Skip to main content

Posts

Showing posts from October, 2016

ரசனை எனும் ஒருபுள்ளியில் இரு இதயம்

உன்னுடன் இருக்கையிலே நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே இதுவரை நானும் பார்த்த நிலவா இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா! - நா.முத்துகுமார்  உதிக்கிற நிலவு தினமும்தான் உதிக்கிறது. அதற்குத் தினமும் புதிய முகம் தரக்கூடியது யார்? காதல் பற்றிய எண்ணம் சிந்தையில் எழ ஆரம்பித்த காலத்திலிருந்தே அது 'ரசனை'யை விட்டு விலகி நிகழ்ந்துவிடமுடியாது என்கிற எண்ணமும் இயல்பாகவே  எழுந்தது. இரசனைகள் இரு உயிர்களுக்கிடையேயான காதலின்   ஆதாரப் புரிதலையும் அழகியலையும் மென்வெப்பத்தையும் 'தொடர்ந்து' தூண்டவல்லது என்பதை உறுதியாக நம்புகிறேன். காரணம், 'நுண்ரசனை' என்பது வெறுமனே பொதுவான ரசனை அடிப்படையில் எழுவது இல்லை. உதாரணமாக, "எனக்கு இளையராஜா பிடிக்கும். உனக்கு ரஹ்மான் பிடிக்கும்" என்கிற பொதுவான முடிவினை மட்டும் வைத்து இருவரும் ரசனை வேறுபாடு உடையவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.உண்மையான நுண்ரசனை வேறுபாடென்று இதனைச் சொல்லிவிடமுடியாது. இந்த இருவரின் படைப்புகளையும்  நுண்ரசனைக்கு உட்படுத்துவதில் எந்தளவுக்கு ஒருவருக்கொருவர் மாறுபடுகிறோம் அல்லது ஒத்திசைகிறோம் என்பதில்தான் ரசனையின் ஆதாரப்புள்ளியா