நீங்கள் வரலாற்றுப் படங்களிலும் அதன் காட்சியமைப்பிலும் திளைப்பவராக இருந்தால் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம். சின்ன வயதில் மகாபாரதக் கதைகளைப் படித்து, குருச்சேத்திரப் போரைக் கற்பனையில் நிகழ்த்திப் பார்த்த அனைவருக்கும் இந்தப் படம் நிச்சயம் மிகப் பிடித்தமானதாக அமையும். எங்கள் வரலாற்றிலும் சூப்பர் ஹீரோக் கதைகள் உண்டு. அதைக் கற்பனை கலந்து நேர்த்தியான 'பிரமாண்டம்' கொடுக்க யாரும் முன்வர மாட்டார்களா என்கிற ஏக்கம் பலருக்கும் இல்லாமல் இல்லை. 'நான் ஈ' என்கிற காதல், fantasy கலந்த திரைப்படத்துக்குப் பிறகு ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கிற படம்தான் 'பாகுபலி'. தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்துக்காகக் கிட்டதட்ட மூன்று வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது ராஜமௌலியின் பதினோராவது படம். 'பாகுபலி' ஒரு கற்பனை கலந்த வரலாற்றுக் கதையாக அமைகிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் முதலாவது பாகம் தான் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா,