Skip to main content

கனவுகள் - தொடரும் மர்மம் - தகவல் அறிவோம் 2

கனவுகள் எவராலும் அறியப்படாத ஒன்று . இன்னும் ஆராய்ச்சி தொடர்கிறது .  ஆனால் எம்  வாழ்வில் நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் ஒன்று .
முதலாவது  பதிவு மரணம்  - கனவு   

கனவு பற்றிய தகவல்கள் 


1 . கூடுதலான கனவுகள் 5 தொடக்கம் ௨௦ நிமிடங்கள் வரையே நீடிக்கிறது ....


2 . முன்னர் நம்பியது போல கறுப்பு வெள்ளையில் மட்டும் கனவு தெரிவதில்லை .. 


3 . ஒவ்வொருவரும் ஒரு இரவில் பல தடவைகள் கனவு காண்கிறோம் ஆனால் எமது ஆயுளில் நாம் காணும் கனவு நீளம் 6 வருடங்கள்  (கால நேர அளவில் மொத்தமாக )

4 .குருடர்கள் தொடுதல் , நுகர்தல், ஒலி போன்ற வடிவுகளில் கனவை உணர்வார்கள் 


5 .   REM உறக்க நிலை அல்லாத போது யானை எழுந்து நிற்கும் . REM உறக்க நிலையின் போதே சரிந்து படுக்கும் . (வேறு விலங்குகளும் )

REM உறக்க நிலை பற்றி கீழே பார்த்துள்ளேன்

ஆனால் கனவுகள் என்ன ? அன்றாடம் நடைபெறும் விடயங்கள் வழமை போலவே உறக்கத்திலும் மூளை செயல்ப்படுத்துகிறதா ? அல்லது மூளையின் எழுந்தமானமான  செயல்ப்பாடா ? அல்லது  கனவுகளால் எமது வாழ்வின் பிரச்சனைகளுக்கு முடிவு  கிடைக்குமா ?   நடக்க இருக்கும் நிகழ்வுக்கு முன்னெச்சரிக்கையா?  என பல கேள்விகள் எழும் .

ஆனால் கனவை பற்றி முதன் முதலாக Sigmund Freud. என்பவர்   ஆராய்ந்த   போது  கனவுகளாக வெளிப்படுவது யாதெனில் ,  நாம் எண்ணும் எண்ணங்கள் இந்தசமூகத்தின்  கட்டுப்பாடுகளுக்குள்  நிறைவேற்றமுடியாவிட்டால் அது கனவுகளாக வெளிப்படும் என கூறியிருந்தார் . அதாவது நாம் ஆசைப்படும் என்ன்னகள்  வேறு காரணிகளால் தேக்கி வைக்கும்  போது அவை கவவில் வெளிப்படும் என்பது அவர் கருத்து . 




உதாரணமாக   அவர் கூறிய கருத்து " உதாரணமாக குகையினூடு ரயில் செல்வது போல கனவோ ஒரு பொருள் செல்வது போல கனவோ தோன்றினால் அது உடலுறவை வெளிப்படுத்துவதாகவே இருக்கும் .. 


"Sometimes, a cigar is just a cigar." என்று ஒரு கருத்தையும் அவர் முன் வைத்தார் .  அதாவது சில வேளைகளில் வேறொரு நிகழ்வை கனவுகள் பிரதிபலிப்பதில்லை . சில வேளைகளில் சிகரெட் என்றால் அது சிகரெட் தான் ... 


ஆனால் அவரை தொடர்ந்த "Carl Jung " என்பவர் அவரின் எண்ணங்களை தொடர்ந்தாலும் தனது சொந்த சிந்தனைகளையும் முன் வைத்தார் . அவர் கனவுகளின் மூலம் தேவைகளில் இருந்து உதிக்கிறது எனவும் அவை பிரச்சனைகளை தீர்க்கிறது எனவும் கூறியிருந்தார் . 


ஆனால் அவர்களை தொடர்ந்த அலன் ஹோப்சன் போன்றோர் கனவுகள் வெறும் இலத்திரனியல் மாற்றங்களால் உருவாவதே என கூறியிருந்தனர் . 


நாம் உறங்கும் போது உறக்கத்தில் 5 படி நிலைகளை கடக்கிறோம் .






1 . உறக்கத்தில் இருந்து எழக்கூடிய நிலை .. இலேசான  உறக்கம்


2 .ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லல் 


3 மற்றும் 4 ஆழ்ந்த உறக்க நிலை 


5  90 நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று 4 ஆவது நிலையை தாண்டி 5 ஆவது      நிலைக்கு செல்கிறோம் . அது தான் REM நிலை . அதாவது கண் அசைவு நிலை . 


1953 இல் தான் இந்த REM  கண்டு பிடிக்கப்பட்டது . கண் அசைவுகள் இடம் பெறும் எனவும் இதன் போது இரத்த  அழுத்தம் இருதய துடிப்பு போன்றன அதிகமாக இடம் பெறுவதாகவும் கூறப்படுகிறது .   


REM உறக்க நிலை பற்றியும் கனவுகள் பற்றி அறியாத வேறு விடயங்கள் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம் .. 


மறக்காமல் ஓட்டை போட்டு ஆதரவு தாருங்கள் 

Comments

NIRANJAN said…
நல்ல விடயம் நன்றி

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...