Posts

Showing posts from July, 2010

வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டமில்லாத நாளா ? - 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Image
உண்மைகள் அறிவியல் நோக்கில் வெளிவரவேண்டும் .. யார் மனதையும் புண்படுத்த அல்ல . . 13  ஆம் இலக்கம் அதிர்ஷ்டமற்றது ,13 ஆம் இலக்கத்தில் வீடு வாங்குவது நல்லதல்ல என்று  கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால் கிறிஸ்தவத்தில் இன்னொரு கதையும் உண்டு . மேலைத்தேய நாடுகளிளும் வெள்ளிக்கிழமை  அதிர்ஷ்டமற்ற நாளாக நடைமுறையில் உள்ளது . நேரத்தை சரியாக ஒழுங்கு படுத்த மனிதனால் தான் நாட்க்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தான்  7 நாட்களாக பிரிக்கப்பட்டு 12 மாதங்களாகவும் பிரிக்கப்பட்டது . ஆனால் இந்த பதின்மூன்றாம் திகதி மர்மத்தின் படி இறைவன் முதலிலேயே நாட்க்காட்டி படைத்து விட்டு மனிதனை படைத்தது போலவே கதை உள்ளது . paraskevidekatriaphobia என்றழைக்கப்படும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீதான பயம் மேல் நாட்டில்   பெரும் தொகையான மக்களால் நம்பப்படுகிறது . இந்த பயங்களுக்கு கட்டுக்கதைகளே காரணம் (எந்தவித ஆதாரமும் அற்ற )... இயேசு தனது 12 தோழர்களுடன் இருந்த போது பதின் மூன்றாவதாக வந்தவர் யூதாஸ் . அவர் தான் இயேசுவை காட்டி கொடுத்தவர் .  வெள்ளிக்கிழமை மீதான பயத்துக்கு காரணம் .. . இயேசு  

சினிமா தியேட்டர் திரை

Image
இன்றும் ஒரு தகவலுடன் ஆனால் கொஞ்சம் உங்களுக்கு பிடித்த தகவல் தான் .கூடுதலாக சிலர் திரைப்படங்களை தவறாமல் பார்ப்பதுண்டு . ஆனால் ப்ரொஜெக்டர் போன்றன திரைப்படம் ஓடுவதற்கு காரணம் என நாம் நினைப்பதுண்டு . திரை பார்ப்பதற்கு வெறுமையானதாகவே இருக்கும் . அதனாலோ என்னவோ அதன் சிறப்பு அறிந்திருப்பதில்லை . திரை சிறந்த தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டது  .அதை பற்றி பார்ப்போம் .. திரைக்குபின்னால் இருந்து பார்க்கும்போது . . திரைக்கு முன்னால் இருந்து பார்க்கும் போது ... திரை அதில் பட்டு தெறிக்கும் வெளிச்சத்தை  வைத்து வகைப்படுத்தப்படுகிறது . Matte white :  < 5 % குறைவான ஒளித்தெறிப்பு மிக கடுமையான சாம்பல் நிற படங்கள் , மங்கலான வெளிச்சம் காணப்படும்.  Pearlescent :  15 % ஒளித்தெறிப்பு . கடுமையான  சாம்பல் நிறமும். தெளிவான வெளிச்சமும் காணப்படும் . கூடுதலாக தியேட்டர்களில் பொதுவாக பாவிக்கப்படும் திரை .தெறிப்படையும் வர்ணபூச்சுகள்  பூசப்படும் . Silver :  30 % ஒளித்தெறிப்பு , நடுத்தரமான சாம்பல் நிற, மிக மிக தெளிவான படம் , கடுமையான நிறங்கள் மங்கலாக தெரியும் . Glass bead:  40   %  அல்லது அத

நாசா கண்டுபிடிப்புகள் - எமது அன்றாட பாவனையில் ......

Image
நீர்  வடிகட்டி 1950 களிலேயே நீரை சுத்திகரிக்கும் உபகரணங்கள் இருந்தது ஆனால் நீரை நீண்ட காலமும் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் சேமித்து வைக்க வேண்டிய தேவை நாசாவுக்கு இருந்தது. முதன் முதலாக நீர் வடிகட்டி பாவிக்கும் போது கறுப்பு துகள்கள் அவதானித்திருப்பீர்கள் . சில்வர் அயன்களே அவை . அவை பட்டீரியாக்களை கொள்வதற்கு பாவிக்கப்படுபவை . துளையிடும் இயந்திரம்   1960 களில் நடுப்பகுதியில் நிலவிற்க்கு செல்ல முயற்ச்சிக்கும் போது நிலவில் இருக்கும் படிமங்கள் பொருட்களை கொண்டு வர வேண்டிய நிலை இருந்தது நாசாவிற்கு. அதற்க்காகவே பாரம் குறைந்த ஆனால் சக்திவாய்ந்த மின்காந்தம்  கொண்ட  ஒரு கருவியை அறிமுகப்படுத்தினர். ப்ளாக் & டேக்கர் (Black and deccor ) நிறுவனம் இதை பின்னர் சாதாரண மக்கள் பாவனைக்கு என சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டது . புகையை அறியும் கருவி  1970 களில் sky lab செய்துகொண்டிருந்த போது அதில் ஏதாவது நெருப்பு ஏற்ப்பட்டால் அதை எப்படி அறிவது என சிந்தித்த போதே தற்போது சாதாரண பாவனையில் உள்ள புகையை அறியும் கருவி( ionization smoke detector )   அறிமுகப்படுத்தப்பட்டது .     americium

தேஜா வு - முன்னரே பார்த்திருக்கிறேன் 2

Image
தேஜாவு என்பது பிரெஞ்சு சொல் என்றும் நாம் பார்க்கும்  சில விடயங்கள் ஏற்க்கனவே பார்த்துள்ளோம் ஏற்க்கனவே இதைப்பற்றி பேசியுள்ளோம் ஏற்க்கனவே இந்த  விடயம்  நடந்துள்ளதே  போன்ற எண்ணங்களை தோற்றுவிக்கும் .இது அனைவருக்கும் தோன்றும் உணர்வு . அது பற்றிய முதலாவது பதிவு  முதலாவது  பதிவு   இதற்க்கு பலர் பல  தியரிகள் சொன்னாலும் பலவற்றின் தொகுப்பாக டச்சு மனோதத்துவவியலாளர் ஹெர்மன் ஸ்னோ   (Hermon Sno ) ஒரு விளக்கத்தை தொகுத்து வெளியிட்டிருந்தார் .நாம் பார்த்த  முப்பரிமாண தோற்றங்களை உடைந்த காட்ச்சிகளோ நிகழ்வுகளையோ நம் மூளை  தொகுக்க முற்ப்படும் . காரணம் நாம் உணரும் பல விடயங்கள் மீண்டும் பல வழிகளிலேயே பல புலன்கள் மூலம் மூளையை வந்தடைகிறது .   அதாவது நாம் பார்த்த சத்தமோ அல்லது மனமோ மீண்டும் மூளையால் தொகுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. ஆனால் இது சில செக்க்கன்களே நீடிக்கும் . இதை உணர்ந்திருப்பீர்கள் . வேறு ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக சில வேளைகளில் நாம் ஏற்க்கனவே உணர்ந்த நிகழ்வுகளில் சிறு உணர்வுகள் அதிர்வுகள் மீண்டும் நினைவை கொண்டு வரும் என்பதே . சில வேளைகளில் நீங்கள் ஒரு பழைய காரை ஓட்டி  செல்லும் போது

கனவுகள் - காரணங்கள்

Image
கனவுகள் இதுவரை யாராலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட முடியாத ஒன்று . விஞ்ஞானிகளின் கருத்துப்படி மூளையில் ஏற்ப்படும் மாற்றங்களே கனவுகளுக்கு காரணம் எனப்படுகிறது . இருந்தாலும் சரியாக இதுவென கணித்து கூற முடியாத இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கும் விடயம் தான் கனவுகள் . முதலாவது  பதிவு    ஆனால் கனவுகள் பற்றிய  தொடர் ஆய்வாளர்கள் ஒவ்வொரு கனவும் எமது எண்ணங்களின் வெளிப்பாடு எனவும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்களும் கொண்டன என கண்டறிந்துள்ளனர் . பொது இடத்தில் ஆடை இல்லாமல் இருத்தல்  நாம் பொது இடங்கள் பாடசாலை அல்லது வேலைத்தளத்தில் இருப்போம் திடீரென ஆடை இல்லாதது போல உணர்வு தோன்றும் . இவ்வாறான கனவுகள் நாம் எமது நிஜ வாழ்க்கையில் இருந்து எதையாவது  மறைக்க முற்ப்படும் போது இவ்வாறான கனவுகள் தோன்றும் . நாம் அந்த விடையத்தை மறைக்க இன்னும் தயாராகவில்லை என உள் மனதில் எண்ணம் தோன்றும் போதும் அவ்வாறான கனவுகள் தோன்றும் . விழுந்துகொண்டிருப்பது போல கனவு ... . ஏதாவது உயரமான இடத்திலிருந்து விழுவது போல கனவு தோன்றும் ,திடீரென எழுவோம் . ஏதாவது பிரச்சனைகள் தோன்றும் போது அதை எம்மால் தடுக்க முடியாவிட்டா

ஒக்டோபஸ்...

Image
இந்த உலக கோப்பையில் ஸ்பெயின் வெல்லும் என கூறிய அக்டோபஸ் மிகவும் பிரபலம் . இந்த விடயம் அந்த அக்டோபஸ்க்கு தெரியுமோ தெரியா ? இருந்தாலும் இந்த  அக்டோபஸ்கள் பற்றி உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் . அதனால் உங்களோடு பகிர்கிறேன் . உங்கள் மனைவி உங்களை விட பல மடங்கு பெரியவளாக இருந்தால் எப்படி இருக்கும் . ஆனால் அக்டோபஸ் அதை பற்றி கவலைப்படுவதில்லை . ஆண் அக்டோபஸ் சில சென்டி மீட்டர்கள் நீளமும் சில கிராம் நிறையையுமே கொண்டிருக்கும் . ஆனால் பெண் அக்டோபஸ் இறுதி 6 அடி (2 மீட்டர்கள் ) வரை வளரும் . கிட்டத்தட்ட 100 பவுண்ட்ஸ்(45 .4 கிலோ கிராம் ) எடை கொண்டவை . அதாவது ஆண் அக்டோபஸ் விட பெண் அக்டுபஸ் 40 ,000 மடங்கு நிறை கொண்டது . Blue-ringed octopus male and female mating (இனப்பெருக்கம் )_ ஆனால் நல்ல வேளை முழு தொடர்புடன் இனப்பெருக்கம் நடப்பதில்லை . விசேடமாக வடிவமைக்கப்பட்ட கை போன்ற அமைப்பில் காணப்படும் நீண்ட வாழ போன்ற அமைப்பினூடு விந்துகளை பெண் அக்டோபசிடம்   ஒப்படைக்கும் . pilow அக்டோபஸ் ,அக்டோபோடா(octopoda ) எனும் வகைகளிலேயே  சிறந்த உதாரணம் . அவைகள் ஒரு கிராமில் இருந்து நான்கு கிர

பொது இடத்தில் , வேலைத்தளத்தில் கூச்சம் இல்லாமல் பேசலாம்

Image
பேசுவதற்கு  கூச்சமா ?அதுவும் ஒரு சமூகத்தில், வேலை பார்க்கும் இடங்களில் அல்லது முதன்முதலாக ஒரு மேடையில் ஏறி பேசுவதோ அல்லது ஒரு குழு முன்பாக கதைப்பதற்கோ பலருக்கு தயக்கம் உண்டு .. ஆனால் இவற்றை இல்லாமல் செய்யலாம் . முன்னோர்கள் உரைகளை பின்பற்றல்  நீங்கள் எதிர் காலத்தில் மேடையில் ஏறி  பேசுவதற்கு  வாய்ப்பு கிடைத்தால் கூச்சம் வேண்டாம் . மிகத்திறமையான பேச்சாளர்களை இப்போதே பின்பற்றுங்கள் .அவர்களின் நடை உடை பாவனை ,கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் என்பவற்றை கவனியுங்கள் .. அப்பிள் நிறுவன CEO வின் பல்கலைக்கழக உரை .- ஸ்டீவ் ஜொப்ஸ்  கூர்மையான கவனம் - நிலைத்திருத்தல்  சுய நினைவை நிலை நிறுத்த வேண்டும் . ஒரு பொது அறையில் பேசும் போது அனைவரும் உங்களையே கவனிப்பார்கள் என்பதை ஞாபகப்படுத்தவேண்டும். நீங்கள் சிறப்பாக உள்ளீர்கள் என உறுதிப்படுத்த வேண்டும் மிகவும் சௌகரியமாகவும் தொழிலாளியாகவும்(proffesional ) உடை அணிவது முக்கியம் . கருவை உள் வாங்கல்  என்ன  பேசப்போகிறோம் என்பதை சரியாக விளங்கி கொள்ள வேண்டும் . தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் . எண்ண பேசப்போகிறோமோ அதை  உள் வாங்கி அதன் திட்டத்தை க

இந்தியா - இந்தியனின் பெருமை

Image
இந்தியாவின் சிறப்புகள் இந்தியர்களுக்கே தெரிவதில்லை . இல்லாவிட்டால் உலகத்தின் அனைத்து மர்ம முடிச்சுகளுக்கும் விஞ்ஞான விளக்கங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் இந்து சமயத்தை பிற மதங்களிடமோ அல்லது இந்து நாகரிகத்தின் பள்ளத்தாக்கை பாகிஸ்தானிடம் தாரை வார்த்து கொடுத்திருப்பார்களா ? என்ன என்று திட்டுவது என்று தெரியவில்லை ..  இருந்தாலும்  இந்த பதிவில் இந்திய நாட்டின் சிறப்புகள் பற்றி கொஞ்சம் பகிரலாம் என்று எண்ணுகிறேன் . கூடுதலான இந்து சமய ஏடுகளை திருடிக்கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் அதன் சிறப்பு அறிந்தவர்கள் .  "நாம் இந்தியர்களுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறோம்.... எங்களுக்கு எங்களை எண்ண கற்றுக்கொடுத்தவர்களே அவர்கள் தான்" - ஐஸ்டின்   எங்களுக்கு பெறுமதி சேர்க்கும் பூச்சியத்தை கண்டு பிடித்த நாடு இந்தியா.  ஆர்யபட்ட எனும் இந்திய கணிதவியலாளர் தான் இதற்க்கு சொந்தக்காரர் . கிறிஸ்துவுக்கு முன் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தசமதான முறை அறிமுகப்படுத்தப்பட்டது இந்தியாவில் ..   இந்திய கணிதவியலாளரான புத்தயானா (  800 BCE)) தான் பைதகரஸ் குறியீட்டை கண்டு கணித்தவர்  . மற்றும் அதன் விளக்கத்தை அளித்தவர் . இ

வைரம் (தமிழ்) முத்து பிறந்த நாள் - வைரமுத்து

Image
வைரமுத்து தமிழுக்கு கிடைத்த முத்து என்றே சொல்லலாம் . வைரமுத்து வந்த பின்பு  தான் கவிதை என்ற முறை மாறி பாடலுக்கேற்றவாறு வரிகள் எழுதும் முறைமை வந்தது . இன்று அவரின் பிறந்த நாள் ... ஜூலை  13 பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ....... இளையராஜாவின் மிக மிக அருமையான இசை அமைப்பில் உருவானா சுஜாதா அவர்களே பீதொவனை மிஞ்சும் இசை என பாராட்டிய  பாடல் இது "ஒரு பொன் மாலை பொழுதே" அவரது முதல் பாடல் . இந்த முதல் பாடலே அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது . அதிலும் இரவை பற்றிய இயற்க்கையுடன் கூடிய வர்ணனை எந்த காலத்தை சேர்ந்தவர்க்கும் பிடிக்கும் . அது போன்ற ஒரு உச்ச  கற்ப்பனை  பிரமிக்க வைக்கும் . " வான மகள்  நானுகிறாள் " வேறு உடை பூணுகிறாள் "  என்ற  இரவின்  வருகையை வர்ணிக்கும் பாடல் மிகவும் பிடிக்கும். " வானம்   எனக்கொரு   போதி   மரம் , நாளும்   எனக்கது   சேதி   தரும்" .. போன்ற வரிகள் முதல் பாடலிலேயே அவரை தூக்கி நிறுத்தியது . பின்னர் ரஹ்மானுடன் இணைந்த போது ரஹ்மான் பாடல்கள் வெற்றிக்கு வைரமுத்து மிக துணையாக இருந்தார் . வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் மிக அருமையான வ