இயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு "மன திடம்" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு. எழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல்,