Skip to main content

Posts

Showing posts from December, 2010

ஆத்திகன், நாத்திகன்(பகுத்தறிவு ) இடையே உரையாடல் -அறிவியல் ? கடவுள்?

பாரபட்ச்ச்சமின்றி ஒரு நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் டாக்டர் பால் டேவிஸ் என்பவரால் "The mind of the god " என்ற புத்தகத்தில் எழுதப்பட்டதை சுஜாதா அவர்கள் பகிர்ந்திருந்தார் ..... நான் உங்களோடு பகிர்கிறேன் .... நாத்திகன் :- ஒரு காலத்தில் உலகத்தில் நடக்கும் அத்தனை காரியங்களுக்கும் கடவுள் தான் காரணம் .கல்லுக்குள் தேரை ,கருப்பை உயிருக்கு எல்லாம் கடவுள் தான் ஏற்ப்பாடு செய்கிறார் .அடுத்த பஸ் வருவது ,சிப்மண்டு பணம் திரும்பி வருவது கூட கடவுள் செயல் என்கிற விளக்கம் தேவைப்பட்டது .அது அறியாமையினால் வந்தது .மெல்ல மெல்ல அறிவியல் எல்லாவற்றின் இயற்கையையும் விளக்க கடவுளின் பொறுப்புக்கள்  படிப்படியாக குறைந்து வருகிறது . அந்த முதல் வெடிவரை( பிக் பாங் ) கடவுளே இல்லாமல் போய்விட்டார்கள் . அதற்க்கு மட்டும் எதற்கு ஒரு கடவுள் தேவைப்படும் என்கிறாய் . ஆத்தீகன் :- உங்கள் அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க முடியாது . உலகில் பல விந்தைகள் உள்ளன. உதாரணமாக ,பெரிய வியப்பு உலகில் - முதல் உயிர் எப்படி உருவானது என்பதே சரியாக விளக்கப்படவில்லை .உங்கள் அறிவியலாளர்கள் இ

மனித மனம் ,உயிர் -ஈகோ, சூப்பர் ஈகோ , இட்- சிக்மன் புரோயிட்

மனித அறிவின் அசுர பரிணாம  வளர்ச்சியில் விஞ்ஞானம் பல புராண கட்டுக்கதைகளையும் பல நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து அனைத்திற்கும் காரணம் தேடும் பயணத்தில் நேரம் எனும் பாதையில் செல்கிறது . மனோதத்துவம் பல வகைகளில் விஞ்ஞானத்தோடு ,விஞ்ஞானத்தில் ஒரு பெரும் பகுதியாக செயல்ப்படுகிறது  என்றால் மிகையாகாது .  சீனாவில்  சீ  எனவும் இந்தியாவில்  பிராணா  எனவும் மேற்கில்  soul  எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இறை நம்பிக்கையில் உள்ளவர்கள். ஆனால் அதற்க்கு எந்தவித விஞ்ஞான ஆதாரமோ இதுவரை கிடையாது . ஆனால் இப்போது சமயங்கள் நிறுவனங்கள் வேறு விதமாக கதையை மாற்றுகின்றன . அதாவது பிழைப்பு தொடர்ந்து நடக்க மனோதத்துவத்திற்கு மாறி விட்டன .உள்ளிருந்து இயக்கும் மனசாட்சி இறைவன் என்கிறார்கள் .  உயிர் ,மனது ,மரணம்,பயம்  இது மூன்றும் இறை நம்பிக்கையை தூண்டுவன . ஆனால் உயிர் ,மனது,மனசாட்சி போன்றன இருக்கின்றனவா ?  இது தான் விடயம் .......  முன்னர் ஒரு தனிமனிதனுக்கு ஏற்ப்படும் மனோதத்துவ  பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்ச்சிகள் வேறு விதமாகவே நடந்தது . அவர்களை தனிமையில் வைப்பது ,இருட்டில் வைத்திருப்பது போன்றன . ஆனால்  சிக்மன்