காதல், காமம் சார்ந்த துணைகளைக் குறுகிய காலத் துணையாகத் (Short term relationship) தெரிவு செய்யலாமா? அல்லது நிறையத் துணைகள் வைத்துக்கொள்ளலாமா? அதை எப்படித் தெரிவு செய்யவேண்டும்? அல்லது ஓரிரவில் நிகழும் காமத்தை (One night stand) எப்படித் தெரிவுசெய்வது? Evolutionary psychology என்ன சொல்கிறது? நிறையப்பேருக்கு, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உறவில் மட்டுமே நாட்டம் இருந்தாலும், இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகும் என்கிற ஆர்வமும் இருக்கும். அவர்களும் இதைப் படிக்கலாம். பெரும்பாலும் குறுகிய காலத் துணைகள் என்றால், ஓரிரவில் ஒருவருடன் காமத்தைக் கடந்து( One night stand), அவருடன் அதற்குப் பின்னால் எந்தவிதமான உறவுமோ தொடர்புமோ வைத்துக்கொள்ளாமல் இருப்பதே என்கிற கருத்தும் நிலவுகிறது. குறுகிய காலத் துணை என்றால் அது மட்டும் இல்லை. ஆனால், 'One night stand' ம் அதில் உள்ளடக்கம் என்று வைத்துக்கொள்ளலாம். குறுகிய கால உறவு என்றால், இருவர் சந்தித்து, ஓர் அறைக்குள்ளேயோ வேறெங்கோ சென்று காமம் வைத்துக் கொள்வதும் உடலால் இன்பம் அடைவதும் அந்த ஒரு நாளின் பின்னால் அதை விட்டு விலகுவதும் மட்டும் இல்லை. குறுகிய காலத் துணையில்