ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுச் சில நாட்களே ஆகிறது. இந்நிலையில், இலங்கையின் முக்கிய பிரச்சனையான இனப்பிரச்சினை தொடர்பில் அரசிடமிருந்து எவ்வாறான பதில்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது என்பதனை ஆராய்வது அவசியமாகும். சாதகமான ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருக்கிற வேளையில் இனப்பிரச்சனை தொடர்பில் சர்வதேசம் என்ன அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது எனத் தெரிந்துவைத்திருப்பதும் அவசியம். இனப்பிரச்சனையும் உள்நாட்டு அரசியலும் ஜனவரி 17ல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தபின்னரும்கூட உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தது. இதன் காரணமாக, இனப்பிரச்சனை தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளையோ, கருத்துகளையோ யாரும் முன்வைக்கவில்லை. எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஒருவித புரிந்துணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டது. வெளிப்படையான பேச்சுகளை முன்னெடுத்திருந்தால், அவை தென்னிலங்கையில் மிகப்பெரும் அரசியற் பிரச்சாரமாக உருவெடுத்திருக்கும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைகூட மார்ச்சில் வெளியாகவிருந்த மனித உரிமை அ...