந்தது அவள் கண்கள் ......

Saturday, October 16, 2010

இன்று ஆயுத பூஜை தினம் அல்ல .....

இன்று ஆயுத பூஜை தினம் அல்ல ... ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய உணவு தினம் கொண்டாடப்பட வேண்டிய நாள் ...

இதையும் கொஞ்சம் படித்துப்பாருங்கள் ....


இதுவும் ஆயுத பூஜை தான் ..


http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

Thursday, October 14, 2010

விவேகானந்தர் சொன்ன கதைகள் ....

விவேகானந்தர் சாதாரண குருமார்கள் சுவாமிமார்கள் வழியில் அல்லாது தான் கடவுள் என்ற பேச்சுக்கு அப்பால் நீங்கள் நீங்கள் தான் சிறந்தவர்கள் என கூறியவர் . மிகவும் தைரியசாலி ஆனால் ஆழ்ந்த சிந்தனை உடையவர் . அவரிடம் ரசித்த சில கதைகள் ..


ஒரு முறை தனது தோழியுடன் குளக்கரையில் இருந்த போது அவள் குளத்தில் இருந்த நீரை தனது ஒரு கையால் அள்ளி எடுத்து வைத்துக்கொண்டு ....

" பார்த்தீர்களா இந்த நீர் எனது கைக்குள் அடக்கமாக உள்ளது, இது தான் காதலின் அடையாளம் " என்றாள் 

பொறுமையாக பார்த்து விட்டு சிந்திக்கலானார் விவேகானந்தர் ...

உள்ளே இருக்கும் அந்த நீர் கையை அதே போல திறந்து இலேசாக விடும் போது எப்போதும் அதனுள்ளேயே இருக்கும் ...

ஆனால் அதை அழுத்தி பிடிக்க முற்ப்படும் போது அது காணும் முதல் துவாரத்திநூடோ வெடிப்பினூடோ  வெளியேறும் .

அதே போல தான் அன்பும் காதலும் , முழுமையான சுதந்திரம் அன்பிற்கு இருக்க வேண்டும் . முடிந்தவரை கொடுக்க வேண்டும் ..எதிர்பார்ப்பில்லாது ..

யார் மீதாவது அன்பு செளுத்துவோராக இருந்தால்....

"அன்பை கொடுங்கள் -எதிர்பார்க்க வேண்டாம் "
"அறிவுரை சொல்லலாம் - கட்டளையிட வேண்டாம் "
"கேளுங்கள் - பிடிவாதம் வேண்டாம் "

எந்தவித எதிர்பார்ப்பும் எல்லையுமற்ற அரவணைப்பையும் அன்பையும் வெளிக்காட்டுங்கள் ..

விவேகானந்தர்  மிகவும் நகைச்சுவை உணர்வும் , தைரியமும் உடையவர் கூட ..ஆனால் சிந்தித்து  பொறுமையாக , ஆழமாக முடிவெடுப்பார் ...

விவேகானந்தர் ரயில் பிரயாணத்தின் போது சௌகரியமாக செல்வார் எப்போதும் . இராண்டாம் வகுப்பை தேர்வு செய்து ரயிலில் சென்றார் .

அங்கிருந்த வெள்ளைகாரனுக்கு இவரை பிடிக்கவில்லை .. காவி உடை அணிந்தவர்கள் மீது அவன் மதிப்பு குறைவாகவே இருந்தது . எங்கே ஆங்கிலம் தெரியப்போகிறது என ஆங்கிலத்திலும் திட்டினான் .

விவேகானந்தர் குட்டி தூக்கம் ஒன்று போட்ட  பின்னர் அவரின் சப்பாத்துக்களை தூக்கி அவன் வெளியே எறிந்து விட்டான் ..

சிறிது நேரத்தில் எழுந்த விவேகானந்தர் அவன் பிடிக்காமல் எறிந்திருப்பான்  என  உணர்ந்தார் . சிறிது நேரத்தில் வெள்ளைக்காரன்  உறங்க சென்ற பின் அவன் மேலங்கியை விவேகானந்தர் வெளியே எறிந்து விட்டார் .

வெள்ளைக்காரன் எழுந்து தன் மேலங்கி எங்கே ன்று கேட்க்க " அது எனது சப்பாத்துகளை தேடி போய் விட்டது" என ஆங்கிலத்தில் கூறினார் .

Wednesday, October 13, 2010

மரணம் -வாழ்க்கையின் பின்னரான வாழ்க்கை

மரணம் எனும் பதம் இன்னமும் இறை நம்பிக்கையை ஊன்றுவதற்கு இன்னும் சாதகமாக இருக்கிறது. ஆனாலும் விஞ்ஞானிகள் சௌகரியமாக எல்லாமே இறைவன் என ஒரு முடிவு எடுத்து விட்டு அமைதியாக இருப்பதில்லை  . சிந்தனை ஆற்றலை பரிமாணத்தின் உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளவர்கள் .

மரணமும் கனவும் அன்றாடம் சந்திக்கும் ,ஆனால் மனித மனங்கள்  சிந்திக்கும் ஆற்றலை பயன்படுத்தாத  விடயங்கள் .


மரணத்தின் விளிம்பை தொட்டு வந்தவர்கள் பலர் உண்டு . மனித முயற்சியின்  உச்சத்தில் இருக்கும் விஞ்ஞானம் ,அறிவியல்  பரிமாணம் அடையாத கடவுள் மனங்களின் சௌகரியமும் ஆயுதமான மரணத்தை அடைய , அறிய முயற்சிகிறது .

வரைவிலக்கணம் கொடுக்க முடியாத மரணம் எனும்  பதம் இலகுவாக உடலை உயிர் விட்டு பிரிகிறது எனலாம் . உடல் என்று இருப்பது உண்மை ஆனால் உயிர் ?

உயிர் அல்லது மனது என்பார்கள் சிலர் .. மூளையும் செயல்ப்பாடு அற்றுப்போதல் முழுமையான மரணம் எனலாம் .ஆனால் உயிர் அப்படியே இருக்குமா ? அல்லது மேலே அலுவலகம் வைத்திருக்கும் கடவுளிடம் சென்று நரகம் ,சொர்க்கம் என செய்த வேலைகளை டேட்டா பேசில் பார்த்து கடவுள் தண்டனை கொடுப்பாரா ?

சமய ரீதியாகவும் ,விஞ்ஞான ரீதியாகவும் சற்று அலசுவோம் ......

மரணத்தை நெருங்கியவர்கள் (Near death experience )

அதாவது இறந்துவிட்டார்கள் என மருத்துவ ரீதியாக முடிவு செய்த பின்னர் ,சில நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்று வந்தவர்கள் கூறிய கருத்துகள் கிட்டத்தட்ட ஒன்றே ...
1 . குகையினூடான பிரயாணம்
2 .அமைதியும் பிரகாசமான ஒளியும் நிரம்பிய இடம்
3 . ஒருவித சாந்தி ,இதுவரை உணராத அமைதி நிலை ...
4 . ஒன்றும் கேட்க்க முடியவில்லை ,ஆனால் பிரகாசமான ஒளி தெரிந்தது 

மருத்துவம் 
மருத்துவ வாதங்கள் வேறுபட்டு தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன . மூளையின் செயல்ப்பாடு இருக்கும் போது ,மருத்துவத்தின் போது அவர்களுக்கு கொடுக்கப்படும்  மருந்துகள் போன்றவை இவ்வாறான தூண்டல்களை ஏற்ப்படுத்தலாம்.


ஆனால் மருத்துவ ரீதியான ஆதாரங்களை இதில் திரட்டுவதில் மருத்துவர் பின் வான் லோமேல் (Pin van lommel ,cardiologist  Ph .D) முன்னணியானவர் .

மூளை நினைவுகளையும் ,ஆழ்மனதையும் உற்ப்பத்தி செய்கிறது . அந்த வகையில் அதன் செயல்ப்பாடு அற்ற நிலையில் மனத்தால் ஒரு வித மாயத்தோற்றம் (Illusion ) உணரப்படுகிறது என்கிறது சில மருத்துவ தரப்பு .

மனோதத்துவவியலாளர் பேராசிரியர் புரூஸ் க்ரேசன் (Bruce greson ) மரணத்தின் பின்னரான வாழ்க்கை , மரணத்தின் விளிம்பு போன்றவற்றை ஆராய்வதில் முனைப்பு காட்டும் இன்னொருவர் .

இவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்தவர்களிடம் பெற்ற மேலும் பல குறிப்புகள் ....
1 .திரும்ப முடியாத ஒரு எல்லைகோட்டில் நிற்றல்
2 .உடல் தொடர்பான கவனத்தன்மையை இழத்தல்  .
3 .இன்னொரு பரிமாணத்துக்குள் நுழைந்தமை
4 . நேரம் நிற்ப்பதை உணர்தல்

இதில் முக்கியமான விடயம் சாதாரண வாழ்க்கையை விட அது மிகவும் அமைதி தன்மையாகவும் ஆனால் மிகவும் சக்தியானவர்களாகவும் இருந்திருக்கின்றனர் /உணர்ந்திருக்கின்றனர் .

உதாரணமாக சிலருக்கு தாம் இறந்து விட்டோம் என்பது தெரிந்திருந்திருக்கிறது .
1 . நேரம் ஆர்முடுகியது .
2 . தான் யார் என்ற உணர்வு இழப்பு
3 .பிரபஞ்ச அமைதி
சிலருக்கு தாம் வெளியில் மிதப்பதும் அவர்களை யாரோ இழுப்பதும் போன்ற உணர்வு ஏற்ப்பட்டுள்ளது  .

இதில் சிலருக்கு அமானுஷ்யமான பல விடயங்கள் நிகழ்திருக்கிறது .அதில் சிலரால் பல ஆயிரம்  வருடங்களுக்கு முன்னரான பார்வையையும் பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னரான பார்வையையும் பார்க்க முடிந்துள்ளது . ஆனால் இரண்டுமே ஒன்றாக இருந்துள்ளது .

இதை அறிவியலுடன்  ஒப்பிட முடியுமா ? அல்லது மூளையில் செயல்பாடுகள் தான் காரணமா ? இன்னொரு உலகத்தை இப்போதே அறியும் நோக்கோடு .... தொடரும் ..... 

Monday, October 11, 2010

மதன் கார்க்கியின் எந்திரன் ... செல்லெல்லாம் சொல்லாகி ....

எந்திரன் திரைப்படத்தில்  அதன்  நோக்கையும்  குறிக்கோளையும் இழக்காத இரு விடயங்கள் உண்டு . ஒன்று சுஜாதாவின் வசனங்கள் , இன்னொருவர்  பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி.

முதலாவது சுஜாதாவின் வசனங்கள் தொழில்நுட்பத்தை, அறிவியலை எளிமையான  தமிழில் அனைவரையும் சென்றடையும் விதமாக அமையும் .

அவர் எழுத்துலகின்  நோக்கமும் , திரைப்படத்துக்கு வசனம் எழுதியதன் நோக்கமும் அதே ,...

இரண்டாவது பாடல் ஆசிரியரும் ,அண்ணா பல்கலைக்கழக துணை விரிவுரையாளருமான மதன் கார்க்கியிடம் மாத்திரமே உண்டு . எந்திரன் பாடல்களை ஒரு நோக்கோடு எழுதியிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது .


தமிழிலும் தொழில்நுட்பப வார்த்தைகளை கொண்டு வரமுடியும்(அழகாக ) என காட்டியுள்ளார் . எந்திரன் எனும் அறிவியல் படத்தில் பாதை மாறாது பயணித்த இரண்டாமவர் .

இரும்பிலே ஒரு இருதயம் பாடலில்
பூச்சியம் ஒன்றோடு ...
பூவாசம் இன்றோடு ...

இந்த எளிமையான வரிகள் எந்திர மொழிகளுடன் (பூச்சியம் ஒன்று(01010101 )) காதல் கலந்ததை உணர்த்துகிறது . எளிமையான,ஆழமான  கற்பனை கவர்ந்தது ..

என் நீல பல்லாலே உன்னோடு சிரிப்பேன் என்று Bluetooth தொழில்நுட்பத்தை அழகு தமிழில் எழுதிக்காட்டியமை ஆனாலும் சரி 

sensor எல்லாம் தேயத்தேய நாழும்  உன்னைப்படிதேன் 

போன்ற வரிகளானாலும் சரி ,அனைத்துமே தொழில்நுட்ப்பத்திற்க்குள்ளேயும் தமிழை அழகாக கொண்டு வரமுடியும் என நிரூபித்த வரிகள் .

செல்லெல்லாம் சொல்லாகி கவிதைகள் வடித்தேன்"..
போன்ற வரிகள் வெளிவரவில்லை 

என் எஞ்சின் நெஞ்சோடு உன் நெஞ்சே இணைப்பேன் ....

சில வரிகள் வாலியையும்   நினைவூட்டி செல்கிறது ...

இரு பாடல்களிலேயுமே எந்திரன் பற்றி முழுமையான விளக்கம் கொடுத்திருப்பார் .. பூம் பூம் ரோபோ பாடல் அனைவருக்குமே விளங்கும் விதமாக மிக மிக எளிமையான வரிகள் .

"ஒருவனின் காதலில் பிறந்தவனே".... குறிப்பிட்டு சொல்லக்கூடிய வரிகள் ...

இந்த இரு பாடல்களுக்கும் எந்திரனில் மதன் கார்க்கிக்கு மட்டுமே 5 நட்ச்சத்திரம் கொடுக்கலாம் ..அதவும் ஆங்கில சப் டைட்டில் போடும் போது வரிகளில் திறமை மிக அழகாக தெரிகிறது ..

இவரின் தமிழ் மீதான ஆர்வம் மெய் சிலிர்க்க கூடியது .. மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் நிறுவன உரிமையாளர் ...
இந்த நிறுவனத்தால் ஐ பாட்டி என்ற சிறுவர்களுக்கான பாடல் தகடுகள் வெளியிட்டனர் ..

இன்றைய தமிழின் தேவையை தனிப்பாதையில் செய்துகொண்டிருப்பவர் .வாழ்த்துக்கள் மதன் கார்க்கிக்கு ...

Friday, October 8, 2010

காமினிக்கு புரியாத புதிர் - (சவால் சிறுகதை ) அறிவியல் விளக்கம்

வழமைக்கு மாறாக நகரின் அரச  மருத்துவமனையில் ஒரே ஆரவாரம், கூச்சல் . மருத்துவ தாதி ,மருத்துவர் என  ஒவ்வொரு மனிதர்களும் தன்னிலை மறந்து அவர் அவர் உலகத்தில் வேகமாக வேலைகளை செய்துகொண்டிருந்தனர் .நோயாளிகள்  காத்திருக்கும் இடத்தில் மேலே தொங்கிக்கொண்டிருந்த தொலைக்காட்ச்சியில் அவசர செய்திகள் ஒலித்த வண்ணம் இருந்தன.

அவற்றுள்  மிகவும் வித்தியாசமாய் கறுப்பு ஆடையுடன்,வளர்ந்த மிடுக்கான தோற்றமுடைய  பரந்தாமன் பத்திரிக்கை முகத்தை மறைக்கும் படியாக அதனை விரித்து அதில்  இருக்கும் விளம்பர படங்களை சீரியஸாக பார்த்துக்கொண்டிருந்தார் .அவர் பெயர் ஆடையில் பொறிக்கப்பட்டிருந்தது .  

அவர் காதுகளுக்குள் இன்று காலை நகரத்தில் போலீசாருக்கும்,மாபியாவின் மிகப்பெரிய கடத்தல்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி துப்பாக்கி சமரில் காயமடைந்தவர்கள் அரச மருத்துவமையில் அனுமதி என்ற செய்தி கேட்டது ஆனால் அவர் மூளை அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏற்க்கனவே அதை அறிந்தவராய் சிந்தனைக்கும் பகுத்தறிவிற்கும் வேறு எங்கேயோ வேலை கொடுத்துக்கொண்டிருந்தார் .

அதற்க்கு  மேலே முதலாவது மாடியில் காயமடைந்தவர்கள் குளிரூட்டப்பட்ட தொடர் அறைகளில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர் .

அதில் ஒரு அறையில்  காமினி கையில் பட்ட பலத்த காயத்துடன் படுத்திருந்தாள்.அவள் உடல் விளையாட்டு வீராங்கனை போல திடமாக இருந்தது . அவளின் உறக்கத்தின் ஆரம்ப மயக்க நிலையில் டயமண்டை கைப்பற்ற  முடியவில்லை என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது .

 அப்படியே உறக்கத்தின் இரண்டாம் ,மூன்றாம் நிலைகளுக்கு சென்று நான்காம் நிலையில் தசை நார்கள் அசைவில்லாமல் இருக்க உறங்கிவிட்டாள் . 

 டாக்டர் இளமாறன் மட்டும் மருத்துவமனையில் தனித்துவமாக இயங்கினார் .அன்று ஓய்வு நாள் ,திடீரென வந்திருந்தார் .காயமடைந்திருந்த  கடத்தல்காரன் கைகளுக்குள் ஆபரேட் செய்து வைக்கப்பட்டிருந்த டயமண்டை பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக சாதாரண பெண்ணான காமினியின் காயமடைந்த கைகளுக்குள் செலுத்திவிடலாம் என எண்ணி 90 நிமிடங்களின் பின்னர் காமினியின் அறையில் பரிசோதிப்பது போல நுழைய அங்கிருந்த காவலர்கள் நகர்ந்தனர்  . 

90  நிமிடங்களில் ஐந்தாம் உறக்க நிலைக்கு சென்ற அவள் (REM sleep ) ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் . "கனவு காணும் நேரம் பெண்ணே நீ " என மனதிற்குள் டாக்ட்டர் பாடிக்கொண்டு மிக அருகில் வந்து  கையினுள்  டயமெண்டை செருக முடப்பட்ட போது அவர் அடிவயிற்றில் தொடர்ந்து இரு உதைகள் அவள் கால்களால் கொடுக்கப்பட்டது  .

ஐயோ அம்மா என்று டாக்ட்டர் கத்த,அவர் கை தசை நார்கள் விருந்து கொடுக்க டயமென்ட்  கீழே விழுந்தது .
 இவ்வளவுக்கும் அவள் இன்னும் உறக்கத்தில் ,ஆனால் டாக்ட்டர் வலி தாங்க முடியாமல் கத்தினார் . மடங்கி சுருண்டு கீழே விழுந்து விட்டார் .குளிரூட்டப்பட்ட அறை என்பதால் வெளியில் கேட்கவில்லை . ஆனால் காமினி விழித்து   விட்டாள் .

 டயமென்ட் உருளுவதை கண்ட அவள் எண்ணத்தில் எதுவும் தோன்றவில்லை ,எவரையும் எதையும் நம்பாதே தப்பித்துவிடு என அவள் அறிவு சொல்லியது . 

விழுந்திருந்த டாக்ட்டர் க்கு என்ன ஆச்சு என மனது கேள்வி கேட்டது , ஆனால் அறிவு சொல்வதையே அப்போது கேட்டாள் .  

உடனே பிஸ்டலை எடுத்தாள். இதை எதிர்பார்க்காத அதிர்ச்சியில் இருந்து மீளாது தன்னை   சுதாகரித்து கொண்டு வெளியே கோபம்,பயம் ,வஞ்சகம் கலந்த சிந்தனையோடு சென்றார் .  .

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

வெளியே சென்ற டாக்ட்டர் தமக்கு டயமென்ட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்ற கோபம் கலந்த விரக்தியுடன் போலீசாரிடம் " காமினியும்  அந்த கூட்டத்தில் ஒருத்தி டயமெண்டை வைத்திருந்தாள் ,தப்பித்து ஓடிவிட்டாள் என்ற முடிக்காத வசனங்களை விழுங்கினார்.

சுதாகரித்து  கொண்ட மருத்துவமனைக்கு வெளியே இருந்த போலீஸ் அதிகாரி சிவாவின் கண்களில் அகப்பட முதலில் பெண் என்று பார்த்தவன்  

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

கணப்பொழுதுகளில் சுதாகரித்த காமினியில் துப்பாக்கி சிவாவின் நெற்றியையும் பதம் பார்த்தது . இன்னொரு கையால் தனது அடையாள அட்டையை எடுத்து காட்டினால் .

சிவா சிரித்துக்கொண்டே" உனது வேகமும் வீரமும் நீ ஒரு புலனாய்வுத்துறை அதிகாரி என்பதை காட்டுகிறது " என வாழ்த்தினான்  ..
"வாழ்த்தும் நேரம் இல்லை மிகுதிப்பேரை கைது செய் "என காமினி கூற சிவா மருத்துவமனையுள்ளே  விரைந்தான்  .

அங்கே வந்த பரந்தாமன் 
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

பரந்தாமன் பாராட்டிக்கொண்டே தனது ரிவால்வரை  எடுப்பதை உணர்ந்த காமினி அவன் சிந்திக்க முதல் தனது செயலை துப்பாக்கியால் செய்துவிட்டாள் .

பாவம் பரந்தாமன் டாக்ட்டர் போல அவனும் அவள் யார் என்று அறிந்திருக்கவில்லை போல ...

காமினியும் புரியாத புதிர் போல டாக்ட்டர் ஏன் கீழே விழுந்தார் என யோசித்துக்கொண்டே சென்றாள் ..........


அறிவியல்  விளக்கம் :- சிலருக்கு REM (Rapid eye movement ) உறக்கத்தின் போது தசை நார்கள் அவர்கள் காணும் கனவை பொறுத்து தானாக இயங்கும் . கால் பந்தை உதைப்பது போல கனவு கண்டால் பக்கத்தில் இருப்பவருக்கு தான் உதை விழும் . .