Skip to main content

Posts

Showing posts from September, 2013

கொழும்பு : பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி

கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகிய 'கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி'யில் இந்தத் தடவையும் கிட்டத்தட்ட நானூறுக்கும் மேற்ப்பட்ட  புத்தக நிலையங்கள். 15 ஆவது தடவையாக இந்த பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி BMICH இல் நடைபெறுகிறது.இந்தக் கண்காட்சி ஒரு வாரத்துக்கு நடைபெறும். முதல் நாளிலேயே ஒரு இலட்சம் பார்வையாளர்கள் வந்து போனார்கள் என ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.இரண்டாவது நாள் ஞாயிறு ஆகையால் அதிக கூட்டம்.நீங்கள் செல்லும் போது முதலிலேயே Hall A க்குச் சென்று புத்தக நிலையங்கள் தொடர்பான விபரம் அடங்கிய துண்டை பெற்றுக்கொண்டால் இலகு.அல்லது முன்னாலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த முறை சரியாகத் தமிழ்ப் புத்தக நிலையங்களை இனங்காண முடிந்தது. தமிழ்ப் புத்தக விரும்பிகளுக்கு ஏற்ற நிறைய புத்தகங்கள் ஜெயா புக் சென்டரிலும்(Hall -A : A-47, 51- 58),பூபாலசிங்கம் புத்தகசாலையிலும்(A - 25,27) மற்றும் புக்வின்னிலும்( Hall J - 400) கிடைக்கிறது. ஜெயாவில் அதிகமாக ரமணிச்சந்திரன்,பா லகுமாரன்,இந்திரா பார்த்தசாரதி,சுஜாதா புத்தகங்களை காணக்கிடைத்தது.  பூபாலசிங்கத்தில் எஸ் ராமகிருஷ்ணன் புத்தகங்கள்

சில கணங்கள் : அகம்புறம்

ஒரு சில புத்தகங்களை, சுவாரசியமான துப்பறியும் கதையைப் படிப்பது போல  எடுத்த எடுப்பிலேயே படிச்சு மூடி வைச்சிட முடியாது. வாழ்க்கைல எல்லாத்தையுமா ரசிச்சுடுறோம்.நம்முடைய வேகம் அப்படி. அதே வேகத்தை இரசனையான பகிர்வுகளைக் கொண்ட புத்தகங்களின் பக்கங்கள் மேல் காட்ட முடியுறதில்லை. எதை எப்படி வாசிக்கவேண்டுமென ஒரு சில பக்கங்களை தாண்டிய பின் புத்தகங்களே நமக்குச் சொல்லிக்கொடுக்கும்.ஒரு சில புத்தகங்களை   ஒரு நாளைக்கு ஒரு சில பக்கங்கள் எனப் படிப்பது இன்பம்.  அப்படி ஒரு புத்தகம் தான் வண்ணதாசன் அவர்கள் எழுதிய அகம்புறம்.கடற்கரையோரமாக நடந்து போவதற்கும்,கடலை சலிக்காமல் நின்று பார்த்துக்கொண்டிருப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.சில கணங்கள் மெதுவாகவே நகர வேண்டும்.பக்கங்களும் அப்படித்தான்.இந்த 'மெதுவாக' என்பது போகப் போக இயல்பாகிவிடும்.வாழ்க்கையின் சில கணங்களை மெதுவாக்கிவிடும் இயல்பு இரசனைகளுக்கு உண்டு.குழந்தையைப் பார்க்கும் போது சட்டென்று விரிகிற புன்னகை மாதிரி. புத்தகத்தை இன்னும் படித்துமுடிக்கவில்லை.இப்போதைக்கு முடிப்பதாகவும் உத்தேசம் இல்லை. அந்தப் புத்தகத்திலிருந்து இதுவரை பகிர்ந்துகொண்ட ஒ