வாழ்க்கை பரிசுகள்

வாழ்வில் பரிசுகள் வெறும் அட்டைகளிலும் பொருட்களிலும் இல்லை அவை மனது சம்மந்தப்பட்டவை மனதையே பரிசாக கொடுக்க வேண்டும் . ஆனால் ஒரு ரூபாய் செலவில்ல்லாத பரிசுகள் இவை ...


கிரகித்தல் பரிசாக 
கூறுவதை முதலில் வேறு எந்த தலையீடும் எதிர் சிந்தனைகளும் எண்ணமும் தோன்றாது கிரகிக்க வேண்டும்

உறுதுணை பரிசாக 
கட்டிபிடித்தல் , முத்தம் , தோளில் தட்டி கொடுத்தல், கைகளை இறுக பிடித்தல் போன்ற வழிகளில் பாசத்தை உற்ச்சாகத்தை வெளிப்படுத்தல் .

சிரிப்பு பரிசு
 நகைச்சுவையான வீடியோக்கள் , கதைகள் போன்றவற்றை பரிமாறல் .. அதன் அர்த்தம் "உன்னுடன் சேர்ந்து  சிரிக்க வேண்டும் " என்ற  பரிசு  . 


எழுத்தில் நன்றி 
செய்த உதவிக்கு ஒரு நோட்டில் "உதவிக்கு நன்றி" என்று எழுதி கொடுக்கலாம் .அது இறுதி வரை அவர்கள் கையில் இருக்கும் ...

பாராட்டு பரிசு 
மிகவும் அருமையான வேலை செய்தீர்கள் , இந்த உடையில் அழகாக உள்ளீர்கள் என சிறு உற்சாகமும் பாராட்டும் தெருவிக்க வேண்டும் ..முக்கியமாக சிறு பிள்ளைகளுக்கு  பாராட்டு  என்பது  மிக முக்கியம் ..

தோள் கொடுத்தல்  
துன்பமான நேரங்களில் மற்றயவர்களுடன் இருந்து அவர்களுக்கு தோள் கொடுத்தல் .

உற்சாகம் பரிசு 
நன்றிகள் தெருவித்தல் , புன்சிரிப்புடன் விடை பெறல் , பாராட்டுதல்
=================================================================================
நீங்கள் ஏழையாக பிறந்தது உங்கள் தவறல்ல
ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு ...- பில் கேட்ஸ்  

நீங்கள் எந்த காலத்தில் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கையில் பயனிக்கிறீர்களோ,
அப்போது உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள  என்று  .  - சுவாமி விவேகானந்தா 

வெற்றி பெற மூன்று வழிகள் - ஷேக்ஸ்பியர்  
1 . மற்றயவர்களை விட அதிகமான சிந்தி
௨. மற்றயவர்களை விட அதிகமாக வேலை செய்
3 . மற்றையவர்களை விட குறைவான எதிர்பார்ப்பை வைத்துக்கொள்

நீ வெற்றி பெற்றால் விளக்கம் தேவையில்லை
தோற்றால் விளக்கம் கொடுக்க நீ அங்கே இருக்கவே கூடாது - ஹிட்லர் 


வெற்றி என்பது எப்போதும்  முதலாவது இடத்தை குறிப்பது அல்ல ...
நீங்கள் ஒவ்வொருமுறையும் முதல் செய்ததை விட சிறப்பாக செய்துள்ளதை சுட்டி காட்டுவதே ..- போனி ப்ளேர்

தாம் எந்த தவறும் யாரும் செய்யவில்லை என்று கூறினால்
அவர்கள் புதிதாக முயற்ச்சி  செய்யவில்லை என்று தான் அர்த்தம் ..ஐந்க்ச்டையின்

Comments

ஆர்வா said…
அருமை.. அதிலும் பில்கேட்ஸ் சொன்னது ஹைலைட்

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்