Friday, June 18, 2010

7 தவறுகள்

பெரிய ஆய்வொன்றும் தேவையில்லை .. அடிப்படையிலேயே  பிழை உள்ளது.. மனிதன் இங்கிருந்து உருவாக்கப்படுவது ..

குழந்தைகள் மனித நேயம் மிக்க  கண்களால் கூட கவனிக்கப்படாதவர்கள் . அவர்கள் வளர்க்கப்படும் வளரும் சூழல் , வளர்க்கப்படுபவர்களில் தங்கியுள்ளது அவர்கள் எதிர்காலம் . வழமையாக கூடுதலாக பெற்றோர்கள் விடும் தகவல்களை ஆய்வுகளில் இருந்தும் எனது கருத்தையும் சேர்த்து தொகுத்துள்ளேன் .

முக்கியமான முதலாவது தவறாக குழந்தைகளை அழைக்கும் முறை

கூடுதலாக  டேய் ,நீ , வா ,போ கெட்ட பையன் (Naughty Boy) போன்று அழைப்பதை நிறுத்த வேண்டும் . நீங்கள் எவ்வாறு அழைக்கிறீர்களோ அது போலவே குழந்தையும் வளரும் . இது அடிப்படை மனோதத்துவமும் கூட . பேபி என அழைத்தால் அது கட்டாயம் வளர்ந்தாலும் குழந்தை போலவே நடத்தைகளில் செயல்களில் இருக்கும்.

பாராட்டாமையும் ஊக்குவிக்காமையும் 

குழந்தைகள் சாப்பிடும் , விளையாடும் இடங்களில் கூட அவர்களுக்கு அடிக்கடி சாதகமான வார்த்தைகளை சொல்ல வேண்டும் . உன்னை நினைத்து  பெருமைப்படுகிறேன் அல்லது செய்த வேலை மிகவும் அருமை  என அடிக்கடி சொல்ல வேண்டும் . பாராட்டுகள் குழந்தைகள் விரும்பும் போதை . அதை சிறிய புன்னைகையோடு  கொடுங்கள் , அவர்கள் எதிர்காலத்தையே அது மாற்றும் .முடிந்தால் சிறிய சிறிய பரிசுப்பொருட்கள் கொடுக்கலாம்.

சரியில்லாத நாகரிகமற்ற பழக்கவழக்கங்களை அனுமதித்தல் 


கத்தி பேசுதல் , அமைதியின்மை போன்றவற்றை தடுப்பதில்லை . சிலர் இதனை அனுமதிப்பதில்லை ஆனால் தாங்கள் செய்வதுண்டு. குழந்தைகள் பெரும்பாலும் தாய் தந்தையரிடம் இருந்து தான் கற்கிறது . அப்படியே பிரதிபலிக்கும் . அவர்கள் முன் நாம் மெதுவாக  பேச வேண்டும். நாகரிகத்துடன் நடந்துகொள்ள வேண்டும் .

குழந்தைகள் பேச்சை கேளாமை 


இது என்ன குழந்தைகள் தானே பெற்றோர் பேச்சு கேட்பதில்லை என கேள்விப்பட்டிருக்கிறோம்  என யோசிக்கலாம் . ஆனால் குழந்தைகள் சில கேள்விகள் கேட்க்கும் போது அதை செவிமடுக்க வேண்டும் . கேட்க்காத போதே அவர்கள் உங்கள் திசையை திருப்ப தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் . முக்கியமாக நீங்க பேச்சை கேட்க்காவிட்டால் உங்களிடமிருந்தே குழந்தைகள் சொல் பேச்சு கேளாமையை பழகுகிறது என்பதை மறக்க வேண்டாம் .

காதலை அன்பை வெளிக்காட்டாமை 

நிச்சயம் வெளிக்காட்ட வேண்டும் . அவர்களை அருகே அழைத்து கட்டிபிடிக்க வேண்டும் . அப்போது ஒவ்வொரு முறையும் அவர்கள் மீது பாசம் உள்ளதை தெருவியுங்கள் . குழந்தைகள் முக்கியமாக அன்பை, கவனத்தை  எதிர்பார்ப்பதுண்டு அதனால் அடிக்கடி உனக்காக நான் இருப்பேனென்ற வார்த்தைகளை பிரயோகியுங்கள் .

நேரம் ஒதுக்காமை 

உங்கள் குழந்தைகளுடன் ஒவ்வொருநாளும் கடைசி 30 நிமிடங்களாவது தனியாக ஒதுக்குங்கள் .

அளவான உணவு , நேர ஒழுங்கமைப்பு
இவை குழந்தைகளின் செயல்ப்பாடுகளை தீர்மானிகின்றன. ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும் . குறைவான அளவு உணவும் கூடிய அளவு உணவும் கூடாது . மரக்கறியை சேர்ப்பதில் பிரச்சனை இருந்தால் வேறு பிரச்சனைகள் இருந்தால் இந்த புத்தகல் உதவி செய்யும் . "Sneaky Chef "  


முக்கியமாக குழந்தைகள் பெற்றோரிடம் இருந்துதான் அனைத்தையும்  கற்கிறது  .. சில குழந்தைகள் அரவணைப்பு தாயின் புரிந்துணர்வு இல்லாமல் சொல்ல முடியாமல் தவிக்கின்றன .  அவர்களை புரிந்து கொள்ள முயற்ச்சியுங்கள் . தாய்மை மட்டும் அல்ல சுற்றி உள்ளவர்களும் கவனிக்கலாம் .

பிடிச்சிருந்தா மறக்காமை ஓட்டை போட்ருங்க

Thursday, June 17, 2010

மண்ணில் விண்மீன்கள் - மழலை பூக்கள்- தொலைந்த திரைப்படம்

சில பதிவுகள் காணாமல் போவது போல சில படங்களும் காணாமல் போவதுண்டு .. அதற்க்கு காரணமில்லாமல் இல்லை .. 3 இடியட்ஸ் படம் போலவே ஒரு அருமையான படைப்பு தான் அமீர்கானின் தரே சமீன் பர்(Tare zameen par ).. குப்பைகளுக்கு நடுவே கமல் போலவே சிந்தனை உடைய படைப்பாளி அமீர் கான்.. இந்த படம் தமிழ் வடிவிலும் உள்ளது . இந்த படத்திற்கு விமர்சனம் எழுத எனக்கு தகுதியே இல்லை .. தயவு செய்து பார்க்காதவர்கள் பாருங்கள் .

இந்த படம் மழலைகளின் வாழ்க்கை விதையிலேயே கிள்ளி எறியப்படுவதை
உணர்த்துகிறது .. கல்வி முறையையும் அன்பையும் உணர்த்துகிறது .. இலங்கை இந்திய கல்வி முறைகளுக்கு விழுந்த செருப்படி இந்த படம் .. இந்த பாடல் தமிழில் கேட்க்கும் போதுமிக மிக கவர்ந்தது .. கேளுங்கள் .. வரிகள் நான் எழுதியதால் சிலவை தவறவிட்டிருப்பேன் ..
பெற்றோர்கள் சமூகம் எவ்வாறு குழந்தைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறும் திரைப்படம் ...
பார்க்க வேண்டிய காட்ச்சியும் பாடலும் ...காட்சி மாத்திரம் வேறு (காட்ச்சிக்கு நன்றி )
லோட் ஆகினால் யூ டியூபில் சென்று பார்க்கவும்

யார் இந்த பாக்கள் ?
வேரில்லா பூக்கள்
விடியாத பகல்கள்
சுடரில்லா அகல்கள்
அன்பை தேடி அலையும் கலை மானின் கண்கள்
ஓடாத தேர்கள்
உறவில்லா மனங்கள்
தொலைந்து போகவோ....
மண்ணில் விண்மீன்கள்..

எப்போதும் மங்காத சூரிய பூக்கள்
பொன் வண்ண ஆற்றில் குதித்தாடும் மீன்கள்
மனிதத்தின் நேயங்கள் காணாத கண்கள்
சுற்றம் நடப்பு தேடியே துடிக்கின்ற உயிர்கள்
தொலைந்து போகவோ.....
மண்ணில் விண்மீன்கள் ...!!

கற்ப்பனை மேடையில் ஆடி பாடும் இங்கு
எல்லோர் கனவிலும் தேடி வர்றாதே பகையே ஓடி
எத்தனை நிறங்கள் மாறி மாறி
மின்னிற வண்ணத்து பூச்சிக்காரி

எதோ ஆசை நெஞ்சில் உருளும்
எதோ எண்ணி நாட்கள் நகரும் இன்பம் தேடி உலகிலே
தொலைந்து போகவோ...........
மண்ணில் விண்மீன்கள்..!!!

காரிருள் ராத்திரி எட்டிப்பாருங்கள்
காற்றினில் தீயிது எல்லை கோடில்லை
உலகமே இவை ஒதுக்கி வைத்தாரே
படிகம்போல உள்ளே உள்ள எண்ணம் தெரியுது
வீணையின் நாதம் போல் பேச்சு இனிக்குது
இசைகளின் உயிர்ப்பாய் மழலையின் சிரிப்பு நம்ம்மை இழுக்கும்

துள்ளும் காற்று... தூய ஊற்று
இது இறைவன் தாலாட்டு
இதன் வினையோ இமையமே
தொலைந்து போகவோ....
மண்ணில் விண்மீன்கள் .... !!!

தேடுங்கள் கண்ணாலே ...
தேன் சிந்தும் பூவை
ஈரைந்து மாதம் புடம் போட்ட பொன்னை
அழியாது வாழும் கல்வெட்டு பூக்கள்
சூடாத பூக்கள்
சுருதியில்லா பண்கள்
தொலைந்து போகவோ...
மண்ணில் விண்மீன்கள் !!!

போலே பேசீடுவார்
நதி அலை போலே ஆடீடுவார்
கேள்விக்கணைகளை தொடுத்தே எல்லோரை பந்தாடீடுவார்
சிரிப்பால் கலக்கிடுவார்
சிறகுகள் இன்றி பறந்திடுவார்
அருள் ஒளி போலே வந்தே விதியை மாற்றிடுவார்
நீரினில் ஆடும் நிலவினை போல்
வாசனை வீசும் மலரினை போல்
வாழ்த்திடும் குழந்தைகள் நாளை உலகை மாற்றீடுவார்

மனையில் போடும் குட்டிதூக்கம் போல்
மனசுக்குள் வீசும் தென்றலை போல்

தொலைந்து போகவோ ..........
தொலைந்து போகவோ .............

தொலைந்து போகவோ மண்ணில் விண்மீன்கள் மிகவும் உருக்கியது .. ஷன்கர் மகாதேவன் குரலில் ....
இந்த படத்துக்கு சிறந்த தயாரிப்பாளர் விருது அமீர்கானுக்கும் .. சிறந்த நடிகர் அந்த சிறுவனுக்கும் கிடைத்தது ..

தொலைந்து போகவோ இந்த பதிவு :)
ஓட்டை மறக்காமல் போடுங்கள்

Tuesday, June 15, 2010

இயற்கையின் தேர்வு - பரிணாமம் - விடாமுயற்ச்சி

அனைவரும் விளங்கும் படியாக எழுதியிருப்பதால் விஞ்ஞான சொற்க்கள், சிலவை எளிய விளக்கங்களுடன் எழுதி உள்ளேன் .

இயற்க்கை நிகழ்வுகள் , இயற்க்கை விபத்துகள் போன்றன நம் வாழ்க்கையை தீர்மானிப்பது போல உலகில் உயிரினத்தோற்றத்தையும் உருவாக்கியது .டார்வின் போன்ற விஞ்ஞானிகள் கூர்ப்பு கொள்கைகள் சர்ச்சையை கிளப்பினாலும் சமூகத்தில் இருந்து உயிரினங்கள் மூட பழக்கவழக்கங்களை தூக்கி எறிந்தது .

  100 மில்லியன் ஆண்டுகளுக்கு முதல் உலகில் உயிரினங்கள் தரையில் இருந்ததில்லை . உதாரணமாக உலகில் மீன் வகை , முலையூட்டிகள் , பறவையினங்கள், ஊர்வன வகை போன்ற உலகில் முதன் முதல் தோன்றிய உயிரின வகைகள். இவை கூட தரையில் இருந்ததில்லை . இவை அனைத்திற்கும் நீர் தான் மூல ஆதாரமாக இருந்தது . நீர் வாழ் உயிரினங்கள் தான் இவ்வுலகில் முதல் முதல் தோன்றியது .


இரசாயன பிணைப்புகளே உயிரினங்களை உருவாக்கியது . சரியான பிணைப்பு வரும் வரை உயிரினங்கள் தோன்றவில்லை . ஒரு விபத்து போலவே உயிரினங்களின் தோன்றியது . ஒரேயொரு ஆதாரத்தை முன் வைக்கலாம் காரணம் உலகம்  தோன்றி பல மில்லியன் வருடங்களுக்கு பிறகே உயிரினம் தோன்றியது .

சரி இனி மனிதன் எப்படி மனிதன் ஆனான் ? உயிரினங்கள் எப்படி உலகில் தோன்றின ? இயற்கையின் தேர்வு என்ன ?என்பது பற்றி பார்ப்போம் .

நீர்வாழ் உயிரிங்கங்களின் தேர்வு

அவ்வாறு விபத்தால் தோன்றிய உயிரினங்கள் பரம்பல் அடைந்தது . அவற்றுக்கு தேவையான சக்தியை பெற உணவு இன்மை . உணவுக்கான போட்டியும் அதிகரித்தது . சில உயிரினங்கள்  நீரும் சேறும் கலந்த நீரில் வாழ தொடங்கின .. அவை தமக்கான உணவு போட்டி நீரில் காணப்படுவதை உணர்ந்து , மற்றைய உயிரினங்கள் அடையமுடியாத இடங்களில் உணவை தேட முயற்சித்தன . அதன் விளைவாகவே செற்றுப்பகுதிக்கு நகர்ந்து மெல்ல தரையை அடைந்தன . அவற்றுக்கு அங்கு போட்டி நிலவவில்லை . அதனால் அவற்றின் இனப்பெருக்கமும் அங்கேயே நடைபெற்றது .


என்னுடைய கருத்து படி அவற்றிற்க்கு பிறந்தவைகளும் அந்த அந்த சூழலுக்கேட்ப்ப ஜீனில் மாற்றம் ஏற்ப்படே பிறந்திருக்க வேண்டும் . அவை தொடர்ந்து தரையிலேயே வாழ தொடங்கின .

மனிதனினுக்கு இயற்க்கை தேர்வின் தன்னம்பிக்கை 


தக்கன பிழைத்தல் கொள்கையின் அடிப்படை இயற்கையின் தேர்வு தான் . முதலில் பலமான உயிரினங்கள் பிழைத்தது . விதையும் மண்ணுக்குள் எத்தனையோ சவால்களை எதிர் கொண்டு தான் மரமாக வருகிறது . அதே போல தான் குருவிகள் கூட முட்டை இட முன் மிகவும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்கிறது . இயற்க்கை தேர்வு மனிதனின் வாழ்வுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுகிறது .

டார்வினின் கூர்ப்பு கொள்கை தவறு என வாதிடுபவர்கள் உண்டு . ஏன் இப்போது இருக்கும்  மனிதர்கள் குரங்கு ஆவதில்லை எனவும் அதனால் அது தவறாம் .

ஆனால் Mutations  எனப்படுவது செல்களில் ஜீன்களில் ஏற்ப்படும் எழுந்தமானமான மாற்றங்கள் . இவை அரிது இருந்தாலும் இந்த மாற்றம் இடம்பெற 1000  ௦௦ தலைமுறைகளுக்கு மேல் எடுக்கும் . இதில்  ஒரு உயிரினத்தில் இருந்து இன்னொரு உயிரினம் முற்றிலும் மாறுபடும் .


உயிரங்களின் தக்கன பிழைத்தல் கொள்கை அவற்றின் தோற்றங்களை வைத்து கூறலாம் . உதாரணமாக தாவர உன்னிகளுக்கு முகத்தின் இரு புறமும் பக்கவாட்டில் கண்கள் இருக்கும் .அவற்றால் அதன் மூலம் சுற்றி பார்க்க முடியும் . ஆனால் வேட்டையாடும் விலங்குகளுக்கு முன்னோக்கியே இருக்கும் .காரணம் அவற்றிற்க்கு இலக்கு தான் முக்கியம் .

உறுதியான தன்மை இயற்கையின் தேர்வில் உயிரினங்கள் தோன்றலுக்கு  மிகவும் முக்கியம் .மனிதன் வாழ்க்கையில் கஷ்டப்படவில்லை .. உறுதியான தன்மை இல்லாதவனே கஷ்டப்படுகிறான் . சூழலுக்கேட்ப்ப மாறுதல் , தன்னை தயார்படுத்தல் , எதிர்கொள்ளல் போன்றன தற்போதைய வாழ்கையில் தேவையானது . இதனை தயார்படுத்துபவன் எதையும் எதிர்கொள்ளலாம் . இதை தான் தான் நம்பிக்கையும் போதிக்கிறது . அறிவியலுடனும் விளக்கி விட்டேன் .

கொஞ்சம் தத்துவத்தோட தொடர்பு படுத்தி விட்டேன் .. கொஞ்சம்  வித்தியாசமா யோசிப்பம் என்று தான் .அடுத்த பதிவில் ஏன் இந்த தரை வாழ உயிரினங்கள் சில மீண்டும் நீருக்கு சென்றன ? ஏன் இரண்டிலும் வாழ்கின்றன . மனிதன் எப்படி மனிதன் ஆனான் என்பது பற்றி பார்ப்போம் .

மறக்காமல் அனைவரையும் தகவல் அடைய ஓட்டை போட்டு விடவும் . நன்றி 

Monday, June 14, 2010

ஜோதிடம் - அறிவோம் உண்மைகள் - ஒரு குட்டி கதையும்

வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒன்றுடனொன்று தொடர்புபட்டவை. இதை தான் சமாந்தர உலக தியரியும் கயோஸ் தியரியும் பறை சாற்றி நிற்க்கின்றன . இந்த நிகழ்வுகள் அனைத்தும் வெறும் நிகழ்வுகள் , அதாவது உயிரினங்கள் எவ்வாறு  இந்த உலகில் ஒரு விபத்தால்(எதிர்பாராத உயிர் பிணைப்புகள் ) உருவாகியதோ அதே போல தான்நிகழ்வுகளும் விபத்து போன்றது .

ஏனைய உயிரினங்கள் போலவே மனிதனின் வாழ்க்கையும் , இருந்தாலும் இந்த அறிவும் கொஞ்சம் கூடுதலாக இருப்பதால் ஏமாற்று வேலைகள் , தனக்கேற்ப  நிகழ்வுகளை சாதகமாக்கி கொள்ளல் போன்றவற்றில் கில்லாடியாகி அதற்க்கு ஜோதிடம் என்றும் பெயர் வைத்தான்.


புரோகிதர்களும் ஜோதிடர்களும் சேர்ந்து அடிக்கும் கூட்டு கொள்ளை நிகழ்வுகளை எதிர்வு கூறி கட்டம் பார்த்து இடம்பெறுகிறது .  எந்த ஒரு விடயத்தையும் ஆதாரத்துடன் காட்டுவது அறிவியல் . ஜோதிடம் உண்மை என்பதற்கு ஆதாரம் என்ன ?

புரோகிதனிடம் கேட்க்கும் ஜோதிடமும் ஜோதிடனிடம் கேட்பதும் வேறுபடும். ஏன் வேறுபடுகிறது ? வெறுமனே 50 % நிகழ்தகவு  வைத்து கூறப்படுகிறது .

ஒரேயொரு ஆதாரம் இப்போதும் உறுதியாக இருக்கிறது . இரட்டையர்கள் பிறப்பு . இருவரும் பிறப்பது ஒரே ராசி ஒரே நட்சத்திரம் .ஆனால் இருவரின் வாழ்க்கையும் வேறு வேறு. சில வேளைகளில் ஒருவர் இறந்து விடுவது உண்டு .

ஜோதிடர்களின் கணிப்பு வியாழன்  வாழ்க்கையை தீர்மானிப்பதாகவும் சனி வாழ்க்கையை கெடுப்பதாகவும் இருக்கிறது . சனி 50000 கிலோ மீட்டர் அகலமான ஹய்ட்ரஜனையும் ஹீளியத்தையும் கொண்டது .அவை மாற்றத்தை ஏற்ப்படுத்தாது .

பொய் என்பதற்கு நாம் கி மு பல வருடங்களுக்கு முன்னர் செல்ல வேண்டும் . எகிப்தியர்கள் கோருஸ்  எனும் எகிப்திய சூரிய கடவுளை வழிபட்டு வந்தனர் . இது பிந்திய சூரிய கடவுள் கிறிஸ்து உருவாக்கத்திற்கு முதல். முன்னர் மனிதன் இரவு பகலை விழுங்குவதாகவும் பகல் இரவை விழுங்குவதாகவும் எண்ணியிருந்தான். அது தான் சூரியனை வழிபட்டு வந்தான் . அதனையே கடவுளாக சித்தரித்தான் . அதனை சுற்றி அமையும் ராசிகளை ஒவ்வொரு காலமாக நிர்ணயித்தான் . இது வானத்தின் மீதான நீண்ட கால அவதானத்தில் மனிதன் குறித்தவை .

நட்ச்சத்திரங்களை இரு முறைகளில் பார்க்கலாம் ஒன்று அவை இருப்பது போலவே ,மற்றயது நாம் நினைப்பது போல அவை இருப்பது . இதில் எது உண்மை என்பது பகுத்தறிவு தீர்மானிக்கும் .


ராஜாக்களின் காலம் தான் ஜோதிடத்தின் பொய் தாண்டவம் ஆட தொடங்கிய காலம். சில பொய்களை காரணத்துடன் சொல்ல வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. அதற்க்கு ஒரு உறுதியான காரணம்  தான் எமது வாழ்க்கை ஏற்க்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும்  இறைவனால் தீர்மானிக்கப்பட்டதாகவும் கதை அவிழ்த்து விடப்பட்டு ஜோதிடம் வளர்த்து விடப்பட்டது . சமயமும் இதே போலதான் வெறுமனே வானவியல் .

இஸ்லாமியர்களின் நட்சத்திர சந்திர வழிபாடும் , மற்றயவர்களின் சூரிய வழிபாடும் மிகச்சிறந்த உதாரணம். இவற்றின் மையம் தான் கடவுளை உருவாக்கியது .இது இவர்களுக்கு சொந்தமானது அல்ல . நாகரிகம் வளர்ந்த எகிப்தியர்களின் வழிபாட்டு முறை .

வானவியலை வைத்து உருவாக்கப்பட்ட இறைவன் , ஜோதிடம் இரண்டும் ஒன்று தான் . ஆனால் நட்சத்திரங்கள் , கிரகங்கள் மாற்றம் ஏற்ப்படுத்துமாம். இது விஞ்ஞானத்தால் முற்றாக மறுக்கப்பட்ட ஒன்று . அவற்றின் கதிர் வீச்சுகள் உண்மையாக வந்தால் உயிருடன் இருக்க முடியாது .

முன்னைய ராஜாக்கள் தமது யுத்த ஆயுதமாக ஜோதிடத்தை பயன்படுத்தி வளர்த்தனர்  . ஒரு கதை சொன்னால் சுவாரசியமாக இருக்கும் .

ஒரு முறை பிஜபூர் சுல்தான்  மீது படையெடுக்க தீர்மானித்தான்  கிருஷ்ணதேவராயன் . ஆனால் கிர்ஷந்தேவரயனை வெல்ல முடியாது என நினைத்த பிஜபூர் அரசன் தேவராயன் ஜோசியனை விலைக்கு வாங்கி விட்டான்.  படையெடுக்க தயாரான தேவரயனிடம் இன்று நீங்கள் துங்கபத்திரா நதியை தாண்டினால் உயிர் போய்விடும் என்று கூறினான் ஜோதிடன் . இதை கேட்டா மன்னன் என் நம்பிக்கை சொல்கிறது நான் வெல்வேன் என்று நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டான் . ஆனால் மனைவி பிள்ளைகள் அவனை அனுமதிக்கவில்லை .

உடனே வந்த தெனாலி ராமன் . அவன் சொல்வது பொய் என்பதை தான் நிரூபிக்கிறேன் என்று அரசனிடம் சொல்ல அரசனும் நீ சொல்வது நடந்தால் உனக்கு பொற்காசுகள் தருகிறேன் என்றார் .


அடுத்த நாள் காலை வந்த ஜோதிடனிடம்  ஐயா, அரண்மனை ஆஸ்தான ஜோதிடர் அவர்களே தாங்கள் கூறும் ஜோதிடம் முற்றிலும் பலிக்குமா எனக் கேட்டான். அதற்கு அச்ஜோதிடனும் என் ஜோதிடம் பொய்யானது அல்ல. இது வரை நான் கூறிய ஜோதிடங்கள் அனைத்தும் 100% மெய்யென நிரூபித்துள்ளேன். அப்படியிருக்க என் ஜோதிடம் பலிக்குமா என நீ எவ்வாறு கேட்பாய்? என்று கோபமாகக் கத்தினார் ஜோதிடர்.
அப்படியானால் தாங்கள் என்னை மன்னிக்கவும் என்றான் தெனாலிராமன். பின் ஜோதிடரிடம், “தாங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வீர்கள்” என்று கேட்டான். அதற்கு அச்ஜோதிடரும்  ஏதேதோ கணக்குப் பார்த்து விட்டு “இன்னும் குறைந்தது இருபத்தைந்து ஆண்டுகளாவது நன்கு வாழ்வேன்” என்றான். இதைக் கேட்டதுதான் தாமதம், உடனே தெனாலிராமன் தான் தயாராக வைத்திருந்த வாளை உருவி சோதிடனின் தலையை வெட்டி வீழ்த்தினான்.


தனது ஆயுளையே ஒழுங்காக கணிக்க தெரியாதவனா உங்கள் ஆயுளை கணிக்கப்போகிறான் என்று கூறி விட்டு பின்னர் தேடி பார்த்த போது பிஜபூர் மன்னனுக்கும் ஜோதிடனுக்கும் இடையில் நடந்த கடித பரிமாற்றம் பிடி பட்டது .
நீளமாகி விட்டது பதிவு .அனைத்து கருத்துகளும் பதிய முடியவில்லை . பகுத்தறிவால் பொய்களை உடைப்போம். தொடர்ந்து எழுதுவேன் .


தகவல்கள் அனைவரையும் சென்றடைய ஓட்டு போடவும் .... நன்றி ..

Friday, June 11, 2010

இறந்தவர்களின் குரல் : அண்டவெளியில் ஒலிக்கும் குரல்கள்

பதிவு எழுதி ஒரு பத்து நாள் இருக்கும் . Network Admin வேலை கிடைத்துள்ளது . படித்துக்கொண்டு வேலையும் செய்து பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை . எதிர்பார்த்து வந்தவர்கள் மன்னிக்கவும் . 50 க்கும் மேற்ப்பட்ட பலோவர்களுக்கு நன்றி . இனி முடிந்தவரை கிடைக்கும் நேரங்களில் தொடர்ந்து எழுதுகிறேன் .
===================================================================

இறப்பு உங்களால் என்னால் ஏன் தாம் கடவுள் என சொல்பவர்கள் , மத குருமார்கள் கூட விபரிக்க முடியாத ஒன்று . அதை அறிய , விபரிக்க கடினமான போது தோன்றியது தான் கடவுள் , சொர்க்கம் , நரகம் .

அனைவரும் பதில் சொல்லாமல் மழுப்பிய விடயத்தை விஞ்ஞானம் கைவிடவில்லை . இன்னும் விடை தேடிக்கொண்டிருக்கிறது . பல படிகளில் முன்னேற்றமும் கண்டு விட்டது .

அதில் இன்னொரு படியாக இறந்தவர்களுடன் உரையாட முயற்ச்சித்திருக்கிறது. இறப்பை இன்னொரு வகையில் விபரிக்கலாம் . எமது சக்தி மிக மிக குறைந்து நீண்ட உறக்க நிலைக்கு செல்லல் என கூறலாம் . ஆனால் இருக்கிற மிகுதி குறைந்த அளவு சக்தியை வைத்து இறந்த உயிர்கள் உரையாட முயற்ச்சிக்கும்.electronic voice phenomena EVP என்று அழைக்கப்படுகிறது .


எமது முன்னோர்கள் கூறியது போல இறந்தவர்கள் எங்கேயும் சென்றுவிடுவதில்லை நம்முடனேயே இருப்பர். அவர்கள் உரையாடல்கள் சாதாரண செவிக்கு எட்டாத போதும் தற்ப்போதைய நவீன உபகரணங்களில் பதிவு செய்ய முடியும் .

2002 ஆம் ஆண்டு இவை பற்றி ஆராயும் குழு ஒன்று Manteno State மனநல மருத்துவமனைக்கு சென்ற போது அவர்களால் ஒரு சத்தத்தையும் சாதாரணமாக கேட்க்க முடியவில்லை . ஆனால் பதிவு கருவிகளில் பதிந்துள்ளது . Southern Wisconsin Paranormal ஆய்வுக்குழு குழு இதனை பதிவு செய்துள்ளது .

இறந்தவர்களால் கதைக்க முடியாது ஆனால் சொல்ல வரும் விடயத்தை இலத்திரனியல் சக்திகளாக கடத்துகின்றன .

சில சமயங்களில் குரல் தெளிவாக இருக்கும் ,சில சமயங்களில்மீண்டும் மீண்டும் கேட்டால் மட்டுமே விளங்கும் . ஆனால் பதிவு செய்யும் போது கேட்பது கடினம் , அதை மீண்டும் மீண்டும் கேட்க்கும் போது அர்த்தம் கிடைக்கும், சில சமயங்களில் தம்மால் நேரடியாக தொடர்புகொள்ள முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .

ஆய்வாளர்கள் குரல்களை மூன்று விதமாக பிரித்துள்ளனர்

1 .மிகவும் தெளிவான விளங்கிக்கொள்ள கூடிய குரல்
2 . மிகவும் சத்தமான தெளிவான குரல்
3 .மிகவும் மென்மையான அடிக்கடி மாறி வரும் குரல்
என மூன்று வகைகளாக பிரித்துள்ளனர் .

அந்த உரையாடல் சில செக்கன்கள் ஒலித்தாலும் அதை விளங்க பல மணித்தியாலங்கள் எடுக்கும் .

மிகுந்த இரைச்சலுடன் அவற்றின் உணர்வுகளுடன் கலந்து வரும் ஒலி கணணியை பயன்படுத்தி தெளிவாக இனங்காணப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது .


மென்பொருள் பயன்படுத்தியே அந்த ஒலி தெளிவாக மீண்டும் பிரித்தெடுக்கப்படுகிறது .

சில குழுக்கள் இது ரேடியோ அலைகளின் குறுக்கீடு , எமது என்ன தோற்றம் என்று கூறினாலும் வரலாறு பதில் வைத்திருக்கிறது .

மாபெரும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் அல்வா எடிசன் ஒரு முறை எம்மால் இறந்தவர்களுடன் கதைக்க கூடிய முறைமை வரும், இயந்திரம் கண்டு பிடிக்கப்படும் என கூறியிருந்தார் . எடிசன் இப்போது இல்லாவிட்டாலும் இறந்த பின்னரான வாழ்க்கை , விஞ்ஞான கண்டுபிடிப்புகள் போன்ற இன்னொரு உலகு இருப்பதை கூறிக்கொண்டே இருக்கின்றன .


ஒரு முறை இலத்திரனியல் ஆய்வாளரும் , திரைப்பட தயாரிப்பாளருமான Friedrich Jurgenson குருவிகள் சத்தத்தை படம் பிடித்து விட்டு மீண்டும் கேட்டு பார்க்கும் போது ஒரு குரல் ஒலித்தது " எனது செல்லமான மகனே நான் உன்னை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் . உன்னால் நான் கதைப்பது கேட்க்க முடிகிறதா என குரல் ஒலித்துள்ளது . தொடர்ந்து மேலும் குரல்களை கேட்ட ஜூர்கேசன் பிரபஞ்சத்தில் இருந்து வரும் குரல்கள் என புத்தகம் எழுதி உள்ளார் .

அதனை தொடர்ந்து இறந்தவர்களுடன் கதைக்கும் முறை பல முறைகள் வெற்றி அடைந்துள்ளது . பல ஆய்வாளர்கள் இன்னமும் இவை பற்றி ஆராய்ந்துகொண்டு இருக்கிறார்கள் .

சில கொலை வழக்குகளை விசாரிக்க ,பல விடயங்களை அறிய இந்த முறை மேலும் உறுதிப்படுத்தப்பட்டால் நிச்சயம் உதவியாக இருக்கும்

பிடித்திருந்தால் மறக்காம ஓட்டுபோட்டு அனைவரையும் சென்றடைய செய்யவும்